Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நீரிழிவை வெற்றி கொள்வோம்

நீரிழிவு நோயின் போது குருதியில் சீனியின் அளவு அதிகரித்துக் காணப்படும். இது இன்சுலின் என்னும் ஓமோன் பற்றாக்குறையினாலோ அல்லது இன்சுலின் ஓமோனை உடற்கலங்கள் எதிர்ப்பதனாலோ உண்டாகும். இந் நோயைப் பின்வரும் முறைகளினால் கட்டுப்படுத்தலாம்.

  1. மருந்துக்கட்டுப்பாடு
  2. உணவுக்கட்டுப்பாடு
  3. உடற்பயிற்சி

இம் மூன்று முறையினாலும் நீரிழிவு நோயைத் திறமையான முறையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

நீரிழிவு நோய்க்கான உணவு முறைகள்

  • பயறு, கௌப்பி, உழுந்து முதலான பருப்பு வகைகளை உட்கொள்வது மிகவும் நல்லது. இது உங்களுக்கு மேலதிக புரதச்சத்தையும் கொடுக்கும்.
  • அதிக மீனை உட்கொள்ளலாம் அதிகப்படியாக மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி உட்கொள்வதைத் தவிர்க்கவும் பதிலாகத் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியை உட்கொள்ளலாம்.
  • எளிய வெல்லம் உண்ணல் ஆகாது. எனவே கேக், புடிங், வட்டிலப்பம், இனிப்புப் பண்டங்கள் அத்துடன் சீனி, தேன், சக்கரை, பேரீச்சம்பழம், பிளம்ஸ் கலந்து மேற்கொள்ளப்பட்ட உணவு வகைகளைத் தவிர்த்தல் வேண்டும்.
  • சிவப்பரிசி மாவினால் தயாரிக்கப்பட்ட பாண் மற்றும் உணவு வகைகள், ஆட்டா மாவினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை இலை வகை உணவுகளுடன் சேர்த்து உண்ணலாம்.
  • வெள்ளை அரிசி, தீட்டிய மாவினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைக் குறைத்து கொள்வது நல்லது.
  • ஒரு வாரத்தில் நீங்கள் இரண்டு முழுமையான முட்டையை உட்கொள்ளலாம். மேலதிகமாயின் முட்டை வெண்கருவை மட்டும் உண்ணலாம்.
  • சோயா அல்லது சோயாவினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை உண்ணலாம். இது உங்களது குருதியில் உள்ள சீனியின் அளவை சாதாரண நிலையில் பேண உதவும்.
  • அதிகப்படியான கொழுப்புச்சத்து அடங்கிய உணவுகளைத் தவிர்க்கவும். எனவே கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது கொழுப்பற்ற பால்மாவை உபயோகிக்கவும் மோர் குடிப்பது மிகவும் நல்லது.
  • அதிகம் பொரித்த உணவுகள் (கட்லட், வடை, பற்றீஸ்) தவிர்க்கப்பட வேண்டும்.
  • இரண்டாவது அல்லது மூன்றாவது தேங்காய்பாலை உபயோகித்து உணவு வகைகளை தயாரிப்பது சிறந்தது.

தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்

  • சீனி, சக்கரை, தேன், ஜாம், ஜெலி, இனிப்புப்பண்டங்கள், சொக்லட், புடிங், ஐஸ்கிறீம், வட்டிலப்பம், கேக்.
  • சீனி சேர்க்கப்பட்டு செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பழரசபானங்கள் மற்றைய பானங்கள்.
  • பட்டர், சீஸ், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள்.
  • பன்றி, ஆடு, மாடு, போன்றவற்றின் இறைச்சி, ஈரல், மூளை.
  • பதப்படுத்திய இறைச்சி (சொசேஜ், உப்பிடப்பட்ட பன்றி இறைச்சி, பன்றியின் பதனிடப்பட்ட தொடை இறைச்சி, Meat balls)
  • அதிக உப்பு கலந்த உணவுகள் – உப்பு சேர்ந்த பிஸ்கட், தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள், ஊறுகாய், சிப்ஸ், உப்புக் கலந்த கச்சான், மர முந்திரிகை.
  • பேரீச்சம்பழம், பிளம்ஸ், தகரத்தில் அடைக்கப்பட்ட பழங்கள்.
  • மாம்பழம், முந்திரிகைப்பழம், கப்பல் வாழைப்பழம்.

