Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



உணர்வழியியல் மருத்துவம் ஒரு பார்வை

உணர்வழியியல் என்ற மருத்துவ அலகின் ஆங்கிலப்பதம் Anaenthesia (British English) அல்லது Anaen thesiolosy (American English) ஆகும். உணர்வழியியல் என்பது உணர்வை இழத்தல் அல்லது அழித்தல் ஆகும். அதாவது சத்திர சிகிச்சையின்போதுவலி,வேதனைபோன்ற இதரஉணர்வு களைப் போக்கி தேவையேற்படின் நினைவைதற்காலிகமாக இழக்கச் செய்து நோயாளியைப் பராமரித்தலாகும்.

இந்த வகையான உணர்வழித்தல் பொது மக்களின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட நாளே உலக உணர்வழியியல் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. (World Anesthesia day 1846 William Morton) இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த உணர்வழியியல் துறை யானது இன்று பலவழிகளிலும் முன்னேற்றமடைந்த பல சவால்மிக்க சத்திரசிகிச்சைகளை மிகவும் பாதகாப்பாக செய்யக் கூடியதாக வளர்ச்சி அடைந்துள்ளது.

உணர்வழியியலை பலவழிகளிலேமேற்கொள்ளமுடியும். முக்கியமாக இது மூன்று பிரதான வழிகளில்
வழங்கப்படுகின்றது.

1. Local Anaesthesia (பகுதி பிரிவு மயக்கமருந்து)
2. Regional Anaesthesia (பிராந்திய மயக்க மருந்து)
3. General Anaesthesia ( பொது மயக்க மருந்து)

Local Anaesthesia கொடுத்து சத்திரசிகிச்சை மேற் கொள்ளப்படும் பகுதி மட்டும் உணர்வழிக்கப்படும் அதாவது குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மயக்க மருந்தைப் பூசுவதன் மூலமோ விசிறுவதன்மூலமோ அல்லது ஊசியினுடாக உட்செலுத்துவதன் மூலமோ விறைக்கவைத்து வலியின்றி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

உதாரணமாக பல்பிடுங்கும் போது இந்த முறையே பலவேளைகளில் பின்பற்றப்படுகிறது. விரல்களின் தோல்களில் சிறுகாயங்கள் ஏற்படும்போது இந்த முறை இலகுவாக வலியகற்ற உபயோகிக்கப்படுகிறது.

இரண்டாவதாக Regional Anaesthesia என்பது உடலின் ஒரு பாகத்தை விறைக்க வைத்தல் ஆகும். இது பெரிய நரம்புகளுக்கோ அல்லது முள்ளந்தண்டுக்கு அண்மையாக மயக்கமருந்தை ஏற்றுவதன் மூலமாகவோ உணர்வழிக்கப்படுகின்றது, உதாரணமாக Spinal Anaesthesia என்னும் regiana Anaesthesa இன்று பெரும்பாலும் பல சத்திரசிகிச்சைகளுக்குக் கொடுக்கப்படுகிறது உதாரரணமாக, Caesarian Sectian எனப்படும் மகப்பேற்று சத்திரசிகிச்சையில் இதன் முறையே பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது இந்த முறையில் உடலின் வயிற்றுப் பாகமும் கால்களும் விறைத்த நிலையில் சத்திரசிகிச்சையை நோயின்றி மேற்கொள்ளும் போது நோயாளி உணர்வுடன்எம்முடன்உரையாடிக்கொண்டிருக்க முடியும் தன்குழந்தையையும் உடனடியாக பார்வையிடக் கூடியதாக இருக்கும்.

மூன்றாவதாக பொதுமயக்க மருந்து உணர்வழியியல் அல்லது General anaesthesia எனப்படுவது நோயாளியை ஒரு தற்காலிக தூக்கம் போன்ற நிலைக்கு உட் படுத்தி வலியின்றிசத்திரசிகிச்சையைமேற்கொள்வதாகும். இது நாளத்தினூடாக மருந்தை ஏற்றுவதன் மூலமாகவோ அல்லது மூச்சின் ஊடாக உள்ளிழுப்பதன் மூலமாகவோ பொதுமயக்கமருந்தின் போது உணர்வழிக்கவும் வலிய கற்றவும் மருந்துகள் ஏற்றப்படும். சிலவேளைகளில் சில சத்திரசிகிச்சைகளை இலகுவாக்கும் பொருட்டு (Muscle Relaxants) தசையிழக்கிகளும் பாவிக்கப்படும். இதன் போதுநோயாளிக்கு செயற்கைச்சுவாசம் அளிக்கப்படும். நோயாளியின் வாயினூடாகவோ மூக்கின் ஊடாகவோ ஒரு குழாய் போன்ற உபகரணம் (Endotrachel tube) அல்லது (LoryngealMark Away)செலுத்தப்பட்டு அதனூடாக ஒட்சிசனும் இதர வாயுக்களும் அனுப்பப்படும். மேலும் சத்திரசிகிச்சையின் வகை (Type) நேரம் (Duratian) பொறுத்து மேலதிக மருந்துகள் நாளத்தினூடாகவோ சுவாசத்தினூடாகவோ தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும். மேற்கூறிய பலவகைப்பட்ட உணர் வழியியலை மேற்கொள்ளும் மருத்துவரை நாம் Anaesthetist/Anaesthesiologists என அழைப்போம். இவர்களின்தரம்பலவழிகளில் வகைப்படுத்தப்படும். எந்த ஒரு மருத்துவரும் அவரது உள்ளகப்பயிற்சி (Internship) முடிந்ததும் Anaesthetist ஆகவரமுடியும் அதற்கு அவர் Consultant Anaesthetist இடம் ஆறுமாதகால பயிற்சைியைப் பெறவேண்டும். அதன்பின்பு அவரது அனுபவம் திறமை என்பவற்றைப் பொறுத்து மயக்கமருந்தை Consultant Anaestethist வழிகாட்டலில் வழங்க முடியும். Consultant Anaesthetist ஆக வருவதற்கு மேலதிக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான போட்டிப்பரீட்சை மருத்துவப்பட்டப் பின் படிப்புக்கான மருத்துவநிறுவனத்தினால்(Post Graduate of Institute of Medicen(PGIM) Colombo) நடாத்தப்படுகின்றது. இதில் தேர்வடையவர் மேலதிக பயிற்சிகளை கொழும்பிலும் மேலும் பல்வேறு பொதுவைத்தியசாலைகளிலும் மேற்கொள்ளமுடியும் மூன்றுவருடகால பயிற்சி முடிந்ததும் மீண்டும் ஒரு பரீட்சையில் சித்தியடைந்து வெளிநாட்டு வேலை அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

