ஒரு பெண் கர்ப்பமடையும் போது உடல், உளரீதியாக பூரணசுகத்துடன் இருக்க வேண்டும். திருமணமான பின்பு குழந்தைக்கு எதிர்பார்த்து இருக்கும் போதே போலிக்கமிலம் எடுக்க வேண்டும். பூரண நிறையுணவு உள்ளெடுக்க வேண்டும். ரூபெல்ல ஊசி போடாத பெண்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற்று ரூபெல்ல எடுத்த பின்னரே கர்ப்பமடைதல் வேண்டும்.
கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தமது பிரதேச குடும்பநலக்களினிக்கில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக வைத்தியசாலையில் முதற்கிளினிக் பதிவுசெய்யப்படும். கர்ப்பகால 12 கிழமைகளில் வேண்டும். பின்னர் சலப்பரிசோதனை, இரத்தப்பரிசோதனைகள், மேற்கொள்ள வேண்டும். அவையாவன சலத்தில் குருதிக்கோசின் அளவு, புரதம் வெளியேறும் அளவு, இரத்தவகை, ஈமோகுளோபின் அளவு, VDRL பரிசோதனை என்பவையும் அவர்கள் நோய்நிலைக்கு ஏற்ப மேலதிக பரிசோதனைகளையும் செய்தல் வேண்டும்.
முதல் 28 கர்ப்பகால கிழமைகளில் ஒவ்வொரு 4 கிழமைக்கும் ஒருதடவையும், 38 தொடக்கம் 36 கிழமைகளில் ஒவ்வொரு 2 கிழமைக்கு ஒரு தடவையும் அதன் பிறகு ஒவ்வொரு கிழமையும் ஒரு தடவை கிளினிக் செல்லுதல் வேண்டும்.
12 கிழமைக்குள் முதலாவது ஸ்கான் (Scan) செய்யப்படல் வேண்டும். இதன் போது கர்ப்பகாலம் உறுதிசெய்யப்படும். குழந்தையின் அங்கக்குறைபாட்டினைப் பார்க்கின்ற நோய் 18 -20 கிழமைகளிற்கிடையில் செய்யப்படல் வேண்டும்.
கர்ப்பிணித்தாய் கர்ப்பமாக முன்பிலிருந்தே போலிக்கமிலம் எடுக்கவேண்டும். பின்னர் முதல் மூன்று மாதங்களிற்கு கட்டாயம் பாவிக்க வேண்டும். கல்சியம், இரும்புச்சத்து குலுசை என்பன முதல் மூன்று மாதங்களின் பின்னர் பாவிக்கத் தொடங்க வேண்டும். கல்சியம் குலுசை காலையிலும் இரும்புச் சத்துக் குலுசை இரவிலும் எடுக்க வேண்டும். திரிபோஷா, சோயாபோஷா மா என்பன உட்கொள்ள வேண்டும். தகுந்த முறையில் பூச்சி (worm) மருந்து எடுக்க வேண்டும் தகுந்த காலப்பகுதியில் ஏற்புத்தடுப்பூசி போடப்படல் வேண்டும்.
கர்ப்பகாலத்தின் போது ஏதேனும் பாவிக்க வேண்டி ஏற்படின் நீங்கள் கர்ப்பவதி என்பதனை வைத்தியரிடம் தெரியப்படுத்தி ஆலோசனைபெற்ற பின்னரே பாவிக்க வேண்டும். கர்ப்பகாலம் முழுவதும் நன்கு சுத்தமாக முக்கியமாக பற்சுத்தம் பேணப்படல் வேண்டும். பாலுட்டும் முறையினை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். சரியான முறையில் குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளல் வேண்டும்.