போதிய அளவில் உட்கொள்ள வேண்டிய உணவுகள்

  • பயறு, உழுந்து, கௌப்பி முதலான பருப்பு வகைகள்.
  • கொழுப்பற்ற பால், கொழுப்பற்ற பால் கலந்த உணவுகள் (சீனி அற்ற யோக்கட்)
  • மீன், தோல் நீக்கிய கோழி இறைச்சி.

அளவாக உண்ண வேண்டிய உணவுகள்

  • உருளைக்கிழங்கு,
  • சீனவத்தாளங்கிழங்கு
  • சாம்பல் மொந்தல் வாழை
  • பூசணிக்காய்

பொதுவாகப் பாவிக்கக்கூடிய மரக்கறிகள்

  • அவரை இனம்
  • பச்சை இலைக்காய்கறி
  • நோகோல்
  • பயிற்றங்காய்
  • வெண்டிக்காய்
  • வல்லாரை
  • கோவா
  • வெள்ளரிக்காய்
  • புடலங்காய்
  • லீக்ஸ்
  • பொன்னாங்காணி
  • சிறகவரை
  • ஈரப்பலாக்காய்

பழங்கள் ஒரு நாளிற்கு

  • வாழைப்பழம் 3
  • அப்பிள் 1 ½
  • விளாம்பழம் 1 ½ பங்கு சாதாரண அளவுள்ள பழத்தில் அல்லது சிறிய பழமெனின் 3
  • கொய்யாப்பழம் 1 ½ அல்லது 3
  • அன்னாசி 3 சிறிய துண்டு
  • அதிக நார்ச்சத்துள்ள மரக்கறிகளை உண்ணவும்.
  • நார்ச்சத்துள்ள பழங்கள், பழரச பானங்களை விடச் சிறந்தது.
  • மேலும் இந் நீரிழிவு நோயாளர்களுக்கு ஓரளவாகப் பழுத்த பழங்கள் முற்றிலும் அல்லது நன்கு பழுத்த பழங்களை விட சிறந்தது.
  • மாம்பழம், முந்திரிகைப்பழம், பலாப்பழம் போன்ற பழவகைகள் உட்கொள்வதைத் தவிர்க்கவும் அல்லது கட்டுப்படுத்தவும்.

பொதுவான தகவல்கள்

  • குருதியில் சீனியின் அளவு தேவையற்ற விதமாகக் குறையுமாயின் மயக்கம், நடுக்கம், அதிகமாக வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படலாம். இந் நேரத்தில் இரண்டு தேக்கரண்டி கரைத்த சீனி அல்லது 2 தேக்கரண்டி குளுக்கோஸ் அல்லது 1 Glass பழரசபானம் எடுக்கவும்.
  • இந் நிலமை அடிக்கடி நிகழுமாயின் வைத்தியரின் ஆலோசனையை உடனடியாகப் பெறவும்.
  • நீங்கள் சிகரெட் புகைப்பவராயின் முற்றாக அதை நிறுத்தவும்.
  • நீங்கள் அதிக உடற்பருமன் உடையவராயின் தரப்பட்ட தகவல்களின் படி உடல் நிறையைக் குறைத்து இலட்சிய நிறையைப் பெறவும். இது பின்பு வரும் நோய்ச்சிக்கல்களைக் குறைக்கும்.
  • தினமும் உடற்பயிற்சி செய்ய பழகவும்.
Posted in கட்டுரைகள்
« கர்ப்பகால நீரிழிவு நோய் – Gestational Diabetes Mellitus
மருத்துவத்துறையிலே நோயாளர் உரிமைகளும் கடமைகளும் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com