Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



சுற்றாடல் சுத்தத்தை மேம்படுத்தும் 3R முறைமை

“சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான் சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்”
என்பது இன்றைய காலத்தின் தேவை யான சூழல் சுகாதாரத்தைப் பற்றி இயல்பாககூறுகின்ற இனிமையான திரை இசைப் பாடல் ஆகும். நாளுக்கு இருமுறை நம்மை சுத்தமாக வைத்திருக்க முயல்கிறோம். வீட்டை அழகுபடுத்தி சுத்தமாக வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் நாம் வாழும் சூழலை மட்டும் சுத்தமாக வைத்திருக்க ஏனோ அக்கறை செலுத்துவதில்லை. அதனால் அசுத்தத்திலேயே வாழவேண்டியநிலை.

இதற்கு காரணம் என்ன? நாம் எப்போது, அசுத்தமான சூழலிலிருந்து சுத்தமான சூழலில் குடியிருப்பது? சுத்தமான காற்றைசுவாசிப்பது? நோய்களுடனும், தூசிகளுடனுமான எமதுவாழ்க்கைப் போராட்டத்தை நிறுத்தி அமைதியான வாழ்வுக்கு திரும்புவது? என்று கேட்டால், நாம் யார் யாரையோ எல்லாம் குறை கூறுகிறோம். ஆனால் நாமே நம்மை நோக்கி எப்போதாவது இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறோமா? எமது நாளாந்த செயற்பாடுகளில் சூழல் சுகாதாரத்தை பேணுவதற்கும், அதன் அழகை பேணுவதற்கும், நாம் என்னென்ன செயல்களை ஆற்றியிருக்கின் றோம் என்று நம்மை நாமே விமர்சனமாக பார்த்திருக்கிறோமா? ஒரு நகரின் சுத்தம் என்பது ஒரு நிறுவனத்தின் கையிலோ அல்லது ஒரு குழுவின் கைகளிலோ உள்ளவிடயம் என்றுநாம் ஒதுக்கிவிடமுடியாது. அதில் நம் எல்லோரது பங்களிப்பும் உள்ளது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அது நம் எல்லோரது கைகளிலுமுள்ள கூட்டுப் பொறுப்பாகும். எந்த ஒரு செயல்முறையிலும் வெற்றிபெற வேண்டுமாயின், போதிய பயிற்சியும் அர்ப்பணிப்பும் தேவை. அதேபோல்தான் தினமும் உருவாகும் திண்மக் கழிவுகளை அப் புறப்படுத்துவதற்கும் எமக்கு போதியபயிற்சியும் அர்ப்பணிப்பும் அவசியமாகும்.

ஒரு நகரத்தில், அதில் குடியிருப்போரும் பல் வேறு தேவைகளுக்காக அந்த நகருக்கு வந்து செல்வோரும் அந்தநகருக்கு பயணம் செய்யும் உல்லாசப் பிரயாணிகளும் அங்கு அமைந்துள்ள உணவகங்களும் தொழிற்சாலைகளும் சந்தைகளும் நிறுவனங்களும் பல தொன் திண்மக் கழிவுகளை தினமும் ஏற்படுத்துகின்றனர்.
(ஒருவர் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 500g கழிவுகளை உருவாக்குவார்). பல தொன் குப்பைகளால், நகரின் அழகு தினமும் அலங்கோலமாகிவிடுகிறது. இதனை மீறி நகரின் அழகை அதிகரிக்க வேண்டுமாயின் நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாக 3R முறை மையை கைக்கொண்டே ஆகவேண்டும்.

எமது பிரதேசத்தில் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட எல்லைக்குள் மட்டும்தினமும் 17 மெற்றிக்தொன் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன. கோடை காலத்திலும் பார்க்க மாரிமழையை அடுத்துவரும்மாதங்களில் இதன்அளவு சற்று அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் 60 தொடக்கம் 80 வீதமானவை உக்கக்கூடிய கழிவுகளாகவும் 20தொடக்கம் 40 வீதமானவை உக்கமுடியாத கழிவுகளாகவும் உள்ளதாகவும் தகவல்கள்கூறுகின்றன.

உக்கமுடியாதகழிவுகளான சொப்பிங் பைகள், பிளாஸ்ரிக்போத்தல் என்பன bulkygarbage எனப்படும். அதாவது அவற்றின் கனவளவுக்கான நிறை மிகவும் குறைவாகும். அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவும் அதிகமாகும்.

3R முறைமை என்றால் என்ன?

