குடிதண்ணிர்த் தேவைக்காக பொதுக்கிணறுகளில் இருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் செயன்முறை தொன்று தொட்டுநடைபெற்றுவரும் ஒன்றாகும். நிலத்தடி நீர் சவர்த் தன்மையுடைய பகுதிகளில் வாழுகின்ற மக்கள் இன் றும், தமது குடிதண்ணிர்த் தேவைக்காக பொதுக் கிணறுகளில், கோயில் கிணறுகளில் தங்கி இருக்கும் நிலை காணப்படுகின்றது.
இங்கிருந்து பெறப்படும் நீர் சுத்தமான குடிதண்ணி என அவர்கள் நம்புகின்றனர். ஆனால்
இந்தக் கிணற்றில் இருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும்போது, அவர்களின் தவறான செயன்முறைகளினால் அந்தக் கிணற்று நீர் மாசடைந்து கிருமித் தொற்றுக்குள்ளாவதை அவர்கள் உணர்வதில்லை. அதன் தூய்மையைப் பேணுவதை உறுதி செய்தல் பற்றியும் அவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
இதன்கா ரணமாகவும் அந்தக் கிணற்று நீர் E.coli போன்ற கிருமிகளின் தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகமாவதை அவதானிக்க முடிந்துள்ளது. ஏற்கனவே மாசடைந்துள்ளதாகக் கருதப்படும் நிலத்தடிநீரை இவை மேலும் மாசடையச் செய்வதாகவே உள்ளது.
இதன் காரணமாகக் குழந்தைகள், சிறுவர்கள், நலிந்தோர், குடல் சம்பந்தமான நோய்களுக்கு உட்பட்டு வயிற்றுளைவு, வாந்திபேதி போன்ற நோய் களுக்கு உள்ளாகின்றார்கள். இவற்றினால் குடும்ப, பொருளாதார, கல்வி இழப்புக்கள் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்ப்பதற்குப் பொதுக்கிணறுகளில் இருந்து குடிதண்ணி எடுக்கும்போது அடிப்படையான ஆரோக்கிய பழக்கவழக்கங்களை இயலுமானவரை கைக்கொள்ளுதல் வேண்டும்.
அவையாவன:
- பாதணிகள் அணிந்துள்ள நிலையில் நீர் அள்ளுவதைத் தவிர்த்தல்
- கிணற்று வாளி நீரிலே கை அலம்புவதையும், முகம்கழுவுவதையும் தவிர்ப்பதோடு பிறிதொரு வாளியில் ஊற்றப்பட்ட நீரைக் கொண்டு கை, முகம் கழுவிக்கொள்ளுதல் நன்று.
- இந்தக் கிணறுகளை குடிதண்ணித் தேவைக்காக அன்றி மற்றைய தேவைகளுக்காகப்பாவிப்பதைத் தவிர்த்தல் நன்று. உதாரணமாக குளித்தல், ஆடை கழுவுதல் போன்ற தேவைகளுக்காகப் பாவிப்பதைத் தவிர்த்தல் நன்று.
- உடல் தூய்மையற்றநிலையில் உள்ளபோது குடி தண்ணி அள்ளுவதைத் தவிர்த்தல் வேண்டும். உதாரணமாக மலம் கழித்த பின்பும், சவர்க்காரம் இட்டு நன்கு கழுவாத நிலையிலும், அழுக்கான வேலைகள் செய்ததன் பின்னரும் நன்கு சவர்க்காரம் இட்டு கைகளைக் கழுவாத நிலையிலும் இந்தக் கிணறுகளில் குடிதண்ணிர் அள்ளும் போது தண்ணிர் அசுத்தமடையும் வாய்ப்புக்கள் உள்ளன.
- நீராலும் உணவாலும் ஏற்படுகின்ற தொற்று நோய்களான நெருப்புக் காய்ச்சல், செங்கண் மாரி, வயிற்றுளைவு, வயிற்றோட்டம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பூரணகுணம் அடைவதற்கு முன்பாக பொதுக்கிணறுகளில் நீர் எடுக்க வருவது தவறு.
