Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



வயிற்றோட்டம்

ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் நீராக மலம் செல்வதையே வயிற்றோட்டம் என்கிறோம். வயிற்றோட்டம் ஏற்படும் போது ஒருவரின் உடலிலிருந்து நீர், உப்புக்கள், சீனிச்சத்து ஆகியன அகற்றப்படுகின்றன. இவ்வாறு அகற்றப்படுதலானது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகின்றது. இந்த ஆபத்தை தடுக்க வெளியேறிய நீர், உப்புக்கள், சீனிச்சத்து ஆகியன மறுபடியும் உடலுக்குள் சேர்க்கப்பட வேண்டும்.

நோய்க் கிருமிகள் உடலினுள் செல்வது வயிற்றோட்டம் வருவதற்கு ஒரு முக்கிய காரணியாகும்.

கிருமிகள் உடலுக்குள் செல்லும் முறைகள்

  • அழுக்கடைந்த கைகள்
  • அழுக்கடைந்த தண்ணீர்
  • அழுக்கடைந்த உணவு
  • முறையாகவும் போதியளவும் சமைக்கப்படாத உணவுகள்

வயிற்றோட்டத்தை தவிர்க்கும் முறைகள்

  • கொதித்தாறிய நீரைக் குடிக்க வேண்டும்.
  • சுத்தமான நீரைப் பயன்படுத்தல்
  • சாப்பாட்டிற்கு முன்னரும், மலசலம் கழித்த பின்னரும் கைகளை நன்கு சவர்க்காரம் இட்டுக் கழுவுதல்.
  • சுத்தமாக நன்கு சமைத்த உணவை உண்ணுவதோடு சமைத்த உணவைப் பூச்சிகள் மொய்க்காமல் மூடிப்பாதுகாக்க வேண்டும்.

வயிற்றோட்டத்திற்கான சிகிச்சை முறைகள்

  • தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைகளுக்குத் தொடர்ந்து தாய்ப்பாலைக் கொடுக்க வேண்டும்.
  • உப்புசேர் குளுக்கோசு நீர், உப்பு சேர் கஞ்சி, பொரியரிசி நீர், தேசிக்காய்த் தண்ணீர், இளநீர் ஆகியவை எல்லா வயதுப்பிள்ளைகளுக்கும் கொடுக்கலாம்.
  • உணவு – வயிற்றோட்டத்தின் போது உணவுகளைக் கொடுக்கலாம். ஒரு பகுதியாவது சேமித்து உடலிற்கு சத்தைக் கொடுக்கும்.
  • வயிற்றோட்டம் குறைந்து வரும் போது கட்டாயமாக உணவுகளைத் திரும்பவும் கொடுக்க வேண்டும். வயிற்றோட்டத்தின் பின் ஒரு கிழமைக்காவது ஒரு மேலதிக உணவு கொடுக்க வேண்டும்.

உப்புசேர் குளுக்கோசு நீர்

உப்பு சேர் குளுக்கோசு அடங்கிய சரைகளைக் கடைகளில் வாங்கலாம் (ஜீவனி) இதில் சோடியம் குளோரைட்டு, சோடியம் இருகாபனேற்று, பொற்றாசியம் குளோரைட்டு, குளுக்கோசு அடங்கியுள்ளன. இவற்றை ஒரு லீட்டர் கொதித்தாறிய நீரில் அல்லது சுத்தமான நீரில் கரைத்து பாவிக்கலாம். இதை வயிற்றோட்டம் இருக்கும் போது அடிக்கடி கொடுக்க வேண்டும். வாந்தி இருந்தாலும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு இடையிடையே கொதித்தாறிய சுத்தமான நீரும் கொடுக்க வேண்டும். கரைத்த உப்புசேர் குளுக்கோசு 24 மணித்தியாலங்களுக்கு வைத்து பாவிக்கலாம்.

உப்புசேர் கஞ்சி

வயிற்றோட்டத்திற்கான உப்புக்கள் அடங்கிய சரைகளை கடைகளில் வாங்கலாம். இதில் சோடியம் குளோரைட்டு, சோடியம் இருகாபனேற்று, பொற்றாசியம் குளோரைட்டு, அடங்கியுள்ளன. வறுத்த அரிசி மாவு 50கிராம் எடுத்துச் சுத்தமான நீரில் 5 நிமிடத்திற்கு கொதிக்க வைத்து தண்ணீரில் முழு அளவை 1 லீட்டர் வரும் வரை கொதித்தாறிய நீரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனை 8 – 10 மணித்தியாலத்திற்கு தான் வெளியில் வைக்கக்கூடியதாக இருக்கும். குளிர்சாதனப் பெட்டியானால் கூடிய நேரத்திற்கு வைக்கலாம்.

வீடுகளில் வயிற்றோட்டத்திற்கான உப்பு கரைசலோ, உப்புசேர் குளுக்கோசு கரைசலோ (ஜீவனி) எப்போதும் வைத்திருப்பது நல்லது.

Posted in கட்டுரைகள்
« குழந்தைகளுக்கு ஆறு மாதத்துக்குப் பின்பு உணவு கொடுப்பது எவ்வாறு?
அழுத்தங்களை வெற்றி கொள்ளுங்கள் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com