யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சிந்தனையில் உதித்த ஆரோக்கிய உணவு கௌபீ பிட்டு
தேவையான பொருட்கள்
கௌபீ மா வறுத்தது 125கிராம்
தேங்காய்ப்பூ தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை
தரமான கௌபீயை எடுத்து சுத்தமாக்கி வறுத்து ( அதிகம் வறுக்கக் கூடாது) அரைத்து மாவை நன்றாக அரித்து அதில் 125 கிராம் அளவில் எடுத்து சாதாரண அரிசிமா பிட்டு செய்வது போல கொதிநீர் விட்டு, அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் குழைத்து அவித்த பிட்டை இறக்கியவுடன் சூட்டுடன் தேவையான அளவு தேங்காய்ப்பூ சேர்த்துக் கிழறவும். பின் இளஞ்சூட்டுடன் சாப்பிடலாம். இந்த மாவில் இடியப்பமும் செய்யலாம். மிகவும் சுவையான சாப்பாடு அத்துடன் கலப்படம் இல்லாதது. வீட்டிலேயே தயாரிக்கலாம்.
இவ் முழுத்தாணிய உணவை இரவு சாப்பாட்டிற்காகப் பாவிக்கலாம். காலை உணவாகவும் பாவிக்கலாம். தனிநபர் ஒருவருக்கு ( நீரிழிவு நோய் உள்ளவருக்கு) 1கப் கௌபீ காலை உணவாக அனேகம் பாவிக்கப்படுகின்றது. இது 100கிராம் அளவில் நிறையுடையது. அதே போல் 125 கிராம் வறுத்த கௌபீ மாப்பிட்டும் கிட்டத்தட்ட நிறையாகக் காணப்படுகிறது. இதற்கு ஒரு வாழைப்பழம் போதுமானது. அல்லது சம்பலுடன் சாப்பிடலாம்.
இது எனது கண்டுபிடிப்பு எனது தயாரிப்பு நான் ஒரு நீரிழிவு ஆரம்ப நோயாளி . ஆகவே பல பல உணவுகளை தயாரித்து அதன் சுவையையும் அத்துடன் நீரிழிவைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆராய்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உடையவராக உள்ளேன்.
நன்றி
செல்வி காசிப்பிள்ளை கெங்காதேவி