குழந்தைகளில் ஏற்படும் இருதய நோய்களைப் பிரதானமாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. Acyanotic Heart Disease (நீலநிறமற்ற இருதயநோய்)
2. Cyanotic Geart Discase (நீலநிறமாதலுடன் கூடிய இதயநோய்)
Acyanotic Heart Disease (நீலநிறமற்ற இருதயநோய்) பெரும்பாலான இந்த நோய்களை சத்திரசிகிச்சையின் மூலமோ அல்லது Cardiac Catheterization மூலமோ முற்றாக குணமாக்கலாம். சில நோய்கள் தானாகவே குணமடையும் தன்மை கொண்டவை.
பின்வரும் பிரதான இதய நோய்கள் இந்தப் பிரிவில் அடங்கும்.
1. Patcnt Foramce Ovale (PFO)
2. Atrial septal Defect (ASD) இதய சோணை அறைப்பிரிவு சுவர் துவாரம்
3. Ventricular Septal Defeet (VSD) இதயவறைப் பிரிசுவர் துவாரம்
4. Patent Ductus Arterisous (PDA)
Patent Foramen Ovale
இது இதயத்தின் சோணை அறைப் பிரிசுவரில் காணப்படும் சிறிய துவாரம் அல்லது வால்பு ஆகும். தாயின் வயிற்றில் சிசு வளரும்போது அதன் குருதிச் சுற்றோட்டத்துக்கு இந்தத் துவாரம் அல்லது வால்பு இன்றியமையாததாகும். குழந்தை பிறந்த சில நேரத்தில் அதன் குருதிச் சுற்றோட்டத்தில் ஏற்படும் மாற்றங்களினால் இது தானாகவே அடைபட்டுவிடும்.
ஆயினும் 25 முதல் 30 சதவீதமானவர்களில் இந்தத் துவாரம் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கலாம் இருப்பினும் மேலதிக சிகிச்சை பெரும்பாலானவர்களுக்குத் தேவைப்படாது. இதனால் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
2. Atrial septal Defcct (ASD) (இதய சோணை அறைப்பிரிசுவர் துவாரம்) இது இதயத்தில் ஏற்படும் பிறவிக் குறைபாடுகளில் அதிகமாக ஏற்படும் நோயாகும் இந்தத் துவாரத்தினால் மேலதிக இரத்தம் இடது சோணை அறையில் இருந்து ( O2 ஏற்றப்பட்ட குருதி) வலது சோணை அறைக்குச் செல்கின்றது. இதனால் அதிகளவு இரத்தம் நுரையீரலுக்குச் செல்கின்றது. இந்தத் துவாரம் ஒரு சில மில்லி மீற்றர் அளவிலிருந்து சில சென்ரிமீற்றர் அளவு வரைக்கும் பெரிதாக இருக்கலாம்.
பெரிய துவாரங்கள் சரியான நேரத்தில் குணமாக்கப்படாவிடின் இருபது அல்லது முப்பது வருடங்களின் பின் அதிகரித்த சுவாசப்பை இரத்த அழுத்தத்தினால் ( Pumonary Hyperte nsion) சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும்.
இதன் அறிகுறிகள் என்ன?
மீண்டும் மீண்டும் சுவாசத் தொற்று நோய் ஏற்படுதல்.
உடல் நிறை அதிகரிக்காமை ( Failure to thrive)
இதய ஒலியில் வித்தியாசம் இருத்தல் ( Murmur)
ASD எவ்வாறு குணமாக்கப்படுகின்றது?
சிறிய துவாரங்கள் தானாகவே மறையும் தன்மை கொண்டவை இந்தத் துவாரங்கள் பெரிதாக இருப்பின் குழந்தை 4 -5 வயது அடையும் பொழுது Cardia Cathetcrization ( ASD Devicing) மூலமாகவோ ( Open Heart Surgery) குணப்படுத்த வேண்டும்.
இருப்பினும் சில வேளைகளில் இந்தத் துவாரம் முதன் முதலாக முப்பது தொடக்கம் ஐம்பது வயதுகளிலேயே கண்டறியப்படுகின்றது. இந்தச் சந்தர்ப்பங்களில் சில மேலதிக பரிசோதனைகளின் பின்னர் சத்திரசிகிச்சை அல்லது Cardiac Catheterization மூலமாக குணமாக்கலாம்.
இந்தத் துவாரம் குணமாக்கப்பட்ட பின்பும் இருதயவியல் நிபுணர்களின் அவதானத்தில் தொடர்ந்து இருப்பது அவசியம்.
சத்திரசிகிச்சைக்கும் Cardiac Catheterization க்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?
சத்திரசிகிச்சையின் போது இந்தத் துவாரம் இதயத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தி (Pericardium) அல்லது ஒரு வகையான செயற்கை இழையத்தினால் மூடப்படும்.
சத்திர சிகிச்சையின் பின்னர் சில நாள்கள் தொடக்கும் கிழமைகள் வரை வைத்தியசாலையில் இருக்க வேண்டும். Cardiac Catheterization ( ASD Devicing)
இது ஒரு எளிமையானதும் இலகுவானதும் ஒரிரு மணித்தியாலங்களில் செய்யக்கூடிய முறையாகும். இந்த முறை மூலம் குணமாக்குவதற்கு துவாரத்தின் அமைப்பு இந்த முறைக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.