Reduce (குறைத்தல்), Reduse (மீள்பாவனை), Recycle (மீள்சுழற்சி) என்பதே இந்த 3R ஆகும். சுற்றாடல் அழகைப் பேண உறுதிகொண்டால், எமது அன் றாட செயற்பாடுகளை அக்கறையுடன் அவதானிக்க வேண்டும். ஏனெனில் எமது அன்றாட செயன்முறைகளால்தான் அதிகளவு கழிவுகள் சூழலைச்சென்றடைகின்றன.

எமது கழிவுகளை சிறந்த முறையில் நாமே நடைமுறைக்கு ஏற்றவகையில் கையாள்வதை உறுதி செய்தால் நல்ல பயன் கிடைக்கும். நம்மால் உருவாக்கப்படும் குப்பைகளின் அளவை குறைப்பதற்கு (Reduce) கீழ்வரும் முறைகளை இயலுமானவரை கடைப்பிடிக்க முயலலாம். தேவையான பொருள்களை மட்டுமே வாங்கிப் பாவிக்க முன்வருதல் வேண்டும். தேவையற்ற பொருள்களை வாங்கும்போது அவை நாளடைவில்கழிவாகி அவற்றை அப்புறப்படுத்துவதே சிரமமானதாகிவிடும். பாவனையின் போது அதிகளவு உக்காத குப்பைகளை தரக்கூடிய பொருள்களை தவிர்த்திடல் வேண்டும். கழிவுகளின் அளவைக்குறைக்கும்முகமாககழிவுகளை உருவாக்கும் பொருள்களைத் தவிர்த்து, முடியுமான வரை நீடித்து உழைக்கக்கூடிய மற்றும் மீள் பாவனைப் பொருள்களையே பாவிக்க முன்வருதல் வேண்டும்.

சந்தைக்கோ அல்லது கடைக்கோ செல்லும்போது மீள்பாவனைக்குரியபைகளையேகொண்டுசெல்லுதல் நன்று. இது துணிப்பையாகவோ அல்லது மட்டைப் பையாகவோ இருக்கலாம். முடியுமானவரை சொப்பின் பைகளை பாவிப்பதை தவிர்த்தல் வேண்டும். குறைவாகப் பொதியிடப்பட்ட பொருள்களையே தேர்வு செய்து வாங்குதல் வேண்டும். இங்கு பொலித்தீன் பைகளில் பொதியிடப்பட்ட பொருள்களை முற்றாகவே தவிர்த்தல் நன்று.

தேவை நிமித்தம் பாவித்து, தற்போது தேவையற்றது என கருதும் பொருள்களை வேறு நபர்களுக்கு பாவிக்கக் கொடுத்தல் அல்லது அதனை வாங்கி விற்கும் விற்பனையாளரிடம் கொடுத்தல் நன்று. உதாரணமாக பழைய கணினி, குளிர்சாதனப்பெட்டி போன்றவற்றை இந்த வகையில் சொல்லலாம். பிளாஸ்ரிக் தட்டுக்கள், கோப்பைகள், றெஜிபோம் போன்ற உக்கமுடியாத ஆனால் சூழலில் சேர்ந்து அதன் இயல்பைக் கெடுக்கும் பொருள்களை வாங்கு வதை தவிர்த்தல் நன்று.

ஒருநாள் தேவைக்காக சில பொருள் களை வாங்க வேண்டியிருக்கும், அதுவே பெருங்கழிவாக வீட்டில் தங்கிவிடும். அவற்றை என்ன செய்வதென்றே தெரியாத நிலை, இவ்வாறான சந்தர்ப் பங்களில் புதிய பொருள்கள் வாங்குவதை விடுத்து அவற்றை வாடகைக்குப் பெற்றுபயன்படுத்துவதே சிறந்தது.

காகிதத்தில்இ ரு பக்கங்களிலும் அச்சிட்டு அல்லது எழுதிப் பயன்படுத்துவதே சிறப்பு.

வீட்டிலிருந்துவேலைத்தளங்களுக்கோ, பாடசாலைகளுக்கோ உணவு எடுத்துச் செல்லும் சந்தர்ப்பங்களில் முடியு மானவரை சில்வர் சாப்பாட்டுப் பெட்டிகளில் எடுத்துச் செல்லுதல். இயலுமானவரை lunch பேப்பர். சொப்பின்பை பாவிப்பதையோ றெஜிபோம் பெட்டி பாவிப்பதையோ தவிர்த்தல் நன்று.

