இன்றைய வாழ்வில் நாம் செல்வத்துக்கும். செல்வம் தேடுவதற்குமே முன்னுரிமை அளிக்கின்றோம். எமது செயற்பாடுகளும் அதுசார்ந்ததாகவே இருக்கின்றன. பொருள் தேடுவதற்காக புலம்பெயர்ந்த கதைகள் பலவற்றையும் எமது வரலாற்றில் படித்திருக்கின்றோம். ஆனாலும் உண்மைச் செல்வம் எதுவென்று கண்டுகொண் டோமா? மடிக்கணினிகள் பல இருப்பதா? மகிழுந்துகள் பல இருப்பதா? மாடி மனைகள் பல இருப்பதா? மடி நிறையப் பணமிருப்பதா? எது தான் செல்வம்? உண் மைச்செல்வம் எது வென்றுமறந்தேவிட்டது. ஆரோக்கியமனமோ. ஆரோக்கிய உடலோ, ஆரோக்கிய நடத்தையோ உண்மைச் செல்வம் என்றால் அதை ஒத்துக்கொள்பவர்கள் எம்மில் எத்தனை பேர் உண்மைச் செல்வம் மறை பொருளானதால் நாம் பல ஆரோக்கிய மற்ற உணவுவகைகள். சமையல்முறைகள் நடத்தைக் கோலங் ளுக்கு ஆட்பட்டு அவையே ஆரோக்கிய மானவை எனத்தப்பிதமாகநம்பி வாழ்ந்து வருகின்றோம். அதிக பணம் கொடுத்து ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டு வருகின்றோம். முன்யோசனை அற்று மூடத்தனமாக நடந்து, நாமே முன்வந்து பல நோய்களையும் கொள்வனவு செய்கின்றோம். இவற்றிலிருந்து மீள வேண்டுமாயின் உணவு முறைப் போசாக்கு சம்பந்தமான அடிப்படை அறிவை விருத்தி செய்து கொண்டு அதனை எமது வாழ்வில் பிரயோகிக்க வேண்டும். அவ்வாறான எளிய நடைமுறைப்படுத்த வேண்டிய வழிகளை இனிப்பார்ப்போம்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பலதரப்பட்ட உணவுக் கூறுகளையும் கொண்ட கலப்பிக உணவுகளையே தேர்வு செய்வதுடன் உணவு சார்ந்த நாளாந்த திட்டமிடலும் அவசியம். ஒரே மாதிரியான உணவுகளையே தினமும் உட்கொள்ளாது பலவகையான உணவுகளைத் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் நிறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் சமநிலை உணவுகளை எடுப்பதற்கும் வெவ்வேறு சுவை, மணம் வர்ணம் கொண்ட உணவுகளை தெரிவு செய்தல் வேண்டும். இவை உடலை ஆரோக்கியமாகப் பேணி செயற்பாடுகளுக்கு சக்தியையும் போசாக்கையும் வழங்குகின்றன. தானியங்கள், கிழங்குகள் மற்றும் மாத்தன்மையான ( பலா, ஈரப்பலா) போன்ற காபோவைதரேற்றைக் கொண்ட உணவுக் கூறுகள் நாளாந்த செய்பாட்டுக்குரிய சக்தியைத் தருகின்றன. பழங்களும் காய்கறிகளும் இலை வகைகளும் நோயிலிருந்து பாதுகாக்கின்றன. மீன் முட்டை பருப்பு வகைகள் இறைச்சி போன்ற புரத உணவுகள் உடல் வளர்ச்சிக் கும் மற்றும் உடலைப் பேணிப்பாதுகாக்கவும் உதவுகின்றன. பால் பாற்பொருள்கள் உடல் வளர்ச்சிக்கும். எலும்பு பல்வளர்ச் சிக்கும் தேவை. விதைகளும் எண்ணெய்களும் கொண்டுள்ள கொழுப்புணவுக் கூறுகள் உடலுக்குத் தொழிற்பாட்டுச் சக்தியை வழங்குகின்றன. மேற்சொன்ன ஆறு வகை உணவுக்கூறுகளில் ஒன்றிரண்டை பெரிய அளவில் சேர்த்துக் கொள்வதிலும் பார்க்க எல்லா வகைக் கூறுகளிலிருந்தும் சிறிதளவேனும் உள்ளடக்குவதே சிறந்த தாகும். இவற்றின் பரிமாறல்களின் அள வானது. ஒருவரின் வயது, பால் உடல் நிறை உடற்செயற்பாடுகளின் அளவு. வாழ்க்கைத் தரம் என்பவற்றில் தங்கி யுள்ளது. நோய்கள் ஏற்படின் மேலதிக கவனம் தேவை. தானியங்கள் பழங்கள். காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கொழுப்புக்கள் மற்றும் எண்ணெய்களைக் குறைவாக எடுப்பதே சிறந்தது.
