Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    April 2023
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Mar    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நீரிழிவு நோய் தொடர்பான பிரச்சினைகளும் தீர்வுகளும்

கேள்வி: எனது வயது56 ஆகும். நான் மெற்போமின் மருந்தை (500 mg) நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த கடந்த 5வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றேன். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குருதிப்பரிசோதனைகளின்படி எனது நீரிழிவு நோய்க்கட்டுப்பாடானது சிறந்த முறையில் உள்ளதாக மருத்துவர் கூறியிருந்தார். எனது உறவினர்கள் சிலர் மெற்போமின் பயன்படுத்தினால் சிறு நீரகம் பாதிக்கப்படுமெனக் கூறுகின்றனர். இதுபற்றி விளக்கிக் கூறவும்?

பதில்: இது மிகவும் அவசியமானதொரு வினாவாகும். எமது மக்களிடையே நீரிழிவு நோய் தொடர்பான பல பிழையான எண்ணக்கருக்கள் உள்ளன. அவற்றில் இது மிக முக்கியமானதொன்றாகும். உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதற்படியாக பாவிக்கின்ற (First line) நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மருந்து மெற்போமினே ஆகும். இந்த மருந்தானது நீரிழிவு நோயைச் சிறந்த முறையில் கட்டுப்படுத்துவதோடு, அதனால் ஏற்படுகின்ற நீண்டகாலப் பிரச்சினைகளையும் குறைக்கின்றதென்பதை பல ஆய்வுகள் காட்டியிருக்கின்றன. இந்த மருந்தானது நீரிழிவுநோய் கட்டுப்பாடின்றிப் போகும் போது ஏற்படுகின்ற சிறுநீரகப்பாதிப்பை உண்மையில் குறைக்கின்றது. நீரிழிவு நோயாளி யொருவருக்கு குறிப்பிட்ட காலத்துக்கொரு முறை குருதிப்பரிசோதனை (Serum Creatinine) மேற் கொண்டு சிறுநீரகப் பாதிப்பு உள்ளதா இல்லையா எனக்கண்டறியப்படுவது வழமையாகும். இவ்வாறு சிறுநீரகப் பாதிப்பு குறிப்பிட்ட அளவில் இருக்கும் போதுமாத்திரமே மருத்துவரானவர் மெற்போமின் மருந்தை குறைக்கவோ நிறுத்தவோ வேண்டியேற்படுகின்றது. எனவே மெற்போமின் பற்றிய தப்பபிப்பிராயத்தை களைவது மிகவும் அவசியமானதொன்றாகும்.

கேள்வி: எனது மகனின் வயது 16 ஆகும். அவரது உடல் நிறையானது கூடுதலாக இருப்பதோடு கழுத்துப்பகுதியிலும் கறுப்புநிறமான படைபோன்று இருக்கிறது. எனக்கும் எனது கணவருக்கும்நீரிழிவு நோயானது உள்ளது. இது பற்றி ஆலோசனை கூறவும்?

பதில்:கழுத்துப்பகுதியில் கறுப்புநிறமான படையானது காணப்படுவதை. A canthosis nigricans என்று கூறுவார்கள். இது உடலில் இன்சுலினுக்கு எதிர்ப்புநிலை (Insulin resistance) ஏற்படுவதன் அறிகுறியாகும். தவறான உணவு மற்றும் அப் பியாசமற்ற வாழ்க்கை முறை என்பவற்றால் உடற்பருமன் அதிகரித்துச் செல்லும் போது இவ் வாறான நிலமை ஏற்படுவது வழமையாகும். இவ்வாறு ஏற்படுபவர்களுக்கு நீரிழிவு நோய் மற் றும் metabolic syndrome எனப்படுகின்ற குருதி அழுத்தம், கொலஸ்திரோல் என்பன அதிகரிக்கும் நிலையும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருக்கும்போது குழந்தைகளுக்கு அது ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகும். எனவே, உங்கள் மகனானவர் இன்று முதல் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பவற்றை மேற்கொண்டு உடற்பருமனைக் கட்டுப் படுத்தவேண்டியது மிக அவசியமாகும். இதைவிட வைத்திய ஆலோசனையைப் பெற்று மேலதிக பரிசோதனைகளை (குருதியிலுள்ள குளுக் கோஸின் அளவு,குருதி அமுக்கம், கொழுப்பின் அளவு ஹோர்மோன்கள்) மேற்கொள்வதும் அவசியமானதாகும்.

