தேவையான பொருட்கள்
பயற்றம்மா ½ Kg
லீக்ஸ் 100g
கோவா 100g
கரட் 100g
முருங்கை இலை 100g
சண்டி இலை 100g
வெங்காயம் 100g
பச்சை மிளகாய் 50g
உப்பு தேவையானளவு
கடுகு, சீரகம் சிறிதளவு
தண்ணீர் தேவையானளவு
எண்ணெய் (நல்லெண்ணைய்) சிறிதளவு
செய்முறை
பயற்றம்மாவினை நன்றாக அரித்துக் கொள்ளவும், பின்னர் கரட், லீக்ஸ், கோவா, முருங்கை இலை, சண்டி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் பயற்றம்மா வெட்டிய மரக்கறி, இலைவகை தேவையானளவு உப்புச் சேர்த்துக் குழைக்கவும் பின்பு ரொட்டி போல் தட்டி தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும்.
-செல்வி. துவாரகா சிவநேசன்-