துவரை இறால் கூல்
தேவையான பொருட்கள்
கரட் | – 1 |
போஞ்சி | – 100g |
லீக்ஸ் | – 1 |
மீன் | – 1 சிறியது |
முட்டை | – 1 |
இறால் | – 100g |
தனி மிளாகாய்த்தூள் | – சிறிதளவு |
உள்ளி | – 3 பல் விழுது |
மிளகுதூள் | – சிறிதளவு |
பச்சை மிளகாய் | – 5 |
வெங்காயம் | – 15 |
துவரம் பருப்பு | – தேவைக்கு ஏற்ப அவித்து அரைக்கவும் |
உப்பு | – தேவையான அளவு |
சூப் கட்டி | – சுவைக்கு |
அஜின மோட்டோ | – சுவைக்கு |
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறால், மீன், மரக்கறி, வெங்காயம், பச்சை மிளகாய், போட்டு நீர் விட்டு அவிக்கவும், அவத்த பின் அதனுள் உப்பு, தனி மிளகாய்த்தூள், சூப் கட்டி, அஜின மோட்டோ, மிளகுதூள், பூடு விழுது சேர்த்து 1 நிமிடம் வேகவிடவும். பின்பு முட்டையை மஞ்சட்கருவை நீக்கிய பின் வெள்ளைக் கருவை அதனுள் இடவும். நன்கு கலக்கவும், பின் துவரம் பருப்பை சிறிய அளவாக அதனுள் போட்டு கலக்கவும், பின் பரிமாறவும்.
திரு. இரத்தினசபாபதி கேசவன்
Posted in சிந்தனைக்கு