Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நீரிழிவு நோயாளிகளின் கவனத்துக்கு

நீரிழிவு நோய் கண், மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகத்தைப் பாதிக்கும்.

இந்த நோய் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட பார்வைக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். கண்ணில் முக்கியமாக பின்புறமுள்ள விழித்திரையின் குருதி நாளங்களைப் பாதிக்கும்.

விழித்திரையில் ஏற்படும் மாறுதல்களை கண்மருத்துவர்களால் மட்டுமே பரிசோதித்து கண்டறியமுடியும். மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகங்களிலும் இதே மாறுதல்கள் ஏற்படுவதால் இந்தப் பரிசோதனை மூலம் இவற்றின் தன்மைகளையும் அறிய முடியும்.

நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோயின் தீவிரம் மற்றும் எவ்வளவு காலம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைப் பொறுத்தது.

பல வருடங்கள் நோய் உள்ளவர்களில் 70 முதல் 80 சதவீதம் பேருக்கு விழித்திரைபாதிப்பு ஏற்படும்.

நீரிழிவு நோயாளிகளுக்குப் பார்வையிழக்கும் வாய்ப்பு மற்றவர்களைவிட 25 மடங்கு அதிகம் உள்ளது.

குறைந்த பார்வை அல்லது பார்வையிழப்பு ஏற்படும்வரை எந்தவித அறிகுறிகளும் தெரியாது.

விழித்திரைப்திப்பை ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்து லேசர் சிகிச்சையளித்தால் கணிசமான அளவில் பார்வையிழப்பைத் தடுக்கலாம்.

லேசர் சிகிச்சையால் இருக்கும் பார்வையைப் பாதுகாக்கமுடியுமே தவிர இழந்த பார்வையைத்திரும்பப் பெறமுடியாது.

விழித்திரை பாதிப்பால் ஏற்படும் பார்வையிழப்பைத் தடுக்க நீரிழிவு நோயாளிகள் அனைவரும் 12 மாதத்துக்கு ஒரு முறையேனும் தங்கள் கண்களை கண் மருத்துவரிடம் அவசியம்பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

விழித்திரை பாதிக்கப்பட்டிருந்தால் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் கண்பார்வையை முற்றிலும் இழக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மருத்துவர்.S.T.S.சந்திரகுமார்.
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்

Posted in சிந்தனைக்கு
« ஊசி மருந்தைப் பாவிக்கும்போது ஏற்படும் வலியைக் குறைக்கக்கூடிய வழிகள்
Midwife – NCD px »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com