செய்முறை
உழுந்து பருப்பை ஊறவைத்து கோது நீக்கி உப்புப்போட்டு அதை கிரைண்டரில் அரைத்து எடுத்து அவித்த பயற்றம்மாவுடன் குழைத்து வைக்கவும் ( 3மணி) பின் ஒருபாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுகொதிக்கவிடவும். கொதித்தபின் வெங்காயம் போட்டு வதக்கவும். பின் கடுகு, கடலைப்பருப்பு, சோம்பு, கரட் (துருவியது) சேர்த்து வதக்கி எடுத்து மாக்கல்லில் போட்டு கிளறி குண்டு அச்சுச்சட்டியில் எண்ணெய்யை விட்டு மாக்கலவையையும் இட்டு சுட்டு எடுக்கவும்.
| தேவையான பொருட்கள் | அளவு |
| உழுத்தம்பருப்பு | ½ கப் |
| பயிற்றம்மா | 1 கப் (அவித்தது) |
| உப்பு | தேவையான அளவு |
| கறிவேப்பிலை | தேவையான அளவு |
| வெங்காயம் | 1 பெரியது |
| செத்தல் | 3 |
| கரட் (துருவல்) | சிறிதளவு |
| ந.எண்ணெய் | தேவையான அளவு |
| கடுகு | தேவையான அளவு |
| கடலைப்பருப்பு | தேவையான அளவு |
| சோம்பு | தேவையான அளவு |
| மிளகுத்தூள் | சிறிதளவு |
| சீரகத்தூள் | சிறிதளவு |
குழந்தைகளுக்கு காலை உணவாகவோ அல்லது மாலை உணவாகவோ கொடுக்ககூடிய உணவு
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms கிருபனா பிறேம்குமார்


