Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்ப்பது எப்படி?

நீரிழிவுநோய் அற்றவர்களை விட நீரிழிவு உள்ளவர்களுக்கு இருதயநோய்கள். மாரடைப்பு, பாரிசவாதம் போன்ற பல நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதற்கு பலகாரணங்கள் கூறப்படுகின்றன உதாரணமாக, நீரிழிவுடன் உயர்குருதி அமுக்கம், அதிக உடற்பருமன், புகைத்தல் பழக்கம், சிறுநீரக செயல்இழப்பு. தன்னாட்சி நரம்புத்தொகுதிபாதிப்புக்கள். நீரிழிவுடன் குருதிக்குழாய்களில் LDL கொலஸ்ரோல்படிதல், LDL கொலஸ்ரோலில் கிளைகேசன் செயற்பாடுகள், முச்சேர்மான கொழுப்பு Triglyceride இன் அதிகரித்த நிலை நீரிழிவுடன் குருதிச் சிதட்டுகளின் குவிதல் அதிகரிப்பும், பெருநாடியில் சுருக்கம், நீரிழிவுடன் குறைந்த HDL அளவு இரண்டாவது வகை நீரிழிமிவில் சிலருக்கு அதிகரித்த இன்சுலின் போன்ற வளர்ச்சிப் பொருளானது குருதிக் குழாய் நாடிகளின் மென்தசைகளில் ஊடுருவி அவற்றை பல்கிப் பெருகசெய்தல் போன்ற பல காரணங்களைக் கூறிக்கொண்டே போகலாம்.

நீரிழிவில் குளுக்கோசை தாங்கும் சக்தி சீரின்மை காரணமாகவும் பல வருடங்கள் நீரிழிவு நோயாளர்கள் குருதி யில் குளுக்கோசின் அளவைசீராக சரியான அளவில் பேணாமல் இருக்கும் சந்தர்ப்பங்களிலும் குருதிக் குழாய்களின் உட்பகுதியில் INTIMA இவைமென் மையான பகுதிகள் இவற்றின் சில இடங்களில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.அத்துடன் நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்களின் குருதியில் கொழுப்புத்தன்மை சற்று அதிகமாகவேகாணப்படும். இவைகளில் LDL கொலஸ் ரோல், முச்சேர்மானக்கொழுப்பு Trigly ceride இவைகள் மேற்படி பாதிக்கப்பட்ட குருதிக்குழாய்களின் உட்பகுதியில் படிதல் குருதிச் சிறு தட்டுக்கள் குவிதல்
போன்ற பல காரணங்களினால் நாளடைவில் சிறிது சிறிதாக வளர்ந்து இதனை அத்ரஸ்குளோ றோசிஸ் ATHEROS CLEROSIS என்று கூறுவர் ஈற்றில் இவை குருதியின் ஓட்டத்தைத் தடை செய்து விடும் இவற்றினால் – இருதயத் துக்கான நாடிகளில் Arteria சில நேரங்களில் இந்த இரத்தக் கட்டிகள் stigast Bloodclots உண்டாக வாய்ப்பு உண்டு இதயத்திற்குகுருதிவழங்கும் முக்கியநாடியான முடியுரு நாடியில் (Coronary Artery) யில் மேற்படி இந்த இரத்தக் கட்டிகள் உருவாகுமானால் இருதயம் செயற்படுவதற்கு தேவையான குருதி கிடைக்காமல் இதயதசைகள் நார்கள் இறக்கும் நிலை ஏற்படும். இதனை மாரடைப்பு (mgo cardial Infarction) எனக் கூறுவார்கள்.

இதேபோல் மூளைக்கு குருதியை எடுத்துச் செல்லும் முக்கிய நாடியான மூளைநாடியில் cerebral Artery தடை ஏற்படுமானால் மூளைக்கு குருதி செல் இதனைபாரிசவாதம்(Stroke)என்று கூறுவர்.எனவே நீரிழிவினால் பாதிக் கப்பட்டவர்களுக்கு தங்களின் நலம் பேணுவதில் அசட்டையாக இருப்பவர்களுக்கு. மேற்கூறிய பாதிப்புகளுக்கு சந்தர்ப்பம் உண்டு. எனவே இவற்றைத் தவிர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கு ஒரு சில வழிமுறைகள்