இந்த முறை மூலம் துவாரம் மூடப்படின் அடுத்த 24 – 28 மணித்தியாலங்களுக்குள் வீட்டுக்குச் செல்ல முடியும்.
3. இதயவறைப் பரிசுவர் துவாரம் ( Ventricular Septal Defect VSD) இது இதய வறைகளைப் பரிக்கின்ற சுவரில் காணப்படும். துவாரம் ஆகும். இந்தத் துவாரம் சிறதாகவோ பெரிதாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாகவோ காணப்படலாம். அநேகமான சிறிய துவாரங்கள் குழந்தை வளரும்போது தானாகவே மறையும் தன்மை கொண்டன. இதனால் இதற்கு மேலதிக சிகிச்சை தேவைப்படாது. இருப்பினும் இருதயவியல் நிபுணர்களின் அவதானத்தில் இருப்பது அவசியம். ஏனெனில் சில வேளைகளில் இதனால் வேறு சில பிரச்சினைகள் உருவாகக் கூடும். Large VSD ( பெரிய இதயவறைப் பிரிசுவர் துவாரம்)
இந்தத் துவாரத்தினால் இடது இதயவறையிலிருந்து குருதியின் ஒரு பகுதி உடல் உறுப்புகளுக்குச் சென்றடையாமல் வலது இதயவறையின் ஊடாக நுரையீரல்களைச் சென்றடைகின்றது.
இதன் காரணமாக சுவாசப் பெருநாடியிலும், நுரையீரல்களிலும் இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. (Pulomonary Hypertension)
இந்த அதிகரித்த இரத்த அழுத்தம் நீண்டநாள் நிலைத்திருப்பின் நுரையீரல்களுக்கு நிரந்தர தாக்கத்தை உண்டு பண்ணுவதுடன் சத்திர சிகிச்சை செய்ய முடியாத நிலைக்கு இட்டுச் செல்லும். ( Inoperable) இந்தத் துவாரத்தின் அறிகுறிகள் என்ன?
அநேகமான சந்தர்ப்பங்களில் பிறந்த ஆரம்ப காலத்தில் எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமலிருக்கலாம். ஆயினும் துவாரம் பெரிதாகவிருக்குமிடத்து ஓரிரு மாதங்களில் பின்வரும் மாற்றங்கள் ஏற்படலாம்.
1. மூச்சுத்திணறல்
2. உடல் நிறை அதிகரிக்காமை
3. மீண்டும் மீண்டும் சுவாசத் தொற்றுக்குள்ளாதல்.
எவ்வாறு VSD துவாரங்கள் குணப்படுத்தப்படுகின்றன?
குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் இருப்பின் மருந்துகள் மூலம் இதனைக் கறைக்கலாம். எனினும் VSD துவாரம் பெரிதாக இருப்பின் சத்திரசிகிச்சை மூலம் மூடுதல் வேண்டும். இதன்போது ஒரு வகை செயற்கை இழையத்தினால் இந்தத் துவாரம் மூடப்படும்.
சத்திர சிகிச்சையின் பின்பும் வாழ்நாள் முழுவதும் இருதயவியல் நிபுணர்களின் அவதானிப்பில் இருத்தல் அவசியம்.
4. Patent Ductus Arterisous (PDA)
இது தாயின் வயிற்றில் சிசு வளரும் போது அதன் குருதிச் சுற்றோட்டத்துக்கு அத்தியாவசியமான ஒரு இரத்தக் குழாய் தொடர்பாகும்.
இது தொகுதிப் பெரு நாடியையும் ( Aorta) சுவாசப்பெருநாடியையும் ( Pulmonary artery) இணைக்கின்ற குழாயாகும்.
குழந்தை பிறந்த நாள்கள் தொடக்கும் சில கிழமைகளுக்குள் இது தானாகவே மூடும் தன்மை கொண்டது. சில குழந்தைகளில் இது தொடர்ச்சியாக நிலைத்திருக்கலாம். பிரதானமாக குறைமாதக் குழந்தைகளில் இது கூடிய காலம் நிலைத்திருக்கும்.
இதன் அறிகுறிகள் என்ன?
1. மூச்சுத்திணறல்
2. உடல்நிறை அதிகரிக்காமை
3. பால் அருந்தாமை
எவ்வாறு PDA குணமாக்கப்படுகின்றது?
குறைமாதக் குழந்தைகளுக்கும் மருந்துகள் மூலம் இதனைக் குணமாக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. இது பயனளியாதவிடத்து சத்திரசிகிச்சை மூலமாகவே குணமாக்க வேண்டியிருக்கும்.
வளர்ந்த குழந்தைகளில் இது Cardia Catheterization மூலம் இலகுவாக குணமாக்கக் கூடியதாக இருக்கும்.
நீலநிறமாதலுடன் கூடிய இருதய நோய் Cyanotic Heart Disease இந்த நோய்கள் மிகவும் ஆபத்தானவை. சரியான சிகிச்சை சரியான வேளையில் வழங்கப்படாவிடின் குழந்தை இறக்க நேரிடலாம்.
Dr.I.R ரகுநாதன்
குழந்தை இருதயவியல் நிபுணர்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.