தானியங்களான உணவுகளை ( அரிசி, குரக்கன், கோதுமை, சாமி) தினமும் மூன்று முறை சாப்பிடுதல் நன்று. கிழங்குவகைகள் ( மரவள்ளி, இராசவள்ளி, கொம்புவள்ளி, சிறுகிழங்கு, போன்றவை) மற்றும் மாத்தன்மையான பழங்கள் போன்றவற்றை தானியங்களுக்கு பதிலாகப் பயன்படுத்த முடியும். இவற்றில் உள்ள நார்ச்சத்துக்களின் அளவு கோதுமையில் உள்ளதிலும் பார்க்க அதிகம். எனவே குள்கோசின் அளவு சடுதியாக அதிகரிக்காது. அதாவது கிளைசீமிக் இன்டெக்ஸ் ( Glycemic Index) குருதியில் குறைவாகவே இருக்கும் தானியங்களை அதிகம் மினுக்கும் போது அதிகளவு விற்றமின்கள் ( குறிப்பாக விற்றமின் B) இழக்கப்படுகின்றது. கோதுமை மா தயாரிப்புக்களைக் குறைவாக உள்ளெடுத்தலே ஆரோக்கியமானது. பாணுடன் பட்டர், ஜாம் போன்றவற்றை உண்பதைத் தவிர்த்தல் சிறப்பு.
தினமும் 240 கிராம் அளவு மரக்கறி, இலைவகைகளும் 160 கிராம் அளவான பழவர்க்கங்களும் சேர்த்துக்கொள்ள வேண்டும் கிருமி நாசினி, உரப்பாவனை அதிகமாகவுள்ள இந்தக் காலத்தில் இவற்றைத்தூய்மையாக நஞ்சற்றுப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. ஒப்பீட்டளவில் வாழைப் பூ, ஈரப்பலா, பலாக்காய், தாமரைக் கிழங்கு, சுண்டங் கத்திரிக்காய் என்பவற்றை இன்றை சந்தைகளில் ஓரளவு தூய்மையாகப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. இவை தொடர்ந்தும் தூய்மையானதாகக் கிடைத்திட விவசாய நண்பர்கள் எமக்கு உதவிட வேண்டும். தூய்மையான காய்கறிகளைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் வீட்டுத்தோட்டச் செயன்முறையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பருப்பு வகைகள், மீன் , கருவாடு, முட்டை இறைச்சி போன்ற புரத உணவுக் கூறுகளையும் போதிய அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். விலங்குப் புரதங்களில் எல்லாவகையான அமினோ அமிலங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். வெவ்வேறு வகையான மீன்கள் ( கடல் மீன், எண்ணெய் மீன், கடற்சிப்பி) வெவ்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும் மீன்களின் தலைப்பாகம் ஆரோக்கியமான எண்ணெய்களைக் ( omega -3) கொண்டிருப்பதால் சமைக்கும் போது முழு மீனையும் ( தலை வெட்டி அகற்றாது) பயன்படுத்துவதே சிறப்பு. இந்த ஒமேகா 3 ( omega -3) சிறுவர்கள் கெட்டிக்காரத்தனத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் செயற்படுவதற்கான நுண்ணறிவுத் திறனை விருத்தி செய்யும் ஆற்றல் கொண்டது. மீன்களிலுள்ள புரதமானது மிகவும் உயர்தன்மையானது. மூளை வளர்ச்சிக்கும் பார்வை