கர்ப்ப காலமும் தைரொயிட் பிரச்சினைகளும்
- தைரொயிட்தொடர்பான பிரச்சினையுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் . தரிக்க விரும்பினால் அவருக்கு எவ்வாறான ஆலோசனைகளை வழங்க விரும்புகிறீர்கள்?
பெண்ணொருவருக்குள்ளதைரொயிட் பிரச்சினை என்பது தைரொயிட் சுரப்பு குறைவாக இருக்கும் நிலையாகவோ அல்லது தைரொயிட் சுரப்பு அதி களவில் சுரப்பதால் ஏற்படும்பிரச்சினையாகவோ இருக்கலாம்.தைரொயிட்சுரப்புகுறைவாகவுள்ளேர்சோம்பல், அதிகநித்திரை, உடற்பருமன் அதிகரித்தல், மலச் சிக்கல், மாதவிடாயின்போது அதிகளவு வெளி யேறுதல் மற்றும் குளிர்தாங்க முடியாதிருத்தல் போன்ற குணங்குறிகளைக் கொண்டிருப்பர். இவர்களுக்கு கழுத்துப் பகுதியில் கழலையோ, விக்கமோ இருக்கலாம் அல்லது இல்லாதிருக் கலாம். இவ்வாறான குணங்குறிகளைக் கொண்டிருப்போர் தங்களது குருதியிலுள்ள தைரொக்ஸின் ஹோர்மோனின் அளவைப் பரிசோதித்துப்பார்ப்பது மிகவும் அவசியமாகும்.தைரொயிட்ஹோர்மோனின் அளவுகுறைவாக இருக்கும்போது தைரொக்ஸின் மருந்தை உள்ளெடுத்தல் மிக அவசியமாகும். மருத்துவர் ஆலோசனைப்படி தேவையான மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியும் நேரிடலாம். தைரொயிட் சுரப்பு குறைவான நோயுள்ள (Hypothyroidism) பெண்ககள கர்ப்பம் தரிக்க முன்னரேயே தங்களது
நோயைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இவ்வாறு இல்லாமல் கர்ப்பம் தரிக்கும்போது பலவகையான பிரச்சினைகள் ஏற்பட நேரிடலாம்.
இதேபோல தைரொயிட் சுரப்பு அதிகமாகச் சுரக்கும்போது படபடப்பு அதிகளவு வியர்த்தல்,
உடற்பருமன் குறைதல், அடிக்கடி மலம் கழித்தல் (வயிற்றோட்டம் போல) மாதவிடாயின் போது குருதி வெளியேற்றம் குறைவடைதல் அல்லது மாதவிடாய் தாமதமாதல் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்க முடியாமை போன்ற குணங் குறிகள் ஏற்படும்.இவ்வாறான குணங்குறிகள் இருப்போரும் தமது குருதிலுள்ள தைரொயிட் ஹோர்மோனின் அளவை வைத்திய ஆலோசனைப்படி பரிசோதித்துசிகிச்சையைப்பெற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.இவ்வாறான பிரச்சினையுடையோர் கழுத்தில் வீக்கத்துடனோ கண்கள் வெளித்தள்ளி பல வகையான கண் தொடர்பான பிரச்சினைகளுடனோ இருக்கலாம். இவ்வாறான தைரொயிட் சுரப்பு அதிகமாக சுரப்பதைக் கட்டுப்படுத்து வதற்கும் சிறப்பான மருந்து வசதிகள் கிடைக்கின்றன.இவ்வாறான நோயாளரும் கர்ப்பம் தரிக்க முன்னர் தமது நோயைக் கட்டுப்பாட்டி னுள் கொண்டுவருதல் மிகவும் அவசியமாகும். - தைரொயிட் சுரப்பு குறைவாகவுள்ள பெண்ணொருவர், கர்ப்பம் தரித்த பின்னர் அவருக்கு எவ்வாறான ஆலோசனைகளை வழங்க விரும்புகின்றிர்கள்?
தைரெயிட் சுரப்பு குறைவாகவுள்ள பெண்ணொருவர் தான் கர்ப்பமாகவுள்ளேன் என உறுதி செய்தடவுடனேயே (சிறுநீரில் HCG பரிசோதனை மூலம்) தனது தைரொக்ஸின் மருந்தின் அளவை 25Mg இனால் அதிகரித்து உள்ளெடுத்தல் அவசியமாகும். அத்துடன் உடனடியாக வைத்தியரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டியதும் அவசியமாகும்.கர்ப்ப காலத்தில் முதல் 12 வாரங்கள் சிசுவின் வளர்ச்சியில் மிகப் பிரதானமான பங்கை வகிக்கின்றன. இந்தக் காலத்திலேயே குழந்தையின் மூளை மற்றும் அவயவ வளர்ச்சியானது பிரதானமாக ஏற்படுகின்றது. எனவே குறிப்பாக இந்தக் காலகட்டத்தில் தேவையான அளவு தைரொக்ஸின் குளிசையை வைத்திய ஆலோசனைப்படி உள்ளெடுத்தல் அவசிய மாகும்.ஏனென்றால்கர்ப்பகாலத்தில்தைரொயிட் ஹோர்மோனின் அளவுகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. குருதியிலுள்ள தைரொயிட் ஹோர்மோனின் அளவைக் குறித்த காலத்துக்கொரு முறை பரிசோதித்து குளிசையின் அளவைத்தேவையேற்படின் மாற்றி உள்ளெடுத்தல் அவசியமாகும். தைரொயிட் மருந்தை தகுந்தளவில் எடுக்காதவிடத்து பிறக்கப்போகும் பிள்ளைக்கும் கர்ப்பவதிக்கும் பலவகையான பிரச்சினைகள் ஏற்படலாம். - தைரொயிட் சுரப்பு அதிகமாகவுள்ள பெண் னொருவர் கர்ப்பம் தரித்த பின்னர் அவருக்கு எவ்வாறான ஆலோசனைகளை வழங்க விரும்புகின்றீர்கள்?
