Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



தலைமுடி

எமது உடலில் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களைத் தவிர மற்றைய அனைத்து இடங்களிலும் முடி காணப்படுகின்றது. எமது உடலின் வெளித்தோலில் மயிர்ப்புடைப்புக் கலங்கள் காணப்படுகின்றன. இக்கலங்கள் மூலம் புதிய கலங்கள் உருவாக்கப்படும்போது பழைய கலங்கள் முடிகளாக வெளித்தள்ளப்படும். கெரற்றின் கொண்ட முடிகளாக உடலிற் காணப்படும்.

எமது தலையில் 100 000 – 150 000 வரையான முடிகள் உண்டு. இவற்றில் 100 வரையான முடிகள் நாளாந்தம் இறந்துவிடுகின்றன. நாளாந்தம் வளர்ச்சியடையும் முடிகள் 1 வருடத்தில் 15cm வரை வளரக் கூடியன. தலை முடியில் 90%மானவை தொடர்ந்து வளர்ச்சியடைந்த படியே இருக்கும். மயிர்ப்புடைப்புக் கலங்களினால் உயிர்ப்பான முடிவளர்ப்புச் செயற்பாடானது 2-6 வருடங்களுக்குக் காணப்படும்.

இடைப்பட்ட காலப்பகுதியில் 2-3 கிழமையாகவும், தொடர்ந்து ஒய்வு நிலையில் 2-6 மாதங்களாகவும் இந்த மயிர்ப்புடைப்புக் கலங்களின் செயற்பாடு காணப்படும்.

வயது செல்லச் செல்ல முடிஉதிர்தல் வீதமானது தொடர்ச்சியாக அதிகரிக்கும். அத்துடன் முடி உதிர்தலுக்குப் பரம்பரைக் காரணிகளும் காரணமாக இருக்கின்றன. அத்துடன் கடுமையான காய்ச்சல், உடல் நோய் நிலைகள், மன அழுத்தம், மகப்பேற்றுக்குப் பின்னரான சில மருந்துப்பாவனை எக்ஸ்ரே கதிர் உடலிற் படுதல் பங்கசுத் தொற்றுப் போன்றனவும் தலைமுடி உதிர்தலுக்கு காரணமாக அமைகின்றன.

அதேபோல் சம்போ போன்றன பாவிப்பவர்களின் தலைமுடி மெல்லிய தாக்கப்படுவதாலும் அத்துடன் தலையில் வெப்பக்காற்றுப் பிடிப்பதாலும் தலைமுடி பாதிக்கப்பட்டு முடிஉதிரும் சந்தர்ப்பம் அதிகரிக்கும்.

Posted in கட்டுரைகள்
« கட்டுப்பாடற்ற நீரிழிவால் ஏற்படும் பாதிப்புக்கள்
சலரோக நோயால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க கையாள வேண்டியவை »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com