விழாக்களின்போது பிளாஸ்ரிக் ஒரு நாள் கப் (One day)உரிபாவனையைக்குறைத்துசில்வர்பேணிகளின் பாவனையை மீள அறிமுகப்படுத்துதல் சிறப்பு. மீள் பாவனை (Reuse) என்று சொல்லும்போது ஒரு முறை பாவித்த பொருள்களை வீசி எறியாது மீண்டும் பாவனைக்கு உட்படுத்துவதையே மீள் பாவனை எனலாம்.

இங்கும் நாம் நுகர்வுக்கு முன்பே சிந்தித்துச் செயலாற்றினால், சிறப்பாக மீள் பாவனைக்கு உதவிட முடியும். ஒருமுறைமட்டுமேபாவிக்கக்கூடியபொருள்களைத் தவிர்த்து மீண்டும் மீண்டும் மீள் பாவனைக்கு உட்படுத் தக்கூடிய பொருள்களை வாங்குவதே சிறப்பு மீள்பாவனைப் பைகளை பாவிப்பதை உறுதிப்படுத்தல். சில்வர். கண்ணாடிசெரமிக் பாவிப்பதை உறுதிப்படுத்தல். உலர்ந்த பொருள்களை சேமிப்பதற்கு, பாவித்த பெட்டிகளை உபயோகப்படுத்திக் கொள்ளுதல், பேப்ரில் அச்சிடாத பக்கத்தை மேசைகளைத் துடைப்பதற்கோ, சிறுவர்களின் கற்பித்தலுக்கோ பயன்படுத்திக் கொள்ளுதல். மீள்சுழற்சி (Recycle என்னும் போது பாவித்த பொருள்களைப் பயன்படுத்தி புதிய பிறபொருள் களை உருவாக்கி மீள பயன்படுத்தல் ஆகும். எந்த வகையான பெருள்களை மீள்சுழற்சி செய்யலாம் என்பதை நாம் அறிந்திருத்தல் வேண்டும். பிளாஸ்ரிக்போத்தல்கள், பிளாஸ்ரிக் கொள்கலன்கள், உடைந்த பிளாஸ்ரிக் கதிரைகள், பிளாஸ்ரிக் பேனைகள் பழைய பத்திரிகைகள், கடதாசிகள், தடித்த அட்டைப்பெட்டிகள், கண்ணாடிபோத்தல்கள்,தகரக்கொள்கலன்கள், அலுமினியக் கொள்கலன்கள், பியர் ரின்கள், ரின்மீன் பேணிகள் உக்கக்கூடிய இலைசருகுக் குப்பைகள் போன்றவை இதில் அடங்கும்.

மீள் சுழற்சிப் பொருள்களை தரம் பிரித்து வேறு வேறான பைகளில் சேகரித்தல் வேண்டும். குறிப்பிட்ட அளவு சேர்ந்ததன்பிற்பாடு அதனை கடையிலோ அல்லது வீடு தேடி வரும் முகவரிடமோ ஒப்படைத்தல் வேண்டும். மிகவும்.விரைவானதும் வினைத்திறனானதுமான தரம்பிரித்தல் செயன் முறைக்கு சர்வதேச நிறக்குறியீட்டை(International color code) பயன்படுத்திக்கொள்ளலாம். பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகளுக்கு செம் மஞ்சள் நிறமும் காகித கழிவுகளுக்கு நீலநிற மும் கண்ணாடி போன்றான கூறான கழிவுகளுக்கு சிவப்பு நிறமும் உலோக கழிவுகளுக்கு மண் நிறமும் சேதனக் கழிவுகளை சேகரிப்பதற்கு பச்சை நிறமுள்ள பைகளையும் பாவித்துக் கொள்ளலாம்.

பாவித்த மின்கலன்கள், மின்குமிழ்களை குறிப்பாக CFI) அதனைப் பெற்று மீளவும் தொழிற்சாலைக்கே அனுப்பும் முகவரிடம் கொடுத்திடல் வேண்டும். கழிவுப் பொருள்களைக்கொண்டு அழகிய கைவினை பொருள்களைச்செய்தல், கற்பனைவளத்தோடுசெய்யப்படுகின்ற இந்தப் பொருள்களுக்கு சந்தைப் பெறுமானமும் அதிகம். பழைய பேப்பர்களைக்கொண்டு சிறுபிள்ளைகளின் விளையாட்டுப்பொருள்களை (மிருகங்கள், பறவைகள் செய்யலாம். பழைய ரின்மீன் பேணிகளை விளக்கு மாறு உற்பத்தியில் பாவித்துக்கொள்ளலாம்.

இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

நாம் உருவாக்கும் கழிவுகளின் அளவை குறைத் திடலாம். இதன் மூலம் வீட்டில், சூழலில் நகரில் சேரும் கழிவுகள் குறைந்து நகரின் அழகு மேம்படும். தொற்றுநோய்களின் பரம்பலில் காவிகளாக செயற்படும், நுளம்புகள், ஈக்களின் பெருக்கம் பல மடங்குகுறைந்துவிடும். இதனால் தொற்றுநோய்களின் தாக்கமும் பரம்பலும் குறையும். கொல்லவ ரும் டெங்குநோயின்தாக்கம் மிகமிக குறையும். உளஆரோக்கியமும் மேம்படும்.வைத்திய செலவுகள் மீதப்படுத்தப்படும் (குடும்பத்தினதும், நாட்டினதும் செலவுகள்) தேவையற்ற நேர பொருள் இழப்புக்கள் தவிர்க்கப்படும். கட்டாக்காலிகளின் பெருக்கமும் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும். கழிவுகள் சேகரித்தல் மற்றும் அகற்றலின் செலவை குறைத்துக் கொள்ளலாம். உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஏற்படும் செலவுகளும், அவர்களின் சேவை வழங்கலில் உள்ள குறைபாடுகளும் பெருமளவு நிவர்த்தி செய்யப்படும். அமர்த்தப்பட்ட தொழிலாளர்களால் நிறைவான சேவையை வழங்கமுடியும். திட்டமிடல், தேவையான பொருள்களை மட்டும் வாங்குதல், மீள்பாவனை மூலம் பணத்தைச் சேமித்தல் போன்ற நல்ல ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தல், மீள்சுழற்சி செய்யக்கூடிய பொருள்களை விற்பதன் மூலம் வருவாயை உருவாக்கிக் கொள்ளுதல். கழிவு முகாமைத்துவத்தில் நாமும் நம்குழந்தைகளும் பரிச்சயமாதல். சூழலுக்கு நட்பானமுறையில்நம்மால் உருவாக்கப்படும் கழிவுகளை அகற்றுதல், சுத்தமானதும் சுகாதாரமானதுமான சூழலை, எங்கள் சக்திக் குட்பட்ட முறையில் உருவாக்கிப் பேண உதவுதல்.

வேறு என்னென்ன வழிகளில் சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தல் என்ற பல நன்மைகள், நம்மை அறியாமலேயே நாம் பெற்றுக் கொள்ள முடிவதுடன் மற்றையோருக்கு முன்னுதாரணமாக விளங்கி வழிகாட்டிகளாகவும் இருப்போம்.

உக்கக்கூடிய கழிவுகளான இலை, குழை, சருகு, சமயலறைக் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரமாக்கல் compost மூலம் மீள் சுழற்சி செய்யலாம். இது மண்ணின் வளம், காற்றோட்டம் ஈரலிப்பு, நுண்ணங்கிகளின் செயற்பாடு, என்பவற்றை மேம்படுத்தி நல்ல விளைச்சலை தரும் இந்த compost உரம் மிகவும் பெறுமதி மிக்கது. வீட்டுத் தோட்டச் செய்கையில் நல்ல, தூய்மையான, நஞ்சற்றகாய்கறி, கீரைவகைகளைபெற்றிட இது மிகவும் உதவிடுவதோடுமண்ணையும் வளப்படுத்துகின்றது. அசேதன இரசாயனப்பசளைப்பிரயோகத்துக்கு பதிலாக இதனைப் பாவித்துப் பெறப்பட்டமரக்கறி, கீரைவகைகளை உணவில் சேர்க்கும்போது மனிதனை சடமாக்கும் புற்றுநோய்த்தாக்கம் வெகுவாக குறைகின்றது. சிந்திச்சிதறி வீடையும் நகரையும் அசிங்கப்படுத்திய உக்கக்கூடிய இந்தக்குப்பைகள், இப்போது எம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக மாறுவது விந்தையே ஆகும். என்பதும்கிருமிநாசினிகள்விசிறத்தேவையில்லை என்பதும்மேலதிகபோனஸ்நன்மைகளே. பொது இடங்களில் உள்ள நிழல் மரங்களிலிருந்து உதிரும் சருகுகள் வீணே எரிக்கப்படுவதைக் காணும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