இவ்வாறான நோயாளருக்குப் பொதுவாக Carbimazole என்ற மருந்தே வழங்கப்படு கின்றது. இந்த மருந்தை கர்ப்பம் தரித்து முதல் 12 வாரங்களுக்கு உள்ளெடுத்தல்கூடாது. இதற்கு பதிலாக Propylthiouracil என்கிற மருந்தை உள்ளெடுத்தல் வேண்டும். கர்ப்ப காலத்தின் 12 வாரங்கள் கழிந்த பின்னர் முன்பு Gunso Carbimazole மருந்தை உள்ளெடுக்க முடியும். கர்ப்பகாலத்தில் உள்ளெடுக்க வேண்டிய மருந்தின் அளவானது மாறுபட நேரிடுகின்றது. எனவே குறித்த காலத்துக்கொருமுறை குருதிப் பரி சோதனையை மேற்கொண்டு வைத்திய ஆலோ சனைப்படிமருந்தின் அளவைதேவையேற்படின் மாற்றி உள்ளெடுத்தல் அவசியமாகும்.தைரொயிட் சுரப்பு அதிகமாக உள்ளோருக்கான மருந்துச்சிகிச்சையானது குளிசை பொதுவாக 18-24 மாதங்களுக்கே வழங்கப்படுகின்றது. இவ்வாறு குணமடையாதவர்களுக்கு பலவிதமான மேலதிக சிகிச்சைவசதிகள்கி டைக்கப்பெறுகின்றன. - தை ரொயிட் பிரச்சினையுள்ள நோயாளருக்கு குறிப்பாக கர்ப்பவதி களுக்கு சுருக்கமாக (Summary) என்ன ஆலோசனை கூற விரும்புகின்றிர்கள்?
அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்ற பிரதானமான ஆலோசனைகளாவன- தைரொயிட் நோயின் தன்மை அதற்கான குளிசை மருந்துகளின் அளவு மற்றும் குருதிப் பரிசோதனை (தைரொயிட் ஹோர்மோன்) செய்யும் கால இடைவெளி போன்றன. கர்ப்பக் காலத்தில் சாதாரண நோயாளரைப் போன்றல்லாது வேறுபடுகின்றன.
- வைத்தியரால் பரிந்துரை செய்யப்பட்டு வழங்கப்படுகின்ற மருந்தை கிரமமான முறையில் உள்ளெடுத்தல் மிகவும் அவசிய மாகும்.
- கர்ப்பகாலத்தில் முதல் 12வாரங்கள் மிகவும் முக்கியமான கால கட்டமாகும். இந்த காலப்பகுதியின்போதே பிறக்கப்போகும் குழந்தை யின் மூளை வளர்ச்சி மற்றும் உடல் அவயவ வளர்ச்சி என்பன பிரதானமாக ஏற்படுகின்றன. எனவே கர்ப்ப காலம் முழுவதும் குறிப்பாக (முதல் 12 வாரங்களில்) தேவையான அளவு மருந்தை வைத்திய ஆலோசனைப்படி உள் ளெடுப்பதால் இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்திட முடியும்.
- சில நோயாளர்களுக்கு கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி போன்று (goitre module) இருந்தால் கர்ப்பம் தரிக்க முன்னரோ, பின்னரோ வேறு பரிசோதனைகள் மேற் கொள்ளவேண்டி (உ+ம் ஸ்கான் பரிசோதனை இழையப் பரிசோதனைடுNAC) நேரிடலாம். தைரொயிட் சுரப்பியில் அரிதாக புற்றுநோய் ஏற்படவும் கூடும்.
- இறுதியாக கர்ப்பிணியொருவர் கர்ப்ப காலத்தின்போது மிகவும் சிரத்தையுடன் தனது தைரொயிட் பிரச்சினையைக் கவனித்துக் கொள்வதுஅவசியமாகும்.இதனால்கர்ப்பிணிக் கும் பிறக்கப் போகும் குழந்தைக்கும் ஏற்படக் கூடிய தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த் துக் கொள்ள முடியும். வடமாகாணத்துக்குரிய ஒரேயொரு அகஞ்சுரக்கும் தொகுதி (ஹோர் மோன் )சிகிச்சை நிலையம் யாழ். போதனா வைத்தியசாலையில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. எனவே தேவையேற்படுகின்ற கர்ப்பவதிகள் நிபுணத்துவமான சிறப்பான சிகிச்சையைப்பெற்றுக்கொள்வது இன்றியமை யாததாகும்.
மருத்துவர். M. அரவிந்தன்.
நீரிழிவு, அகஞ்சுரக்கும் தொகுதியியல் விசேட மருத்துவ நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை.
யாழ்ப்பாணம்.
Posted in கட்டுரைகள்