Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



கண்வெண்படலம்

கண்வெண்படலம் என்பது கண்வில்லையின் ஒளி ஊடுருவுத் தன்மையைக் குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். இது உலகிலேயே கண்பார்வைக் குறைவிற்கான முதன்மையான காரணியாகக் காணப்படுகின்றது.

பொதுவாக முதிர்ந்த வயதில் ஏற்படுகின்ற ஓர் நோய் நிலைமை ஆகும். இது கண்வில்லையில் உள்ள புரத மாற்றத்தால் ஏற்படுகின்றது.

கண்வெண்படல வகைகள்

  1. முதுமையில் ஏற்படுவது ( Senilecataract) பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்படுகின்றது.
  2. பிறவியில் ஏற்படுவது ( Cogenital cataract ) – இது கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் சில நோய்களினாளோ அல்லது பரம்பரைக் காரணிகளினாளோ ஏற்படலாம்.
  3. கண்களில் அடிபடுவதனால் ஏற்படுவது ( Traumatic Cataract)
  4. ஏனைய நோய்களினால் ஏற்படுவது நீரிழிவு கண் அழற்சி (Uveitis) கண் அழுத்த நோய் ( Glaucoma)
  5. நீண்டகால ஸ்ரிரொயட் ( Steroid)  மருந்துப்பாவனையால் ஏற்படுவது.

அறிகுறிகள்

  • தூரப்பார்வை அல்லது கிட்டப்பார்வை குறைவடைதல்
  • இரவுப் பார்வை குறைவடைதல்
  • வெளிச்சம் பார்க்கும் போது கண் கூச்சம் ஏற்படல்
  • பொருள்கள் இரண்டாக, பலதாக தெரியும் நிலை ஏற்படல்
  • கண்வெண்படலம் மிகவும் கருமையாக இருப்பின் கண் அழுத்தம் அதிகரிப்பதனால் கண்சிவந்து நோ ஏற்படலாம்.

கண்வெண்படலம் ஏற்படுதலைத் தூண்டும் காரணங்கள்

  1. வயது அதிகரித்தல் ( Aging)
  2. சூரியக் கதிர்களுக்கு நீண்டகாலமாக கண்வெளிப்படுத்தப்படுவது.
  3. சலரோக நோயின் தாக்கம்.
  4. கதிர்வீச்சு தாக்கம்
  5. ஸ்ரிரொயிட் ( Steroid) மருந்துவகையை அதிகமான காலம் பாவிக்கின்றமை.
  6. உடலின் நீரிழப்புத்தன்மை ( Dehydration)

சிகிச்சை முறை

தற்காலிக சிகிச்சை முறை – கண்வெண்படல ஆரம்ப நிலையாயின் மூக்குக் கண்ணாடி பாவித்தலின் மூலம் பார்வையைக் கூட்டலாம்.

நிரந்த சிகிச்சை முறை சத்திரசிகிச்சை ( Cataract Surgery)

இதன் மூலம் கண்வெண்படலம் அகற்றப்பட்டு செயற்கையாகச் செய்யப்பட்ட வில்லைகள் பொருத்தப்படுகின்றன.

Dr.ஆரணி மதன்.
கண் கிளினிக்,
யாழ் போதனா வைத்தியசாலை.

Posted in சிந்தனைக்கு
« முதியோர் சுகத்தை நோக்கிய வெற்றி
வலிப்பு நோய்க்கான முதலுதவி »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com