கேள்வி: எனது வயது 36 ஆகும். எனக்கு நீரிழிவு கொலஸ்திரோல் என்பன உள்ளன. எனது நீரிழி வானது கட்டுப்பாடற்று இருப்பதாக மருத்துவர் கூறுகின்றார். எனக்கு சில காலமாக தாம்பத்திய உறவில் பிரச்சினை இருக்கின்றது. எனது ஆண்குறிவிறைப்படைவது குறைவாக இருப்பதை சில காலமாக உணர்ந்து வருகின்றேன். இதுபற்றி விளக்கம் தரவும்?

பதில்: நீரிழிவு நோயானது கட்டுப்பாடற்றுச் செல்லும் போது உடலின் பல அங்கங்கள் சிறிது சிறிதாக செயலிழக்க நேரிடுகின்றன. உடலின் பெரிய குருதிப் குழாய்களில் ஏற்படுகின்ற மாரடைப்பு பக்கவாதம் போன்றவையும் சிறிய குருதிக் குழாய் களில் ஏற்படுகின்ற கண்பார்வை குறைதல், சிறு நீரக செயலிழப்பு நரம்புகள் பாதிப்பு போன்ற வையும் இதற்கு உதாரணங்களாகும். ஆண்குறி விறைப்படையாமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

நீரிழிவு நோயானது கட்டுப்பாடின்றி இருக்கும்போது இந்தப் பிரச்சினையானது ஏற்படுகின்றது. இதேபோல கொலஸ்திரோல், குருதியமுக்கம் அதிகரிப்பு உள்ளவர்களுக்கும் இது ஏற்படுகின்றது. அதிகரித்த மது புகை போதைப் பாவனையும் இதற்குக் காரணமாக அமைகின்றது. சில வகையான ஹோர்மோன் குறைபாடுகளும் உளவியல் தாக்கங்களும் சில மருந்து வகைகளும் கூட இதற்குக் காரணமாக அமைகின்றன. எனவே, உங்களுடைய நீரிழிவு நோயைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவது மிக அவசியமாகும். உங்களின் பிரச்சினைக்கு பலவகையான சிகிச்சை முறைகள் உள்ளபடியால் தயக்கமின்றி உங்கள் குடும்ப மருத்துவரை சந்தித்து தகுந்த ஆலோசனைகளையும் சிகிச்சை வழிமுறைகளையும் பெற்றுக் கொள்ளவும்.

கேள்வி: எனது வயது 60 ஆகும். எனக்கு நீரழிவு நோய் ஏற்பட்டு 15 வருடங்கள் ஆகின்றன. நான் மூன்று வகையான குளிசைகளை நீரிழிவுநோய்க் காக எடுத்து வருகின்றேன். மெற்போமின், கிளிக் கிளசயிட் மற்றும் சிற்றகிளிப்ரின்) நான் சிறந்த முறையில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்பவற்றை செய்து வருகின்றேன். எனினும் சிறிது காலமாக நீரிழிவுநோயானது கட்டுப்பாடற்று இருப்பதாக மருத்துவர் கூறுகின்றார். இன்சுலின் மருந்தை ஆரம்பிப்பது தான் நல்லதென எனது குடும்ப மருத்துவர் கூறுகின்றார். எனக்கோ இதனை ஆரம்பிக்க சிறிது தயக்கமாக உள்ளது. இது பற்றி ஆலோசனை வழங்கவும்?

