முருங்கையிலை கட்லட்
செய்முறை
பச்சைப்பயறை ஊறவைத்து அரைத்து அதற்குள் சிறிதாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், முருங்கையிலை, சண்டியிலை, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், தேங்காய்ப்பூ என்பவற்றைச் சேர்த்துக் கலக்கிய பின் இவற்றுடன் உப்பு, சீரகம், உழுத்தம்மா சேர்த்து நன்கு பிசைந்து கொண்டு பின்னர் மெலிதான வடைகளைத் தட்டி மிதமான சூட்டில் உள்ள தோசைக்கல்லில் 2 துளி நல்லெண்ணை இட்டு இரண்டு பக்கமும் வாட்டி எடுக்கவும்.
தேவையான பொருட்கள்
| பச்சைப்பயறு | 200g |
| முருங்கை இலை | 100g |
| சண்டியிலை | 100g |
| வெங்காயம் | தேவையான அளவு |
| பச்சைமிளகாய் | 5 |
| இஞ்சி | சிறியதுண்டு |
| பூண்டு | சிறியதுண்டு |
| கறிவேப்பிலை | தேவையான அளவு |
| உப்பு | சிறிதளவு |
| சீரகம் | சிறிதளவு |
| உழுத்தம்மா | 1 கப் |
| தேங்காய்ப்பூ | தேவையான அளவு |
| நல்லெண்ணெய் | சிறிதளவு |
| உருளைக்கிழங்கு | 500g |
| கரட் | 100g |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வி.கம்சாயினி கணேசலிங்கம்
Posted in சிந்தனைக்கு