விருத்திக்கும் உதவிடும். ஒமேகா 3 கொழுப்பிமிலங்களைப் போதியளவு கொண்டுள்ள சூடை, கீரிமீன், கும்பளா, மக்ரல் போன்றவற்றை குறைந்தது கிழமைக்கு இரு நாளாவது எடுத்தல் நன்று. இதய அடைப்பு, ஆத்திரோஸ் கிளறோறிஸ் (Atherosclerosis) மனச்சோர்வு மற்றும் புற்றுநோயை இந்த ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் தடுக்கும் தன்மை கொண்டவை. வளரும் பருவத்தில் தேவைப்படும் அதிக கல்சியத் தேவையை நெத்தலி, கூனிஇறால், கீரை மீன், சூடை, போன்ற மீன்களை முள்ளுடன் உட்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இதன் காரணமாக என்புருக்கி ( சிறுவர்களில்) மற்றும் ( Osteo Porosis) ஒஸ்ரியொபொரசிஸ் (பெரியவர்களில்) போன்ற நோய் ஆபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
பூரண புரத உணவாக முட்டை விளங்குகின்றது. இது மனிதனுக்குத் தேவையான எல்லா அத்தியாவசியமான அமினோ அமிலங்களையும் கொண்ட தரமான புரதத்தையும், பல விற்றமின்களையும், கனியுப்புக்களையும் கொண்டுள்ளது. முட்டை மஞ்சள் கருவானது கொழுப்பு, கோலின் விற்றமின்கள், இரும்பு, கொலஸ்திரோல், கல்சியம் என்பவற்றைக் கொண்டுள்ளதோடு, வெள்ளைக் கருவானது கிட்டத்தட்ட எல்லாவகையான புரதங்களையும் கொண்டுள்ளது. முட்டையைப் பொரிக்கும் போது அதனுடன் காய்களிகளைச் சேர்த்துக் கொண்டால் கொலஸ்ரோல் அகத்துறிஞ்சலைக் குறைத்துக்கொள்ள முடியும். பச்சை முட்டைகள் அல்லது அரை அவியல் முட்டைகளிலும் பார்க்க சமைத்த முட்டைகளே இலகுவாக சமிபாடடையும். ஆஸ்திரோஸ்கிளறோறிஸ் நோய் உள்ளவர்கள் கிழமைக்கு 2 – 3 முழு முட்டைகளையோ அல்லது முட்டை வெள்ளைக் கருவையோ உட்கொள்ள முடியும்.
இறைச்சி வகைகள், அதிக புரதத்தைக் கொண்டிருப்பதுடன் இரும்பு, நாகம், செம்பு போன்ற கனியுப்புக்களையும் கொண்டுள்ளது. குருதியில் அதிக கொலஸ்ரோல் மட்டத்தைக் கொண்டவர்கள் அளவுக்கதிகமாக இறைச்சி உள்ளெடுப்பதைத் தவிர்த்தல் நலம். அதிக சிவந்த இறைச்சி வகைகள் ( மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி) அதிகளவு நிரம்பிய கொழுப்புக்களைக் ( Saturated Fats) கொண்டுள்ளன. இவற்றையும் மற்றும் பதப்படுத்திய இறைச்சியையும் உண்பவர்களுக்கு சிலவகை புற்றுநோய் தாக்க அபாயம் அதிகமாக உள்ளது. கோழி இறைச்சி ஏனைய இறைச்சிகளிலும் பார்க்க. ஒப்பீட்டளவில் குறைந்தளவு நிரம்பிய கொழுப்பமிலங்கள் கொண்டுள்ளது. எனினும் புரத்ததினளவு ஒரே அளவானதாகவே காணப்படுகின்றது. இயலுமானவரை கண்ணுக்கு தெரிகின்ற கொழுப்புக்களை அகற்றி உண்ணலும் தோல் நீக்கிய கோழி இறைச்சியை உண்ணுவதும் ஆரோக்கியமானது.
