Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    March 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Nov    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



பெண்களில் ஏற்படும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள்

ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளை நோக்கும்போது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரேமாதிரியான பிரச்சினைகளே ஏற்படுகின்ற போதிலும் அவை பெண்களை வித்தியாசமான முறையில் பாதிக்கின்றன.

சிலநோய்நிலமைகள் உதாரணமாக மூட்டுவாதம் அதிகரித்த உடற்பருமன் மற்றும் மனஅழுத்தம் போன்றன. பெண்களை அதிகளவில் பாதிக்கின்றபோதிலும் சில நோய்நிலமைகள் பெண்களுக்கேதனித்துவமானவை.

பெண்கள் எப்பொழுதும் தங்களைச் சார்ந்தவர்களுடையநலனில் செலுத்தும் கவனத்தை சிறிதளவேனும் தமக்காகவும் செலுத்த வேண்டும். பெண்களுடைய நலன்பற்றிக்கருதும்போது அவர்களுடைய உடல்நலம் பற்றி மட்டும் சிந்திக்காது உள. மனநல ஆரோக்கியம் பற்றியும் சிந்தித்தல் அவசியமானதாகும்.

பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் ஒவ்வொரு வாழ்க்கைப்படிநிலைகளிலும் அவர்கள் எதிர்நோக்கும் சுகாதரம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் வேறுபடுகின்றன. உதாரணமாகக் குழந்தைப் பருவத்தை எடுத்துக் கொண்டால் போசாக்குக் குறைபாடு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் என்பவற்றைக்குறிப்பிடலாம்.

அடுத்துப் பதின்ம வயதுப் பருவத்தினை எடுத்துக்கொண்டால் மாதவிடாய்ப்பிரச்சினைகள் அதிகரித்த உடற்பருமன் போசாக்குக் குறைபாடு குருதிச்சோகை, இளவயதுக் கர்ப்பம் மற்றும் மன ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அடுத்து 20-44 வயதுப்பிரிவை எடுத்துக்கொண்டால் கர்ப்ப காலம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பிள்ளைப்பேறின்மை ஆகியன முக்கிய இடம் வகிக்கின்றன.

கர்ப்பகாலத்தில் ஏற்படும்பிரச்சினைகளில் முன்னணி வகிப்பவை நீரிழிவு நோய், உயர் குருதியழுத்தம் மற்றும் குருதிச்சோகை என்பனவாகும். எனினும் தகுந்த மருத்துவ வசதிகளை வழங்குவதன் மூலம் இந்த நோய் நிலமைகள் வெற்றி கொள்ளப்படுகின்றன.

தற்காலத்தில் பிள்ளைப் பேறின்மை (Subfertility) ஆனது பெண்களை வாட்டி வரும் நிலமையாக உள்ளது. இதற்கு ஆண், பெண் என இருபாலாரும் காரண மெனினும் பெண்களில் ஏற்படும் சில நோய்களான தைரொயிட் சுரப்பி தொடர்பான நோய்கள் சூலகத்தில் ஏற்படும் கட்டிகள் (Polycystic ovarian syndrome) மற்றும் சில நீண்டகால நோய் நிலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நாற்பத்தைந்து வயதிலும் கூடிய பெண்களைகருத்தில் கொள்ளும்போது எல்லாப் பெண்களிலும் நிகழும் உடற் தொழிலியல் சார்ந்த நிகழ்வாக மாதவி டாய் நிறுத்தம் (Menopause)ஐ குறிப்பிடலாம். இதன் ஆரம்ப கட்ட அறிகுறிகளாக இரவு நேரங்களில் அதிகளவில் வியர்த்தல், அடிக்கடி மனநிலமை மாற்றமடைதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மேலும் இந்த வயதுப் பிரிவினரிடையே பெண் நோயியல் சம்பந்தமான புற்றுநோய், உதாரணமாக சூலகப்புற்றுநோய் மார்பகப்புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் என்பன அதிகளவில் ஏற்பட வாய்ப்புண்டு. அத்துடன் இருதய நோய்கள் உயர்குருதியழுத்தம் நீரிழிவு என்பு தேய்வு மற்றும் மூட்டுவாதம்போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

பெண்கள் வாழ்நாள் முழுவதிலும் எதிர் கொள்கின்ற பிரச்சினைகள் ஆண்பெண் சமத்துவமின்மை, சமூகவியல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். எனவே பெண்கள் மேற்குறிப்பிட்டநோய்நிலமைகளைத் தீர்ப்பதற்கு மருத்துவ ஆலோசனை மற்றும் உதவிகளை நாடுவது அவசியம் எனினும் பெண்களின் தன்னம்பிக்கைக் குறைவு குறைந்த வருமானம், போதிய அறிவு கல்வியின்மை மற்றும் குடும்பப்பொறுப்புக்கள் ஆகியன தடைக்கற்களாக அமைகின்றன.

தற்காலசமுதாயத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்களாகத் தேவையற்ற கர்ப்பம் குழந்தைப்பேறின்மை புற்றுநோய், பெண்களுக்கெதிரான வன்முறை ஆகிய வற்றை குறிப்பிடலாம். எனவே வயது வேறுபாடின்றி அனைத்துப்பெண்களும்தமக்கு ஏற்படும் சவால்களை முறியடிப்பதற்குத்தகுந்த வழியில் செயற்படுவது அவசியமாகும்.

இந்த வகையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தல் முக்கிய இடம் பெறுகின்றது. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைப் பேணுதல், கிரமமாக உடற்பயிற்சிசெய்தல்,சீரானநித்திரை மனஉளைச்சலை சரியான முறையில் கையாளுதல் போன்ற ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகோலுகின்றன.

வயது வந்த அனைத்துப் பெண்களும் தமது ஊரிலுள்ள சுகவனி தையர் சிகிச்சை நிலையத்திற்கு சென்று சில நோய் நிலமைகளான நீரிழிவு உயர்குருதியழுத்தம், கொலஸ் ரோல் நோய் போன்றவற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆரம்பக்கட்டபரிசோதனைகளைச்செய்தல் அவசியமான தாகும்.

எனவே அனைத்துப் பெண்களும் தமக்கு ஏற்படும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளை சரியான வகையில் கண்டறிந்து அவற்றினைத் தீர்ப்பதற்கான வழிவகை களை மேற்கொள்வதன்மூலம் அவர்களின் ஆரோக்கிய மான எதிர்கால வாழ்வு நிர்ணயிக்கப்படும்.

நிரூஷிகா சோதிநாதன்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
யாழ்.போதனா வைத்தியசாலை

Posted in கட்டுரைகள்
« பழங்களின் அடிப்படை போசனைகள் , கனியுப்புக்கள் மற்றும் விற்றமின்கள்
துரித உணவுப் பாவனை ஆஸ்துமா, எக்சிமா நோயாபத்தை அதிகரிக்கும் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com