தொழுநோய் என்பது மெதுவாக பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். இது தோலையும் நரம்புகளையும் பாதிக்ககடகூடிய ஒரு வியாதியாகும். இது Mycobacteruim keprae ( மைக்கோ பக்ரீரியம் லெப்றே) எனும் ஒரு பக்ரீரியாவினால் தோற்றுவிக்கப்படுகிறது.
இது தொற்று உள்ளவர்களின் சுவாசத்தொகுதியில் இருந்து தும்மல், இருமல், மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. இது எல்லா வயதுடையவர்களையும் தாக்கக்கூடியதானாலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் 10 வயதிற்கு குறைந்த சிறுவர்களில் இது ஏறக்குறைய 20 வீதமாகக் காணப்படுகின்றது.
இந் நோய் தொற்றக்கூடிய அபாயமுடையோர்.
1. நோயாளியுடன் நீண்ட காலமாக ஒன்றாக வாழபவர்கள்.
2. குடும்ப அங்கத்தவர்கள், நெருங்கிய உறவினர்கள.
இந்நோயின் அறிகுறிகள்
1. வலி அற்ற உணர்ச்சி குறைந்த வெளிறிய தோல் பகுதிகள், தேமல் போன்ற தன்மை காணப்படும். இது முகம் முழங்கைகளின் பின்புறம், பிட்டம் போன்ற இடங்களில் காணப்படும்.
2. உள்ளங்கைகளின் தசைகள் வலுவிழந்து காணப்படும் அல்லது குன்றிப்போய் இருக்கும்.
3. பாதம் வலுவிழந்து போதல், நடக்க முடியாத தன்மை ஏற்படும்.
4. கை விரல்கள், பொதுவாக நான்காவது ஐந்தாவது விரல் குறண்டிப்போதல்.
5. கீழ்ப்பாதம் உள்ளங்கைகள் விரல் நுனிகளில் நோவற்ற நீண்ட நாள் புண்கள் காணப்படுதல்.
6. முகத்தின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுதல் ( சிங்க முகம்)
7. காதுச்சோணையில் முடிச்சுக்கள் தோன்றுதல்.
இவை தவிர இந்நோய் உள்ளவர்களில் இரண்டு வகையான தாக்கங்கள் ஏற்படலாம். ( Reachons)
வகை 1 – ஏற்கனவே நோய்த்தாக்கம் ஏற்பட்ட இடங்கள் திடீர் என சிவத்தல் அல்லது புதிய அடையாளங்கள் தோன்றுதல்.
வகை 2 – தோலில் தழும்புகள், காய்ச்சல், தசை மூட்டு நோவு என்பன ஏற்படுதல்.
மேற்கூறிய அறிகுறிகள் தென்படின் உடனடியாக தோல் சிகிச்சை நிலையத்தை நாடவேண்டும். தாமதித்தால் நிரந்தரமா அங்கவீனம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
இதற்குரிய சிகிச்சையானது அரசாங்க வைத்திய சாலைகளிலுள்ள விசேட தோல் சிகிச்சை நிலையங்களில் இலவசமாக வழங்கப்படுகின்றது. ஆரம்ப கட்டமாயின் ஆறு மாதங்களுக்கும், நாட்பட்ட நோயானால் ஒரு வருடத்திற்குமான மாத்திரைகள் உள்ளன.
இவற்றை கிரமாக உள்ளெடுத்து சிகிச்சையை பூரணப்படுத்துவதன் மூலம் இது மேலும் பரவாதிருப்பதையும், சூழவுள்ளவர்களுக்கு தொற்றாமல் இருப்பதையும் உறுதிப்படுத்தலாம். ஏனெனில் இது சிகிச்சை மூலம் முற்றாகக் குணப்படுததக் கூடிய ஒர் நோயாகும்.
தற்போது யாழ் மாவட்டத்திலும் மன்னார், வவுனியா முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் இருந்தும் இந்நோய் தாக்கமுடையவர்கள் யாழ் வைத்திய சாலையின் தோல் சிகிச்ச நிலைத்தில் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களுக்கு இலவச சிகிச்சையும் தொழிற்பாட்டு குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கூடிய ஆலோசனைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
Dr.Noris Mariyaselvam
Skin Clinic
Teaching Hospital Jaffna