புரத அடை
செய்முறை
உழுந்து, கௌபி என்பவற்றை சுத்தமாக்கி திரித்து மாவாக்கவும். மாவுடன் உப்பு, சிறிதளவு தேங்காய்ப்பூ என்பன சேர்த்து குழைக்கவும். பின்பு ரொட்டி போல் தட்டி தோசைக்கல்லில் போட்டு சுடவும்.
தேவையான பொருட்கள்
உழுந்து | 250 கிராம் |
கௌப்பி | 250 கிராம் |
உப்பு | சிறிதளவு |
தேங்காய்ப்பூ | சிறிதளவு |
அம்பிறலா சட்னி
தேவையான பொருட்கள்
அம்பிறலங்காய் | 5 |
சிறிய வெங்காயம் | 10 |
மிளகாய்த்தூள் | 1.மே.க |
மஞ்சள் தூள் | சிறிதளவு |
ஏலக்காய் | 3 |
அங்கர் பால் | 1 கப் |
பச்சை மிளகாய் | 2 |
உப்பு | தேவையானளவு |
கடுகு | சிறிதளவு |
சுவையூட்டி | சிறிதளவு |
செய்முறை
அம்பிறலாவை கழுவி தோல் நீக்கி பாதியாக வெட்டி உப்பிட்டு அவிக்கவும். பின்பு வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளிக்கவும். பின்பு அவித்த அம்பிறலாவை அதனுடன் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சுவையூட்டி, ஏலக்காய் சேர்த்து கிளறவும். பின்பு அங்கர்ப்பால் சேர்த்துக் கொதிக்க வைத்து ஆறியதும் பரிமாறவும்.
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வி.டொலறோஸ் ஞானப்பிரகாசம்