  1. குருதியில் இருக்கும் சிறுதட்டுக்கள் நீரிழிவு சில வேளைகளில் பசைபோன்றுஒட்டிக்கொள் கின்றது. இதயத்திற்கும் மூளைக்கும் குருதியைக் கொண்டு செல்லும் நாடிகளில் அடைப்புகள் ஏற்படும்போது மாரடைப்பு பாரிசவாதம் என அழைக்கப்படுகிறது. மேற்படி சிறுதட்டுக்கள் கட்டி யாகமாறுவதை தடுப் பதற்கு ஒட்டிக்கொள்ளும் தன்மையைகுறைப்பதற்கும்மருத்துவரின் பரிந்துரைக்கு அமைய குறைந்த அளவில் சில மருந்துகள் உதாரணம் அஸ்பிரின் போன்றவற்றை எடுக்க வேண்டி இருக்கும். எனினும் நோயாளிக்கு சத்திர சிகிச்சைகள் மற்றும் குருதிப் பரிசோதனைகள் மற்றும் சில உடல் பரிசோத னைகள் போன்றவற்றின் போது இந்த மருந்துகளை தற்காலிகமாக வைத்திய ஆலோசனைக்கு அமைய நிறுத்திவிட வேண்டும்.
  2. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் குருதியிலுள்ள கொழுப்பானது Total Chole sterol 200 mg/dl 5.9M.Mole க்குகுறைவாகவும் குறைந்தஅடர்த்திக்குருதிக்கொழுப்பானதுLDL. 100Mg/DLக்குகுறைவாகவும்  தீயருதிக்கொழுப்பு 2.6 MMole க்கு குறைவாகவும் அதிக அடர்த்திக் கொழுப்பு HDL >50 MGIDL நல்ல குருதிக் கொழுப்பு:16MMole/L க்குகூடவாகவும் முச்சேர்மொனக் கொழுப்பானது Trigle ceride <150 MG/DL or 1.7.M.Mol/L க்குமேல் அதிகரிக்காமல் நோயாளியின் உணவு முறை மருந்துகள் உள்ளெடுத்தல், உடற்பயிற்சி போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் மேற்படி இருதய பாதிப்புகள் பாரிசவாதம் போன்றன ஏற்படுவதை குறைக்கலாம்.
  3. நீரிழிவு நோயாளிகளின் குருதி அமுக்கமானது 130/80 MMHg இருதய சுருக்க அமுக்கம் (Systolic Blood Pressure) 130 MMHg இருதய விரிதல் குருதி அமுக்கம் (Diastolic. Blood Pressure) 80MMH அதாவது(130.80 MMHg)க்கு மேல் அதிகரிக்கா வண்ணம் நோயாளியின் உணவுமுறை மற்றும் குருதி அழுத்தங்களை குறைப்பதற்கான வழிமுறைகளை கையாளல் உதாரணம் தியானம் உடற் பயிற்ச்சி போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் குருதி அமுக்கத்தால் ஏற்படும் இருதய பாதிப்புகள் பாரிசவாதம் என்பவற்றைக்குறைக்க முடியும். நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் புகைப்பிடிப்பதினால் புகையிலையிலிருக்கும் நிக்கொட்டின் (Nicotine) என்ற இரசாயன பதார்த்தம் குருதியில் சேர்ந்து குருதியின் வெல்ல மட்டத்தை சீரான அளவில் பேண விடாது பல நோய்கள் உண்டாக வாய்ப்பு உண்டு. அத்துடன் தோலின் கீழ்பகுதியில் குருதியோட்டத்தை சீராக இயக்கமுடியாமல் தடுப்பதுமாத்திரமல்ல இன்சுலினை அகத்து உறிஞ்சுவதைக்கூடதடுத்து குருதியின் குளுக்கோசின் அளவை சீரான அளவில் வைத்திருக்க முடியாத நிலையை ஏற் படுத்திவிடும். இதனால் மாரடைப்பு, பாரிசவாதம் விழித்திரை, நரம்பியல்பாதிப்புகள், சிறுநீரகபாதிப் புகள் போன்ற பல பாதிப்புகள் ஏற்படவாய்ப்புண்டு.
  4. நீரிழிவு நோயாளிகளுக்கு குருதிக் கொழுப்பைக் குறைக்கும் நோக்கில் வைத்தியரினால் பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் ஸ்றற்றின் வகை மருந் துகள் (Statin) உதாரணம் அற்டோவஸ்ரறின் (atorvastatin) சிம்வஸ்றற்றின் (Sinvastatin) றோசுவற்றின் (Rosuvastatir) போன்றன குருதிக் குழாய்களின் உள்பகுதியில் குருதிக் கொழுப் பானது படியாமல் குருதிக்குழாய் கொழுப்பு படிவானது ஒட்டிக்கொள்ளாமல் (atherosclerosis) ஏற்படாமல் தடுத்துக் கொள்கின்றது அத்துடன்குருதியின் குறைந்த அடர்த்தியான (LDL) எனும் கொழுப்பின் அளவை குறைத்தும் அதிக அடர்த்தியுள்ள கொழுப்பின் (HDL) அளவை கூட்டியும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. உங்கள் பரம்பரையில் குருதி அமுக்கம், குருதிக் கொழுப்பானது அதிகம் உள்ளவராக இருப்பின், உதாரணம் உங்கள் தந்தை பாட்டன், அம்மா, அம்மம்மா.இந்த பரம் பரைமரபணுக்களால் தொடருகின்ற குருதி அமுக் கம் குருதிக் கொழுப்பை அத்துடன் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களால்வருகின்றகுருதிஅமுக்கம் அகம்சுரப்பு தொகுதியால் ஏற்படுகின்ற பாதிப்பு களால் வருகின்ற குருதி அமுக்கம் இவற்றிற்கு வைத்தியரின் சிபாரிசுக்கு அமைய மருந்துகளை தொடர்ந்து நீரிழிவு மருந்துகளுடன் சேர்த்து எடுப்பதன் மூலமும் உணவுமுறையில் அதிக நார்ச்சத்துள்ள மரக்கறிகள் மேல்தோலுடன்கூடிய எல்லாத் தானியங்கள், பழங்கள்.எடுத்தல் இறைச்சி, பால். முட்டை போன்றவற்றைகுறைவாக உள்ளெடுத்தல் சிறப்பானது. அத்துடன் அதிக இனிப்பு, உப்பு. கலோரி கூடிய உணவுகளை தவிர்த்தல் நல்லது.

ச.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்,
போதனாவைத்தியசாலை,
யாழ்ப்பாணம்.

Posted in கட்டுரைகள்
« தற்கொலை – வன்முறைகள் குறைக்கப்படக்கூடியவை?
செவியைப் பாதுகாப்போம்… »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com