பருப்பு வகைகள் புரதச்சத்தையும் கயைக் கூடிய நார்ப் பொருள்களையும் விற்றமிக்கனியுப்புக்களையும் கொண்டுள்ளன. பருப்பு வகைகளை அதிகளவு உணவில் சேர்த்துக்கொள்ளும் போது நீரிழிவு நோயின் ஆபத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். முளை கட்டிய பருப்பு வகைகளில் விற்றமின் B மற்றும் விற்றமின் C இன்உள்ளடக்கம் அதிகரிப்பதுடன். உடலினால் இலகுவில் அகத்துறிஞ்சக் கூடிய நிலைக்கு ( Bioavailability) அதிலுள்ள இரும்புச் சத்தின் தன்மை மாற்றமடையும், பருப்பு, பட்டாணிக் கடலை, கௌபி, பயறு, சோயா, அவரை மற்றும் விதைகள் (Textured Vegetable Protein) தரமான நல்ல பருப்பு வகைகளின் தெரிவுகளாவும்.
பால் ஒரு நிறைவான உணவாகும். குழந்தைகள் மற்றும் கட்டிளம் பருவத்தினரினதும் எலும்புகளின் விருத்திக்கு பால் மிகவும் முக்கியம். எனவே இவர்களுக்கு செயற்கை பானம் வழங்காது பால், பாற்பொருள்களை வழங்குவதே சிறந்தது. கொழுப்பு நீக்கிய பாலிலும் முழு ஆடைப்பாலிலும் ஒரே அளவான கல்சியம் காணப்படுகின்றது. முழு ஆடைப்பாலி அதிகளவிலான நிரம்பிய கொழுப்புக்களைக் கொண்டுள்ளது. பாலிலுள்ள கொழுப்பானது முழு ஆடைப்பாலிலுள்ள கொழுப்புக்களின் அரைவாசி அளவையே கொண்டுள்ளது.
கொழுப்பு நீக்கிய பாலில் கிட்டத்தட்ட எல்லா கொழுப்புக்களும்நீக்கப்பட்டுள்ளது. கொழுப்பு நீக்கிய பால் வயது வந்தவர்களுக்கும் அதீத நிறையுடைய குழந்தைகளுக்கும் இருதயம் சம்பந்தமான நோயாளிகளுக்கும் உகந்தது. பாலிலுள்ள லக்ரோஸ் (Lactose) என்கின்ற சீனிச்சத்து,பற்சிதைவு அபாயத்தைஏற்படுத்து வது குறைவு.
தயிரும் யோகட்டும் அதிகளவு விற்றமின் B, புரதம்மற்றும்(Bioavailability) கூடிய கல்சியத்தையும் கொண்டிருப்பதுடன் யோகட்டில் புறோபயோற்றிக் (Probiotics) எனும் சமிபாட்டுத் தொகுதிக்கு நன்மை செய்யும்பக்றீரியாக்களையும்கொண்டுள்ளது. சீஸ், அதிகளவு நிரம்பிய கொழுப்புகளையும் அதிகளவு சேர்க்கப்பட்ட உப்பையும் (Added sal) கொண்டுள்ளது. எனவே சீஸை அதி களவு எடுப்பது ஆரோக்கியமானதல்ல. கொழுப்புணவுகள், உணவின் சுவை, வாசம் என்பவற்றை அதிகரித்து உணவில் நாட்டத்தை அதிகரிக்கின்றன. நிரம்பியகொழுப்பமிலங்கள் குருதியில் கூடாத கொலஸ்ரோலை (LDL) அதிகரிக்கச்செய்கின்றன. நிரம்பிய கொழுப்ப மிலங்கள் பால், இறைச்சி, தேங்காய், தேங் காய்ப்பால் போன்றவற்றில் உள்ளன. மறைந்துள்ள கிடின் (Hidde) நிரம்பிய கொழுப்புக்கள் கேக். பிஸ்கட், மாப்பண்டங்கள் ஏனைய வெதுப்பக உற்பத்திகள் (Bakery Products) பொரித்த உணவுகள் மற்றும் சொக்லேட் போன்றவற்றில் காணப்படுகின்றன.