compost உரத்தை வீடுகளில் கிடைக்கும் கொள்கலன்களைப் பயன்படுத்தியோ தரையிலோ குவியல் முறை தயாரித்துக் கொள்ளலாம். சேதனப் பசளை கொள்கல்ன்களை, சமயலறை அருகிலோ, வீட்டுத்தோட்டத்திலோநிழலின்கீழ்வைத்துக்கொள்ளலாம். சேதனப்பசளை தயாரிப்புக்கு, காய்கறி, பழவகைகளின் தோலும் கழிவுகளும், புற்கள், இலைகள், உலர்ந்த மலர்கள், வாழைக்குற்றிகள், விலங்குகளின் எரு போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றைப் பயன்படுத்ததும்போது எந்தவித துர்நாற்றமும் ஏற்படாது. (எஞ்சிய உணவுக் கழிவுகள், மீன் கழிவுகளைப் பயன்படுத்துகின்றபோது சில சமயம் துர்நாற்றம் வீசலாம்). இந்தக் கழிவுகளில் சமையல் எண்ணெய், வாகன ஒயில் வகைகளை சேர்க்கக்கூடாது இறுக்கமாக இல்லாது தளர்வாக காற்றோட்டம் இருக்கக் கூடியவகையில் இருப்பின் அசுத்தமணம் எதுவும் வீசாது. சவள் அல்லது முள்ளுசவள் கொண்டு வாரத்தில் ஒருதடவை புரட்டிவிடவேண்டும். உலர்ந்தநிலையில் காணப்படின் நீர் தெளிக்க வேண்டும். அதிகளவு நீரை ஊற்றக் கூடாது. நன்கு உக்கிய சேதனப் பசளையை வீட்டுத்தோட்ட பயன்பாட்டுக்காக பயன்படுத்த முடியும். இவை 3யூ முறைமையின்சாரமாகும் குப்பைகள் என்பவை உண்மையில்குப்பைகளே அல்ல அவை போடப்படும் இடம் நேரம் என்பவற்றின் காரணமாகவே அவை குப்பைகளாக கருதப்படுகின்றன. தகுந்தமுறையில் சேகரித்து முகாமைத்துவம் செய்வதால் அவையும் செல்வமாக மாறிவிடும் என்கின்றனர். இது விடயமாக அனுபவமும் ஞானமும் உள்ளவர்கள். இந்தியாவிலுள்ள தியாகராஜா கல்லூரியின் பேராசிரியர் வாசுதேவன் சூழலுக்கு பாதிப்பாக இருக்கும் பிளாஸ்ரிக்கைக் கொண்டு வீதிகள் அமைக்கும் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தி பிளாஸ்ரிக்கை வீதியில்போடாதீர்கள், வீதியை பிளாஸ்ரிக்கால் போடுங்கள் என்கின்றார். வேலூரைச் சேர்ந்த திண்மக் கழிவுக்முகாமைத்துவதிட்டப்பணிப்பாளர் ஊசிறிணிவாசன் பண்ணைவிலங்குகளைக் கொண்டு திண்மக்கழிவுகளை இயற்கையோடு இணைந்து பரிகரிப்புச் செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளார். இந்த முயற்சியில் பசு, கோழி, வாத்து, மண்புழு துணையுடன் உயிர்வாயு (Biogass), கூட்டுப்பசளை(compos) என்பவற்றை மீள்சுழற்சி மூலம் பெற்றுக்கொள்வதுடன் பண்ணை விலங்குகளின் பிரயோசனத்தையும் எடுத்துக்கொள்ளமுடியும் என விதந்துரைக்கின்றார். சாதாரணமாக இரண்டு மாதங்கள் வரை எடுக்கும் கூட்டுப்பசளை உருவாக்கும் இவரின் முறைமூலம் குறுகியகாலத்துக்குள் (ஒரு மாதத்துக்குள் செய்யமுடியும் என்கிறார்.

மேலும் இவற்றைப் பயன்படுத்துகின்ற போது தொழிலாளர் யூனியன் இடையூறுகள், வேலைநிறுத்தம் போன்ற செயன்முறை கஷ்டங்களும் இல்லாது வருடம் முழுவதும் சீராக செயற்பட முடியும் என்கின்றார். 3யூ முறைமையை முடியுமானவரை நம் வாழ்வில் கைக்கொள்ள முனைந்தால் நம்மால் உருவாக்கப்படும் குப்பைகளின் அளவு குறைந்து நமது நலமும் மேம்பட்டு நகரின் அழகிலும் சுற்றுச்சூழல் சுகாதார மேம்பாட்டிலும் நாமும் பங்களிப்பு செய்தோமெனும் நிறைவு ஏற்படும்.

மருத்துவர். பொ.ஜெசிதரன் (MBBS,DFM)

Posted in கட்டுரைகள்
« புரத பிஸ்கட்
தூக்கம் ஆரோக்கியத்தின் அளவு கோல் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com