- வாளியைப் பாவனையின் பிற்பாடு கிணற்று மிதியில் வைக்காது அதற்கென உள்ள கொழுவியில் கொழுவி வைத்தல் வேண்டும். பெரும்பாலான பொதுக்கிணறுகளில் வாளி கொழுவும் கொழுவிகள் இல்லை என்பதால் அவற்றை அமைத்துக் கொள்ளுதல் அவசியம் ஆகும்.
- வாளியை எந்தக் காரணம் கொண்டும் மிதியிலோ, நிலத்திலோ வைத்தல் கூடாது.
- கால்களினால் வாளிக்கயிற்றை மிதிப்பதைத் தவிர்த்தல் நன்று
- கிணற்றைச்சுற்றியுள்ள நூறு மீற்றர்துரத்துக்குள் திண்மக் கழிவுகள் சேகரிப்பதோ அல்லது கொட்டுவதோ ஆடு மாடுகளின் சாணி, பிழுக்கைகள் இருப்பதோ குடி தண்ணி துய்மையைப்பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- கால்நடைகள் கிணற்றின் சுற்றாடலில் (குறைந்தது நூறு மீற்றர் வரை) வர முடியாதவாறு இயலு மாயின் தடுப்பு வேலி அமைத்தல்.நன்று.
- கப்பி பொருத்தியுள்ள குறுக்குமரத்தில் பறவைகள் அமர்ந்து எச்சம் இடாத வகையில் தடுப்பு முறைகள் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
- கிரமமாக குறைந்தது கிழமைக்கு ஒரு தடவை யாவது விஞ்ஞான முறைப் படி
விதந்து உரைக்கப்பட்ட அளவு முறைப்படியும், நெறிமுறைப்படியும் குளோரின் இடப்படல் வேண் டும். இதற்கு அந்தப்பகுதிபொதுச்சுகாதாரபரிசோத கரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். - குளோரின் இடப்படுவதை கிணற்றை பாவிப் போரும், பராமரிப்போரும் உறுதிப்படுத்துதல் வேண்டும். குளோரின் இடப்படுதல் தொடர்பான ஆலோசனைகளையும் செயன் முறைவிளக்கத்தையும் அந்தப் பகுதிக்கான பொதுச் சுகாதார பரிசோதகரைத் (PHI) தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.
இவற்றை இயலு மானவரை நடை முறைப்படுத்துவதன் மூலம் பாவனையாளர்களின் அறியாமையால் பொது அல்லது கோயில் கிணற்றுக் குடிதண்ணிர் மாசடை வதைத் தவிர்த்திட அல்லது குறைத்திட முடியும்.
இதனால்தான் அன்று கோயில் கிணறுகளில் நீர் அள்ளுகின்றபோது அதன் புனிதத்தன்மை கெடாத வகையில் சில ஆசாரமான ஒழுங்கு முறை களை கடைப்பிடித்திருக்கின்றார்கள்.
இன்றைய கால கட்டத்தில் விஞ்ஞான பூர்வமாகச் சிந்திக்கின்றோம் என எண்ணியபடி அவற்றை நாங்கள் கைவிட்டமையால் பொதுக்கிணறுகளின் தூய்மையும் கெடுகின்றதைக் காணக்கூடியதாக உள்ளது.
எனவே எமது பழக்கவழக்கங்களில் ஆரோக்கிய மான மாற்றங்களை தொடர்ந்தும் கடைப்பிடித்து, பொதுக் கிணற்று நீர் மாசடைவதைத் தவிர்த்து தூய்மையான அல்லது சுத்தமான நீரைப் பெற முயல்வோம்.
எம்மிடம் உள்ள வளங்கள் எமது அறியாமையால் தூய்மையை கெடுவதை உணர்ந்து அவற்றின் தூய்மையைப் பேண உறுதியான நடவடிக்கைகளை எடுப்போமாக.
மருத்துவர்.பொ.ஜசிதரன்
சுகாதார வைத்திய அதிகாரி.