தனி நிரம்பாத கொழுப்பமிலம் (Mono Unsaturated Fatty Acid d MUFA) இதயத்துக்கு பாதுகாப்பளிப்பதுடன் HDL கொலஸ்ரோலை நல்ல கொலஸ்ரோல் அதி கரிக்கும். இவை மரமுந்திரிகை விதை கஜி. நிலக்கடலை, எள்ளு மற்றைய விதைகள் ஒலிவ், சூரியகாந்தி, நல்லெண்ணெய்) பட்டர் பழம் (Avocad) போன்றவற்றில் உள்ளன. ஒமேகா 3, ஒமேகா 6 இரண்டும் கொழுப்ப Bloomson (Polyunsaturated fatty acids d PUPA) வகையைச் சாரும். இவை இரு தயத்துக்குப் பாதுகாப்பளிக்கும். அதிக வெப்ப நிலையில் PUFA, MUPA என்பவை ரான்ஸ் கொழுப்புகளை உருவாக்கும். இந்த ரான்ஸ் கொழுப்பமிலங்கள்உடலின் ஆரோக்கியத்துக் குத் தீமை விளைவிக்கக் கூடியவை. இவை இதயநோய் மற்றும் பாரிசவாதம்போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கும். ஆழமாக பொரிப்பதற்கு பாம், மரக்கறி எண் ணெய்களை பயன்படுத்தும்போது அவை ரான்ஸ் கொழுப்புக்களாக மாறிவிடும். எனவே இவ்வகை எண்ணெய்களை ஆழமான பொரியலுக்கோ (deep Fray) அல்லது மீண்டும் பொரிப்பதற்கோ பயன்படுத்தக் கூடாது.
தேங்காய் எண்ணெய் நிரம்பிய கொழுப்பமிலங்களைக் கொண்டிருப்ப தனால், இது ரான்ஸ் கொழுப்புக்களை உருவாக்குவது குறைவு. எனவே இது ஆழமாகப் பொரிப்பதற்கு மிகவும் பொருத்தமான தாகும். ஆழமாகப் பொரிப்பதைக் குறைத்துக் கொள்ளுதல் நலம். தேங்காய் எண்ணெய் தவிர பொரிப்பதற்காக ஒருமுறை பாவித்த எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் கொலஸ்ரோலானது விலங்கு மூல உணவுகளில் மட்டுமே காணப்படுகின்றது. சொசேஜஸ் (Sosages)இறைச்சி உருண்டை (Meet bal) பதனிடப்பட்ட பன்றி இறைச்சி (Har bacon) போன்ற செயன்முறைகளுக்கு உட்பட்ட இறைச்சிகளை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். ஒட்டாத இரும்பிலான (non stick) பாத்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தேவைப்படும் எண்ணெயிலும் குறைவான எண்ணெயைப் பயன்படுத்தலாம். உணவுக்கொள்வனவின் போது பொதி கட்டுத்துண்டுகளிலுள்ள போசாக்குத் தகவல்களை வாசித்து அறிந்து அதிகம் நிரம்பிய,ரான்ஸ் கொழுப்புக்களை கொண்டுள்ள உற்பத்திகளைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
சமையலின் சுவையை அதிகரிக்க வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பாவிக்கப்படும் கொழுப்பு மற்றும் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள முடியும். அயடீன் கலந்த உப்பானது ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி அளவே ஒருவருக்கு தேவை. உப்பை அதிகம் உள்ளெடுத்தால் தொற்றா நோய்த்தாக்கம் அதிகரிக்கும். (அதிக வியர் வையை வெளியேற்றுபவர்களுக்கு அதிக உப்பு தேவைப்படலாம்) பதப்படுத்தப்பட்ட உணவுகள் தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள் அவசர சிற்றுண்டி ஆகாரங்கள். ஊறுகாய் போன்றவற்றிலும் உப்பு உண்டு என்பதை நாம் மறுத்தலாகாது.
