கைகளால் எழுதிக் கற்கும் முறை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு துணைபுரிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கைகளால் எழுதுவதற்கு பதில் கணினியின் விசைப்பலகை மற்றும் தொடுதிரைகளைப் பயன்படுத்தி குழந்தைகள் மேலதிகமாக கல்வி கற்கும் தற்போதைய நடைமுறை அவர்களின் படிக்கும் திறனை பாதிப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகின்றது.
உலக அளவில் குழந்தைகள் பேனா மற்றும் பென்சிலைப் பயன்படுத்தி காகிதத்தில் எழுதும் போக்கு படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக, தற்கால குழந்தைகள் கணினிகளின் விரல்களைப் விசைப்பலகைளின் மூலம் பயன்படுத்தியும் டேப்ளட்டுகளின் தொடுதிரை கணினிகளில் விரல்களை பயன்படுத்தி தட்டச்சு செய்யும் போக்கு அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக அவர்களின் (மூளை) வளர்ச்சியும் படைப்புத்திறனும் பாதிக்கப்படுமா என்கிற கேள்விக்கு பாதிக்கப்படும் என்று ஆய்வு கூறுகின்றது.
கையெழுத்தும், கணினிவிசைப்பலகையும்
படிக்கத்துவங்காத குழந்தைகளால் எழுத்துக்களை அடையாளம் காண முடியும் என்றாலும், அந்த எழுத்துக்களைக் கூட்டி வார்த்தையாக உருவாக்க அவர்கள் பழகியிருக்கவில்லை. இக் குழந்தைகளுக்கு கைகளால் எழுதி பயிற்சியளிக்கப்பட்டது. அவர்களின் மூளைச் செயற்பாடு நன்கு எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் மூளைச் செயற்பாடுகள் நன்கு எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் மூளையை ஒத்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
படிக்கத்துவங்காத குழந்தைகள் சிலரை தட்டச்சு, கணினி விசைப் பலகைகளைக் கொண்டு எழுத்து பழக்கப்பட்டது. ஆனால் இக் குழந்தைகள் கைகளால் எழுதிப் பழகிய குழந்தைகளின் மூளையைவிட செயற்பாடு குறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் மூலம் கைகளால் எழுதிப் பழகும் போது அவர்களின் படிக்கும் பழக்கமும் கூர்மைப்படுவதைக் காட்டுகிறது. எனவே தொடர்ந்து அவர்கள் கைகளால் எழுதும் போது அவர்கள் படிக்கும் திறனும் தொடர்ந்து கூர்மைப்படுகிறது. இதன்போது அவர்களின் நரம்பு மண்டல செயற்பாடு மேம்படுவதாகவும் அதன் பயனாக அவர்களின் அறிவுத்திறன் வளர்ச்சியும் பல வகைகளில் அதிகரிப்பதாகவும் கூறப்படுகின்றது.
நன்றி