சலரோக நோயும் உங்கள் குழந்தையும் பாகம் 12
21.3 சிறந்த உடல்நலத்தைப் பேண உதவுகின்ற உளநல – சமூக உதவிகள்
1 சுகநல உத்தியோகத்தர்கள்
இலங்கையில் பல்வேறுபட்ட நிலைகளில் சலரோகச் சிகிச்சை முறைக்கான உதவிசெய்யும் உத்தியோகத்தர்கள் உள்ளனர்.
2.கல்வி
பிள்ளையின் மிகக் கட்டுப்பாடான நோய் நிலைமை பிள்ளையின் நுண்ணறிவையோ பாடசாலைப் பெறுபேறுகளையோ பாதிக்கக் கூடாது. சலரோகம் என்பது பாடசாலையில் ஒழுங்கற்ற வரவுக்கு ஒரு காரணமல்ல
பெற்றோர்களுக்கான உபயோகமான அறிவுரைகள்.
- அவசர நிலைமைகளில் உங்களைத் தொடர்புகொள்ளும் விதத்தைப் பாடசாலைக்கு தெரிவியுங்கள்.
- சலரோகம் பிள்ளையின் கல்வியியல் பெறுபேறுகளையோ வெற்றிகளையோ சமூக இணைவுகளையோ பாதிக்காதவாறு வைத்திருங்கள்.
- பாடசாலை, விளையாட்டுஈ, சமூக, கல்வி நடவடிக்கைகளில் உற்சாகப்படுத்துங்கள். தன்னம்பிக்கையும் உறுதியும் பெறுதல் சலரோகக் கட்டுப்பாட்டில் இன்றியமையாதது.
- இளவயதில் சலரோகமுள்ள சாதனையாளர்கள் பற்றி பிள்ளைக்குச் சொல்லுங்கள்
- விருப்பமற்ற சந்தர்ப்பங்களைத் தவிர்க்க அல்லது மன்னிப்புக்கான வழியாக நோயைப் பயன்படுத்தப் பிள்ளையை அனுமதிக்காதீர்கள்.
- பிள்ளையைச் சுற்றி உள்ளவர்கள் நோய் நிலைமையை அறிந்துள்ளதை உறுதி செய்யுங்கள்.
- எவருடைய தவறினாலும் இந்நோய் ஏற்படவில்லை என்பதைப் பிள்ளைக்கு விளக்குங்கள்.
Posted in சிந்தனைக்கு