அதிக சுவையின் காரணமாக ஆரோக்கியமற்ற துரித உணவுகள் இன்று பிரபல்யம் பெற்று வருகின்றன. உணவுகளின் பெயருக்குமாறாக இந்த உணவுகளின் சந்தைப் பெறுமதி அதிகமாக இருப்பதோடு இவற்றின் சுவையானது ஆரோக்கியத்துக்குக்கேடான அதிக சீனி, அதிக உப்பு எண்ணெய் போன்றவற்றின் சேர்க்கை காரணமாகவே ஏற்படுத் தப்படுகின்றது.
அதிக அளவிலான சீனி மற்றும் கொழுப்புக்கள் உள் ளடக்கப்பட்டிருப்பதனால், இவை அதிக கலோரிகளைக் கொண்டுள்ளதுடன் குறைவான நுண்ணுரட்டச் சத்துக்களையே கொண்டுள்ளன. வெற்றுக்கலோரி உணவுகள் என்றும் இவற்றை அழைப்பு துண்டு. இவை போசணைக்கூறுகளான புரதம், கனியுப்புக்கள் மற்றும் விற்றமின்களை வழங்குவதில்லை.
உருளைக்கிழங்கு சிப்ஸ், இனிப்புக்கள் மற்றும் உருளைக்கிழங்கினாலும் மாப்பொருளினாலுமான தயாரிப்புக்கள், காபனேற்றப்பட்ட மற்றும் சுவையூட்டப்பட்ட பானங்களான சோடா வகைகள், பைக்கற் யூஸ் போன்றவை இலங்கையில் உட்கொள்ளப்படும் முக்கியமான பெறுமதியற்ற உணவுகளாகும்.
இந்த உணவுகளை உண்ணுதல் உடல் நலத்துக்குக் கேடானது. சிறுவர்கள் இந்த உணவுகளை உண்பதை ஊக்கப்படுத்துதல் கூடாது. இவற்றை அதிகளவில் உண்பதனால் நீரிழிவு அதிக உடல்நிறை, இதய நோய்கள் பற்சிதைவு போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்.
இந்த உணவுகள் பாடசாலை உணவகங்களில் விற்பதை நிறுத்துதல் வேண்டும். இதற்காக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் போன்றோர் விழிப்புடன் செயற்படுதல் அவசியமாகும்.
கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பன இது தொடர்பாக பாடசாலைகளை வழிநடத்துதல் மிகவும் அவசியமாகும். உணவுப் பொதியிலுள்ள சுட்டுத்துண்டில் (Label) அந்த உணவில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்களின் பட்டியல் இறங்கு வரிசையில் கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
எமக்கு விளங்கக்கூடிய மொழியில் இவை எழுதப்பட்டிருத்தல் அவசியமாகும். எமக்கு விளங்காத மொழியில் (அரபு ஹிந்தி சீன மொழி) எழுதப்பட்ட சுட்டுத்துண்டுடனான உணவுகளில் எந்தவகையான பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளனளன்றோ அவற்றின் அளவுகள் தொடர்பாகவோ எம்மால் அறிந்துகொள்ளமுடியாது.
எனவே அந்தவகையான சுட்டுத்துண்டுடன்கூடிய உணவுகளை வாங்குவதைத் தவிர்த்தல் நன்று இது பற்றி முடியுமாயின் அந்தப் பகுதிப் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் அறிவித்தல் நன்று அதிக அளவில் சீனி, கொழுப்புமற்றும் உப்புசேர்க்கப்பட்டுத்தயாரிக்கப்பட்டஉணவுகளைத்தவித்தல் நன்று ஒரு முழு உணவு வேளைக் காக உண்ணும் உணவு தவிர்ந்த நொறுக்கா எடுக்கும் உணவானது 300 கிலோ கலோரிக்கு மேலான சக்தியை வழங்குமாயின் அவ்வாறான உணவைத்தவிர்க்கவும் ஐந்து கிராம் கொழுப்பானது ஒரு தேக்கரண்டி எண்ணெய்க்கு சமமானது என்பது அறிந்து கொள்ள வேண்டியதே.
பெற்றோர்கள் தமது பிள்ளைகள் எந்த வகையான உணவுகளைத் தேர்வு செய்கின்றனர் என்பதை அவதானித்தல் இன்றியமையாததாகும். பெறுமதியற்ற உணவுகளின்பாதிப்புக்களை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி அன்புடன் ஆரோக்கியமான தேர்வு செய்திட உதவிடுதல் வேண்டும்.
வலயக்கல்வி அதிகாரிகள் பாடசாலைகளையும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களையும் கண்காணித்துப் பாடசாலை உணவகங்களில் இந்த வகையான உணவுகள் விற்பதைத்தடைசெய்து ஆரோக்கியமான உணவுகள் கிடைக்க வழி சமைத்துக் கொடுத்தல் நன்று.
இதன் மூலம் வருங்கால சமுதாயத்தை நோயற்ற சமுதாயமாக மாற்றமுடியும்.
மருத்துவர்.பொ.ஜெசிதரன்
சுகாதார வைத்திய அதிகாரி