அதிக உப்பினால் சிறுநீரினுடு வெளியேறும் கல் சியத்தினளவு அதிகரிக்கும். எனவே கல்சியத்தின் தேவையும் அதிகரிக்கும். மனநிலை பாதிப்பு வளர்ச்சி மற்றும் விருத்திக் குறை பாடுகள் தைரொயிட் ஹேர்மோன் குறை வினால் ஏற்படுகின்றது. தைரொயிட் ஹேர் மோன் உற்பத்திக்கு அயடீன் அவசியமாகும். இவற்றை அயடீன் நிவர்த்தி செய்கின்றது. அயடீன்கலந்த உப்பை சமையலுக்குப் பயன்படுத்தும்போது, அயடீன் இழப்பு ஏற்படாத வகையில் சமைப்பதை உறுதிசெய்வதற்கு, உப்பை நீரில் கழுவுதல் கூடாது. சமைத்து முடிந்த நிலையிலேயே உப்பைச் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
கடும் வர்ணமுள்ள போத்தல்களில் சேமித்து கசூடான இடங்களைத் தவிர்த்துவைத்துக்கொள்ளலாம். ஏனெனில் சூட்டில் வெப்பத்தில் அயடீன் ஆவியாகிவிடும். சாப்பாடுகளைத் தேர்வு செய்யும் போதோ அல்லது திட்டமிடும் போதோ உடனடியாக உண்ணக்கூடிய sougusteady made fast food, உணவுகளை விட சோடியம் குறைவாகக் கொண்டுள்ள உடன் அல்லது புதிய உணவு களையே தெரிவு செய்யுங்கள். குழந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் உப்பை அறிமுகப்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்துங்கள்.
உணவுகளினது.இயற்கையானசுவையையும் பழகிக் கொள்ளுதல் வேண்டும். அறிவு பூர்வ மாக உணர்ந்து சீனியை உள்ளெடுத்தல் வேண்டும். சாதாரண ஒருவர் ஒரு நாளில் 6 தேக்கரண்டி சீனியை மட்டுமே உள்ளெடுக் கலாம். நாம் உண்ணும் சிற்றுண்டிகள், இனிப் புக்கள் பானங்களில் மறைமுகமாக சீனி உள்ளதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். செயற்கைப் பானங்களை அதிகளவு உட்கொள்ளும்போது பற்சூத்தை அல்லது பற் சிதைவு, உணவில்நாட்டமின்மை பசியின்மை, அதனைத் தொடர்ந்து குடல்புண், தலையிடி, ஒற்றைத் தலையிடி, சோம்பல், கருத்துன்றிக் கற்கமுடியாமை போன்ற நோய்கள் ஏற்படும். பணம் கொடுத்து பாதிப்புக்களை நம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதா? எனவே செயற்கைப்பானங்கள், ஜூஸ் போன்றவற்றை இயலுமானவரை தவிர்த்திடுவோம்.
தாகத்தைத்தணிப்பதற்கு தண்ணிரே சிறந்தது. ஒருவர் ஒருநாளைக்கு 2தொடக்கம் 3 லீற்றர் தண்ணி அருந்துதல் ஆரோக்கியமானது. பாலூட்டும்தாய்மார்களும், அதிகஉடல்உழைப்பில் ஈடுபடுபவர்களும், சுகவீனமுற்றவர்களும் அதிகளவு தண்ணிரைப்பருகுதல் வேண்டும். தண்ணிரை 5 நிமிடங்கள் வரை கொதிநிலைப் புள்ளியில் கொதிக்க வைத்தால் அதிலுள்ள அனேக கிருமிகள் அழிந்துவிடும். தேநீரானது இரும்புச் சத்து அகத்துறிஞ்சலைக் குறைப்ப தன் காரணமாக பிரதான உணவுகள் உட் கொண்டவுடன் தேநீர் அல்லது கோப்பி போன்றவற்றை அருந்துவதை தவிர்த்தல் நன்று. பழப்பானங்கள் சீனி சேர்க்கப்படாமலும் நார்ப்பொருள்கள் அகற்றப்படாமலும் அருந்தப்படல் வேண்டும். விருந்துபசாரங்களிலும் ஆரோக்கியமான பானங்களைப் பகிரலாம். நுரைத்தெழும் பானங்கள் அதிகளவு சீனியைக் கொண்டிருப்பதுடன், உடல் நிறையை அதிகரிக்கவும் செய்யும் பசியையும் குறைக்கும். இவற்றிலுள்ள பொஸ்போரிக்க மிலம் பற்சிதைவுகள் மற்றும் அழற்சி நிலைமைகள் (eg Bronchial Asthma) ஆஸ்துமா ஏற்படவும் வழிசமைக்கும்.