பதில்: உங்களைப் போன்ற நீரிழிவு வகை 2 (Type 2 Diabetes) நோயாளரிலும் சிறிது காலத்தின் பின்னர் குளிசை மருந்துகளால் நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்த முடியாத நிலை (Oral hypogly Caemic failure) ஏற்படுகின்றது. அதாவது உங்களைப் போன்ற நீரிழிவு வகை 2 நோயாளரி லும் காலப் போக்கில் இன்சுலின் அளவானது படிப்படியாகக் குறைவடைய நேரிடுகின்றது. எனவே அந்தச்சந்தர்ப்பத்தில் குளிசைகள் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப் படுத்த முடியாமற் போய்விடுகின்றது. எனவே, உங்கள் குடும்ப மருத்துவர் கூறியதைப் போன்று இன்சூலின் மருந்தை ஆரம்பிப்பதே சிறந்ததாகும். இப்போது பல வகையான இன்சுலின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இருமுறை பயன்படுத்தும் இன்சுலின் மருந்தை உங்களுக்கு மருத்துவரானவர் பரிந்துரை செய்வார். இன்சுலின் ஆரம்பித்த பின்னர் மெற்போமின் தவிர்ந்த மற்றைய நீரிழிவு நோய்க்கான குளிசைகளை நிறுத்த வேண்டியிருக்கும். இது தொடர்பான மேலதிக விளக்கங்களையும் ஆலோசனைகளையும் உங்கள் குடும்ப மருத்துவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

கேள்வி: எனது வயது 28 ஆகும். எனக்கு நீரிழிவு நோய் உள்ளதென இரண்டு வருடங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது. எனக்குத் திருமண மாகி 6 மாதங்கள் கழிந்துள்ளன. நான் Metformin and Gliclazide ஆகிய குளிசைகளைப் பயன்படுத்திவருகின்றேன். எனது அண்மைய FBS அளவு 210 mg/dl ஆகவும் HDAC ஆனது 8.2 ஆகவும் உள்ளது. எனது நீரிழிவுநோயானது கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னரே கர்ப்பம்தரிக்க வேண்டுமென்று குடும்பமருத்துவர் கூறியிருந்தார். இது பற்றிய விளக்கத்தைக் கூறவும்?

பதில்: கர்ப்பம் தரிக்க விரும்புகின்ற பெண்ணொருவரின் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவானது மிகவும் கட்டுப்பாடாக இருப்பது மிகவும் அவசிய மானதாகும். உங்களுடைய குருதியிலுள்ள குளுக்கோசின் அளவானது அதிகமாக இருப்பதை இரண்டு பரிசோதனை முடிவுகளும் (FBS, HbAi) எடுத்துக்காட்டுகின்றன. ஒருவரது நீரிழிவு நோயின் கட்டுப்பாட்டை இறுதிமூன்று மாத சராசரி அளவு எடுத்துக்காட்டுகின்ற சிறந்த பரிசோதனை யானது HbAic ஆகும். கர்ப்பம் தரிக்க விரும்பு கின்ற பெண்ணொருவரின் HbAic ஆனது 6.5 க் கும் 7.0 க்குமிடையில் இருப்பதே மிகச் சிறந்ததாகும். குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு அதிகமாக இருக்கும்போது அதாவது நீரிழிவு நோயானது கட்டுப்பாடற்ற நிலையில் இருக்கும்போது பெண் ணொருவர் கர்ப்பம் தரித்தால் அவருக்கும் கருவிலுள்ள சிசவுக்கும் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.

எனவே, ஆரோக்கியமானவாழ்க்கைமுறைகளைக் கடைப்பிடித்து மருந்துகளைக் கிரமமாக உள்ளெடுத்து உங்கள் நீரிழிவைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதல் மிகவும் அவசியமாகும். உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிதேவையேற்படின் மருந்துகளை அதிகரிக்கவோ, மாற்றவோ வேண்டி ஏற்படலாம். உங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சில வேளைகளில் இன்சுலின் என்ற ஊசி மருந்தையும் பயன்படுத்த வேண்டி நேரிடலாம். கர்ப்பம்தரித்த பின்னர் நீரிழிவுக்கான குளிசைகளைப் பயன்படுத்த முடியாது. தேவை யேற்படின் வைத்திய ஆலோசனைக்கேற்ப மெற்போமின் மருந்தை மட்டுமே தொடரமுடியும். எனினும் அநேகமான சந்தரப்பங்களின் இன்சுலின் மூலமே நீரிழிவு நோயைக்கட்டுப்படுத்த வேண்டி யிருக்கும்.

மருத்துவர் M.அரவிந்தன்
நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி (ஹோர்மோன்) சிறப்பு வைத்திய நிபுணர்,
யாழ் போதனா வைத்தியசாலை.

Posted in கட்டுரைகள்
« நீரிழிவுள்ள தாய்மார்களுக்கு சில தகவல்கள்
நலம் தரும் அன்னாசி! »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com