நாம் கர்ப்பகாலத்தில் உண்ண வேண்டிய உணவானது எமது உடற்திணிவுச் சுட்டிக்கும் எமது உடற் தொழிற்பாட்டின் அளவுக்கும் ஏற்பமாறுபடும். முதல் மூன்று மாதங்களில் போசனைப் பொருள்களின் தேவையானது மிகச் சிறியளவிலேயே அதிகரிக்கின்றது. பின்பு சீராக அதிகரித்து 6 மாதங்களின் பின்னர் இத்தேவை உச்ச நிலையை அடையும்.
உண்பது எவற்றை?
- எமக்கு ஏற்ற நிலை அதிகரிப்பு எவ்வளவு என்பதற்கு அமைவாக ஆறு வகை உணவுப் பொருள்களிலிருந்து தெரிவு செய்து உண்ண வேண்டும்.
- உண்ணக்கூடிய 6 வகை உணவுகளுக்கான சில பரிந்துரைகள்
- பாண் ஏனைய தானியங்கள், கிழங்குகள்
- சோறு 7 – 11 பரிமாறல்கள்
- பழங்கள் – 3 – 4 பரிமாறல்கள்
- பால் மற்றும் பாற்பொருள்கள் 1 – 2 பரிமாறல்கள் மீன், இறைச்சி, முட்டை, அவரையினங்கள், 2 – 3 பரிமாறல்கள் கடலை எண்ணெய் வகைகள் 2 – 4 பரிமாறல்கள்
- நீர்ப்பானங்கள் தேவையான அளவு – குறைந்த பட்சம் 8 – 10 கப் தினமும் அருந்த வேண்டும்.
- மலச்சிக்கலை தவிர்க்க நார்ப் பொருள்கள் நிறைந்த உணவைப் போதியளவு எடுக்க வேண்டும்.
- போசனைக் கூறுகள் நிறைந்த உணவு வகைகளை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ( அதற்குச் சமமான பாற்பொருள்கள்)
- ஆகக் குறைந்தது ஒரு கப் பால் தினமும் அருந்த வேண்டும்.
- மது வகைகள் மற்றும் புகைப்பிடிப்பதை ( புகைப்பிடிப்பவர் எதிரே அமர்வது உட்பட) தவிர்க்க வேண்டும்.
கர்ப்பகாலத்தில் தேவைப்படும் நுண் போசணைக் கூறுகள் எவை?
இவை எமக்கு சிறியளவில் தேவைப்படும் போசனைக்கூறுகளாகும். போலிக் அமிலம், இரும்பு, கல்சியம், விற்றமின் சி, அயடின் என்பவை இவற்றுள் சில இவற்றின் குறைபாடானது எமது கர்ப்பத்தையும், பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் மோசமாகப் பாதிக்கும். போலிக் அமிலம் முள்ளந்தண்டின் விருத்தியில் ஏற்படும் குறைபாட்டைத் தவிர்க்கும். எனவே இதனைக் கர்ப்பமாவதற்கு முன்பிருந்து கர்ப்பகாலம் முழுமையாகவும் பாவிக்க வேண்டும்.
இரும்புச் சத்து இதன் தேவை 3 மாதங்களின் பின்னர் அதிகரிக்கத் தொடங்கி பிந்திய கர்ப்ப காலத்தில் உச்ச அளவை அடையும். அத்துடன் பாலூட்டும் காலத்திலும் இதன் தேவை அதிகமாகவே காணப்படுகின்றது. இரும்புச் சத்து நிறைந்த உணவுகளான இறைச்சி, ஈரல், சிறுநீரகம் போன்ற பகுதிகள் மீன், கருவாடு, முட்டை கரும் பச்சை இலைவகைகள், மரக்கறிகள், சோயாமீற், உழுந்து, கடலை, கௌபி, பருப்பு போன்றவற்றை இக்காலப் பகுதியில் உள்ளெடுக்க வேண்டும். விலங்குணவுகளில் உள்ள இரும்பே நன்கு அகத்துறுஞ்சப்படுவதால் அவற்றை உள்ளெடுப்பது சிறந்தது.. முளைக்க வைத்து விதைகளும் பருப்பு வகைகளும் ( Pulse) இரும்புச் சத்து உடலினுள் சேர்வதை அதிகரிக்கின்றது.
