செய்முறை
பயற்றம் மாவை உப்பு சேர்த்து கொதி நீர் விட்டு இடியப்பத்திற்கு குழைத்து உரலில் மாவை போட்டு பிழிந்து எடுத்து நீராவியில் அவித்து எடுத்து உலர்த்தி வைக்கவும். கரட் போவையும் 2நிமிடம் நீராவியில் அவித்து எடுக்கவும். தாச்சியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாய் வதக்கவும். வதக்கிய பின் உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி விழுது , பூடு விழுது சேர்த்து வதக்கி கரட் கோவா, உலர்த்திய இடியப்பத்தையும் போட்டு கிளறவும்.
தேவையான பொருட்கள்
| பயற்றம்மா | 300கிராம் |
| கரட் | 50 கிராம் |
| கோவா | 50 கிராம் |
| வெங்காயம் | 50 கிராம் |
| பச்சை மிளகாய் | 5 அல்லது 6 |
| உப்பு | சிறிதளவு |
| தனி மிளகாய்த்தூள் | 1 மேசைக்கரண்டி |
| பூடு | 5 பல்லு |
| இஞ்சி | 1 துண்டு |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி. கிருபனா பிரேம்குமார்


