தக்காளி முட்டை கூட்டு
செய்முறை
முட்டையை அவிக்கவும் வெங்காயம் பச்சை மிளகாய் சிறிதாக வெட்டி நல்லெண்ணையில் தாழிக்கவும். வெங்காயம் வெந்து வர மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வேக வைக்கவும். பின் சோம்புத்தூள் சேர்த்து வதக்கி பின் தக்காளியை சிறு துண்டுகளாக போட்டு வதக்கவும். தக்காளி வெந்ததும் முட்டையை சிறு துண்டுகளாக வெட்டி போட்டு பிரட்டி எடுக்கவும்.
| தேவையான பொருட்கள் | அளவு |
| முட்டை | 2 அவித்தது |
| தக்காளி | 2 |
| வெங்காயம் | சிறிதாக வெட்டியது |
| பச்சை மிளகாய் | தேவையானளவு |
| கறிவேப்பிலை | தேவையானளவு |
| உப்பு | தேவையானளவு |
| மிளகாய்த்தூள் | தேவையானளவு |
| சோம்புத்தூள் | தேவையானளவு |
| நல்லெண்ணெய் | 1 மேசைக்கரண்டி |
அடை, தோசை, பிட்டு, இட்லி, இடியப்பத்துடன் சேர்த்து குழந்தைகளுக்கு பரிமாறக்கூடிய சத்துள்ள கறி.
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms.பவானுஜா பாஸ்கரன்
Posted in சிந்தனைக்கு


