Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    May 2025
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



‘அல்ஸைமர்ஸ்’ நோயின் பாதிப்புகளை குறைக்கும் புதிய மருந்து

அல்ஸைமர்ஸ் நோயால் மூளையில் ஏற்படும் பாதிப்புகளின் வேகத்தைக் குறைக்கவல்ல ஒரு புதிய மருந்தை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

எலி லிலி என்கிற மருந்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் “சொலானெஸுமேப்” என்ற இந்த புதிய மருந்து, டிமென்ஷியா நோய் முன்னேறும் வேகத்தை சுமார் 33 சதவீதம் குறைக்கும் என்று தெரிவிக்கிறது. அதாவது இந்த குறிப்பிட்ட மருந்தை, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நோய்த்தாக்கத் துவங்கிய ஆரம்ப கட்டத்திலேயே கொடுத்தால் இந்த அளவுக்கு பலன்கள் கிடைக்கும் என்கிறது இந்த ஆய்வு.

இந்த மருந்தைக் கொண்டு இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு செய்யப்பட்ட பரிசோதனைகளில் இது பெருமளவு தோல்வியில் முடிந்ததாகவே கூறப்பட்டது. அல்ஸைமர்ஸ் நோயின் ஆரம்பகாலத் தாக்குதலுக்கு உள்ளானர்வர்கள் மற்றும் நோயின் தாக்கம் ஓரளவு பரவத்துவங்கியவர்கள் மத்தியில் அந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.
நினைவிழப்பாக துவங்கி செயலிழப்பாக முன்னேறி உயிர்வாதை செய்யும் நோய் அல்ஸைமர்ஸ்
ஆனால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புதிய தரவுகள் இந்த மருந்தை பயன்படுத்தியவர்கள் மத்தியில் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டிருக்கின்றன.

தீவிரத்தன்மை குறைந்த அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இந்த மருந்து என்னவிதமான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்பதை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பரிசோதனை செய்ததில் கிடைத்த முடிவுகளே தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

வாஷிங்டனில் நடந்துவரும் அல்ஸைமர்ஸ் நோய் தொடர்பான சர்வதேச மாநாட்டில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மூளை பாதிப்பால் ஞாபக மறதி உள்ளிட்ட பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் அல்ஸைமர்ஸ் நோய் உலகெங்கிலும் கோடிக்கணக்கானோரை பாதிக்கிறது.

அப்படியானவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் இந்த புதிய மருந்து புதிய நம்பிக்கையளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

Posted in செய்திகள்
« பயிற்றம்மா பிரியாணி
“பரம்பரையில் மார்பகப் புற்றுநோயுள்ள பெண்கள் ஷிஃப்ட் வேலை செய்யக்கூடாது” »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com