மதுபானம் அருந்துவது இரத்த அழுத்தம், கல்லீரல் விக்க நோய், ஜீரண உறுப்புகளின் அழற்சி உணவுக்குழாய் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும் ஆரோக்கிய பானங்களாக பழரசம்,இளநீர் தேசிதோடம்பழதண்ணி, மோர் குத்தரிசிக் கஞ்சி, கூழ், பால், தேநீர், இரசம், சூப் என்பவற்றைக் கொள்ளலாம். சீரான உணவுகளை உட்கொள்வதுடன் வழக்கமான உடற் செயற்பாடுகள் பயிற்சிகள் மூலமும் ஆரோக்கியமான உடல்நிறையைப் பேணமுடியும்.
கர்ப்பகாலத்தில் குறிப்பாக கர்ப்பம்தரித்து 28 கிழமைகளின்பின்னர் கூடுதலானபோசாக்கு தேவைப்படுகின்றது. போதியளவுதிரவங்கள் மலச்சிக்கலைதவிர்க்கும் நார்ப்பொருள்களை அதிகமாகக் கொண்ட உணவுகள், பால் என் பவை இவற்றில் கட்டாயம் இருத்தல் வேண்டும். மதுபானம் புகைத்தல் மற்றும் புகைப்பவர்கள் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அண்மையில் நின்று புகைத்தல் ஆகியவை கருவைப் பாதித்து கருவில் நோய்களை தோற்று விக்கும். இரும்புக் குளிசைகளை வெறும் வயிற்றில் எடுப்பது அவற்றின் அகத்துறிஞ்சலுக்கு உதவிடும்.
பெறுமதியற்ற உணவுகள் (junk foods) அதி களவு சீனி மற்றும் நிரம்பிய கொழுப்புக்களை கொண்டிருப்பதால் அதிக கலோரிகளையும் குறைவான நுண்ணுட்டச் சத்துக்களையும் கொண்டிருக்கின்றன. பெயரளவில் இவை பெறுமதியற்ற உணவுகளாக இங்கு குறிப் பிட்டாலும் இவற்றுக்கு அதிக பணம் கொடுத்து இவற்றைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. அதாவது ஆரோக்கியமற்ற இந்த உணவுகளை நாங்கள் அதிக பணம் கொடுத்தே வாங்குகிறோம். சுவையூட்டப்பட்ட பானங்கள். உருளைக்கிழங்கு சிப்ஸ், இனிப்பான ஈற்றுணவுகள் இந்த வகையைச்சாரும். அதிக சுவை காரணமாக பிரபல்யமான இவற்றின் சுவை எண்ணெய், உப்பு, சீனி என்பவற்றால்
தான் உருவாகிறது என்று அறிந்திருத்தல் வேண்டும் பெறுமதியற்ற உணவுகளை அதிகம் உண்பதால் நீரிழிவு, அதீத உடல் நிறை. இருதய நோய்கள் என்பன ஏற்படும்.
எமது உணவில்நாம் உண்ணும்பெறுமதியற்ற உணவுகளைப் பட்டியலிட்டுப் பாருங்கள். அதிக பணம் கொடுத்து இவற்றை வாங்கியதையிட் டுக் கவலையும் அதிர்ச்சியும் அடைவீர்கள்.
இதுவரை பெற்றுக்கொண்ட அடிப்படை அறிவின் வழி பயணிப்போம். நோய்களும் ஆபத்துக்களும் நிறைந்த பாதைகளைத் தவிர்த்து, ஆபத்துக்கள் குறைந்த சீரான ஆரோக்கிய மான பாதை வழியே எமது வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வோம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மருத்துவர் பொ. ஜெசிதரன்
சுகாதார வைத்திய அதிகாரி