நீரிழிவு வகை (II) நோயானது சில பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப மருந்து வகைகளை பரிந்துரை செய்வது மருத்துவர்களின் பொறுப்பாகும். எனினும் நோயாளிகளுக்கும் இந்த மருந்துகளின் அறிவு இருப்பது நோயை தொடர்ச்சியாக கட்டுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
நீரிழிவு நோய்க்கு பலவகையான மருந்துகள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. கிளிகிலசயிட் மருந்து எமது உடலில் சதையில் உள்ள இன்சுலின் சுரக்கும் கலங்களைத் துண்டி இன்சுலின் சுரக்கும் தன்மையை அதிகரிக்கவல்லதாகும். இந்த மருந்து வகையானது நீரிழிவைக்கட்டுப்படுத்தும் மருந்து சல்பனையில் யூரியா வகுப்பைச் சார்ந்ததாகும். மேற்படி வகுப்பில்முதலில்கண்டு பிடிக்கப்பட்ட மருந்துகளில் சில மாற்றங்கள் பக்க விளைவு களைக்குறைத்து இரண்டாவது தடவையாக பிறந்த மருந்துகளே இவையாகும்.
இதிலும் பலவகைப்படுத்தப்பட்டமருந்துகளான (Glipizid) கிளிப்பி சயிட் (Gliclazide) கிளிகில சயிட் (Glibenclamide) கிளி பென் கிளமயிட்போன்ற மருந்து வகைகளைக் குறிப்பிடலாம். இந்த சல்பனையில் யூரியா வகையைச் சேர்ந்த மருந்துகள் நேரடியாக சதையில் உள்ள இன்சுலின் சுரக்கும் B கலங்களுக்குள் சென்று அவற்றைத் தூண்டி உடனடியாக இன்சுலினை சுரக்கச் செய்து குருதியின் வெல்ல மட்டத்தை விரைவாக குறைக்க் கூடிய வாய்ப்புகள் உண்டு.அத்துடன் இம் மருந்தானது அளவில்சிறி தாகவும் செயற்பாட்டில் உடனடியாகவும் செயற் படவல்லது மேற்படிமருந்து பற்றியசில தகவல்கள்
- இந்த சல்பனையில் யூரியா வகையைச் சேர்ந்த கிளிக்கிலசயிட் (Gliclazide) மருந்தானது நேரடியாக சதையில் உள்ள இன்சுலின் சுரக்கும் கலங்களுக்குள் சென்று அதன் செயற் பாட்டைத்துண்டி இன்சுலின் சுரக்கும் அளவை அதிகரித்து, குருதியில் குளுக்கோசின் அளவை குறைக்கின்றது.
- கிளிக்கிலசயிட் இது சிறுதட்டுக்கள் ஒட்டிக் கொள்வதையும் குவிவதையும் தடுப்பதால், குருதி உறைதலை தடுக்கிறது. இதனால் குருதிக் குழாய்களில் கொழுப்பு படிதலில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.
- சில மருந்துகள் நீண்டநேரம் வேலை செய்யும். உதாரணம்: கிளிபென் கிளமயிட். இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு, அளவுக்கு அதிகமாக குறையலாம். இவை முதியோருக்கு ஏற்றதல்ல. ஆனால், கிளிக்கிலசையிட் போன் றவை (Short Acting) குறுகிய காலத்துக்கு வேலை செய்பவை ஒருநாளைக்கு இருதடவை பாவிக்கலாம்.
- இம்மருந்தானது அளவில் சிறிதானதாகவும் விரைந்து செயற்படக் கூடியதாகவும் இரப்பை அழற்சி போன்றவை குறைவானதாகவும் உள்ளது.
- இம்மருந்து பாவிப்பதால் குருதியில் (HbAl) இன் அளவை ஓரளவுக்கு (1.5 2.1 வரை குறைக்க முடியும்.