- உடற்திணிவுச் சுட்டி – எதிர்பார்க்கப்படும்
- (Kg/m2) நிறை அதிகரிப்பு (Kg)
- 18.5 ( நிறைகுறைந்தவர்) – 12.5 – 18
- 18.5 – 24.9 ( சாதாரண நிறை) 11.5 – 16
- 25-29.9 ( அதி கூடிய நிறை) 7 – 11.5
- > 30 ( மிதமிஞ்சிய நிறை) <6.8
- (Serving) பரிமாறல் அளவுகள்
கப் – 200 மில்லிமீற்றர் அளவிலான தேநீர் கோப்பை
தானியங்கள் மற்றும் மாப்பொருள்
- சோறு – 1கப்
- பாண் – 1 துண்டு
- மரக்கறிகள்
- அவித்த மரக்கறிகள் 3 மே.கரண்டி அல்லது அரைக்கப் பச்சை சலட்
பழங்கள்
- வாழைப்பழம் அல்லது தோடம்பழம் – 01
- வெட்டிய பழக்கலவை – ½ கப்
- உலர் பழங்கள் – 2 மேசைக்கரண்டி
- மீன், அவரை, முட்டை, கோழி, இறைச்சி
- சமைத்த மீன் அல்லது இறைச்சி 30 கிராம்
- சமைத்த அவரைகள் – 3 மேசைக்கரண்டி
- முட்டை – 1
- உலர் மீன் 15 கிராம்
- பால் உணவுகள்
- பால் – 01 கப்
- யோகட் – 1 கப்
- பால் மா – 2 மேசைக்கரண்டி
- கடலை அல்லது எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
இலங்கையில் இரும்புச் சத்து நிறைந்த உணவுப் பழக்கம் குறைவாக உள்ளதால் கர்ப்ப காலத்திலும் பாலுட்டும் காலத்திலும் இரும்புச் சத்து வில்லைகளை உள்ளெடுப்பது அவசியம் மேலும் இவற்றுடன் தேநீர் , கோப்பி மற்றும் கல்சியம் மாத்திரைகளைச் சேர்த்து உட்கொள்ளக்கூடாது. இரும்புச் சத்து குளிசைகளை வெறும் வயிற்றில் எடுப்பது நல்லது. இக்குளிசைகளுக்கு வாந்தி வருவது போல உள்ளவர்கள் சாப்பிட உடனே உள்ளெடுக்கலாம் இவ்வகையானவர்ள் படுக்கைக்கு செல்லும் போதோ அல்லது பழச்சாற்றையோ உள்ளெடுப்பது பக்க விளைவுகளைக் குறைக்கும் இரும்புச் சத்துக் குளிகைகள் குழந்தை பிறந்த பின் 6 மாதங்கள் வரை உள்ளெடுக்க வேண்டும்.
கல்சியம்
கல்சியத்தின் தேவை கர்ப்பகாலத்திலும், பாலூட்டும் போதும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்காக மீன், இறைச்சி, முட்டை, வித்துவகைகள், பால், சீஸ், தயிர், யோகட், இலைவகைகள், மரக்கறிகள், விளாம்பழம், எள், போன்ற உணவுப் பொருள்களை உள்ளெடுக்க வேண்டும். அயடின் சேர்க்கப்பட்ட உப்பை உணவில் சேர்ப்பதால் இதன் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.
வைத்தியர் பிரதீபனா செல்வகரன்
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ் போதனா வைத்தியசாலை.