இப்படியாக பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணரினதும் மருத்துவர்களதும் பிரதான நோக்கமாக
இருப்பது நோயாளியின் பாதுகாப்பே ஆகும். ( Patient Safety) அதனால் எந்த ஒரு உணர்வழியியலும் மேற் கொள்ள முன்பும் (Pre Op)உணர்வழியிய லின் போது Intre Op உணர்வழியியலின் பின்பும் (postop) உணர்வழியியல்மருத்துவரின் கவனிப்பின் கீழ் நோயாளி இருப்பார். சத்திரசிகிச்சை ஆரம்பிக்க முன் அவர் உங்களை சத்திரசிகிச்சைக்குத்தகுதியானவர் தானா என பரிசோதிப்பார். இது அவசர மற்ற சத்திரசிகிச்சையாக இருக்கும்போது நீங்கள் உணர்வழியியல் Anaesthesio Clinicக்குப் போகும் படி அறிவுறுத்தப்படுவீர்கள் அங்குள்ள மருத்துவர்உங்கள்உடல்நிலையைப் பரிசோதித்துமேலதிகஇரத்தசோதனைகளையோ இதர சோதனைகளையோ (ECA CXR, ECHO EX)செய்யும்படிஅறிவுறுத்துவார். உங்களின்நீரிழிவுநோய் (Diabetics) உயர் குருதி அழுத்தம் (Blood Pressure) இருதய வருத்தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவிடத்து அவ்விசேட வைத்தியரின் ஆலோசனையைப் பெறும்படி அறிவுறுத்தப்படுவீர்கள்.

உணர்வழியியல் நாளன்று கடைப்பிடிக்கவேண்டிய உணவுதவிர்ப்பு (Fasting) பற்றி உங்களுக்கு அறிவுறுத்தப்படும். சாதாரணமாக திண்ம உணவுகளுக்கு ஆறு மணித்தியாலங்களும், திரவ உணவுகளுக்கு இரண்டுமணித்தியாலங்களும் கட்டுப்பாடு இருக்கும் ஆனால் பாலோ சோடாவோ இந்த திரவ உணவுகளுக்குள் அடங்க மாட்டாது. தற்செயலாக இந்த உணவுக்கட்டுப்பாடுமீறப்பட்டிருப்பின் உணவுக்கால்வாயினுள் தேங்கியிருக்கும் உணவு உணர்வழியியலின் போது சுவாசக்குழாயினுள் சென்று மூச்சுத்திணறல் ஏற்படும் பேராபத்து உள்ளது.

இதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் உணவுக் கட்டுப்பாடு பற்றிய அறிவுறுத்தல்களை கவனமாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு ஒவ்வொருபடியிலும் பாதுகாப்பை அதிகரித்து கண்ணும் கருத்துமாய் கவனித்துஉணர்வழியியலை மேற் கொள்ளும் போது உணர்வழியியல் ஆனது இன்று மிகவும் பாதுகாப்பான ஒன்றாகவே வளர்ச்சியடைந்துள்ளது.

இதன் வளர்ச்சிக்கு மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பயிற்சிகளும் ஆழமான அறிவாற்றலும் அயராத உழைப்பும் காரணமாக அமைகின்றன.

இதனால் இன்றைய காலகட்டத்தில்உணர்வழியியல் அபரிதமானவளர்ச்சியால் பல சவால்மிக்க சத்திரசிகிச்சைகளை மிகப்பாதுப்பாக ஓர் இனிய அனுபவமாக செய்யக்கூடியதாக மாற்றியுள்ளது.

உலக உணர்வழியியல் தினம் ஒக்ரோபர் 16

மருத்துவர் வசுமதி தேவநேசன்

Posted in கட்டுரைகள்
« பன்னாட்டு நீரிழிவு தினத்தை முன்னிட்டு போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு
தைரொயிட் சுரப்பி தொடர்பான நோய்களும் அதற்கான தீர்வுகளும். »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com