- குருதியில்குளுக்கோசின் அளவு அதிகரித்துள்ள ஒருவருக்கு மெற்போமின் (Mettomir) போன்ற மருந்துகள் பாவிக்கும்போது, ஒரிரு கிழமைக்கு பின்பே குருதியில் குளுக்கோசின் அளவு சாதாரண நிலைக்கு கொண்டு வரமுடியும். எனினும் இவ்வகை சல்போனை யூரியா மருந்துகள் உடனடியாக குருதியில் குளுக்கோசின் அளவை சீர் செய்யக் கூடியதாக இருக் கும். நீரிழிவை கட்டுப்படுத்தும் சல்பனையில் யூரியா (Sulfonylure) இரண்டாவது வர்க்க மான மருந்துகளைப் பாவிக்கும் நோயாளிகள் மருந்தை உடன் எடுத்த பின்பு உணவு உண் ணாமல் விட்டால் அல்லது உணவு உண்ண மறந்தால் அந்நோயாளிக்கு குருதியில் குளுக் கோசின் அளவு குறைவால் அவதியறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
- சிலருக்கு பைகுவனயிட் வகையைச் சேர்ந்த மெற்போமின் மருந்தையும் சல்பனையில் யூரியா வகையைச் சேர்ந்த (Gliclazide) கிளிக்கிலசயிட்மருந்தையும் சேர்த்துவைத்தியர் பரிந்துரை செய்து இருப்பார். இவர்களுக்கும் மருந்து அவசியம். உணவுக்குப் பின் இரவில் உறங்கப் போகும் முன்பு அவர்களின் குருதி யில் குளுக்கோசின் அளவு 100 mg. 1dL(5.6 mmol/L)க்கு குறையாமல் இருந்தால் இரவில் குருதியில் குளுக்கோசின் அளவு குறைவால் அவதியுறும் நிலைகளைத் தவிர்க்கலாம்.
- இரவில் குருதியின் குளுக்கோசின் அளவு குறையும் நோயாளிகளுக்கு அதிகாலை தலை யிடியுடன் சோம்பல், சக்தியில்லாத தன்மை மேலாடைகள் நனைந்திருத்தல் போன்றவைகள் அறிகுறியாக இருக்கும்
- Gliclazide (கிளிகிலசயிட்) எனும் மருந்து சல்பனையில் யூரியா (Sulfonylure) எனும் வகுப்பின் இரண்டாவது பரம்பரையைச் சேர்ந் தது. இது இன்சுலின் சுரக்கும் B கலன்களைத் துண்டி இன்சுலினைச் சுரக்க வைக்கும் தகைமைகொண்ட மருந்தாகும். தற்பொழுது சல்பனையில் யூரியாவின் மூன்றாவது பரம்பரை கிளிமிபிறயிட் (Glimipiride) வெளிவந்துள்ளது. இதலும் பலதரப்பட்ட விளம்பர வியாபாரப்பெயர்களுடன் வெளிவரத் தொடங்கியுள்ளது.
- நோயாளிகளுக்கு குருதியில் குளுக்கோசின் அளவை சடுதியாகக் குறைப்பதால் சிலருக்கு அதிக பசி உண்டாகும். இதனால் அடிக்கடி உணவுவகைகளை நாடவேண்டி ஏற்படலாம். இதனால் உடல் பருமன், நிறை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
- கர்ப்பிணிப் பெண்கள் இம்மருந்தைத் தவிர்த் தல் வேண்டும்.
- இம்மருந்தை ஒவ்வாத்தன்மை உடைய மருந்துகளான கருத்தடை மருந்துகள் (Oestrogen) (ஈஸ்றஜின்) அஸ்பிறின் (Asprin) போன்ற மருந்துகளுடன் சேர்த்து பாவிக்கும் போது வைத்தியரின் ஆலோசனையைப் பெறவேண்டும்.
- இந்த மருந்தை ஏனைய நீரிழிவு மருந் துகளுடன் சேர்த்துப் பாவிக்கலாம்.
ச.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்,
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ் போதனா வைத்தியசாலை