சில பறவைகள் பேரழிவுகளை முன்கூட்டியே அறியும் வல்லமை கொண்டமை. அவ் சந்தர்ப்பங்களில் அவை தம் இருப்பிடங்களை விட்டுச் சென்று எமக்கு முன்கூட்டியே அறியத்தருகின்றது. சுனாமி ஏற்படும் நாளுக்கு முன்பே சில பறவைகள் தமது இருப்பிடத்தை விட்டு பறந்து சென்று பேரழிவு ஏற்படப் போவதை எமக்கு அறியத்தந்துள்ளது.
தொலைதூரம் பறந்து செல்லும் பறவைகளான பாடும் பறவையினங்களில் ஒன்றான பொன்னிறப் பறவைகள் இந்த இயற்கை அழிவுகளை வெகு சீக்கிரம் அறிந்துவிடும். இப்பறவைகள் இந்த ஏப்ரல் மாதம் தென்னளி பிரதேசத்தைப் புரட்டிப்போட்ட மோசமான சூறாவளிக்கு முன்கூட்டியே தம் இருப்பிடங்களில் இருந்து 700 கிலோமீற்றர் தூரம் பறந்து மெக்சிக்கோவிற்கு சென்றன. பின்பு சூறாவளி முடிந்த பின்னர் தமது இருப்பிடங்களிற்கு மீண்டும் வந்து குடியேறிவிட்டன. வெறும் 9 கிராம் எடை கொண்ட இப்பறவைகள் மனித காதுகளால் கேட்கமுடியாத ஒலி அலைகளின் சத்தம் கேட்டே இப்பறவைகள் இடம்பெயர்கின்றன. இந்தப் பறவைகளுக்கு அதி நுண்ணுனர் திறன் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.