நீரிழிவு வகை II நோயாளர்களுக்கு பல இனவகைகையச் சேர்ந்த புதுப்புது பல இனவகையைச் சேர்ந்த புதுப்புது மருந்து வகைகள் மிகச்சிறந்த நவீன ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுக் கொன்டே இருக்கின்றன. எனினும் இவை எல்லாவற்றுக்கும் மேல் சிகரம் வைத்தாற்போல் 60 – 70 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட டெற்போமின் மருந்து சிறந்ததாகவே தற்போதும் கருதப்படுகின்றது. இது பலதரபை்பட்ட விற்பனைப் பெயர்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.
இந்த வகை மருந்துகளில் பக்கவிளைவுகள், பின் விளைவுகள் குறைவானதுடன் குறைந்த விலையில் பெறக்கூடியதாகவும் இருக்கின்றன. அத்துடன் இந்த மருந்தானது இலங்கையில் மட்டும் மல்ல உலகிலேயே நீரிழிவு நோயாளர் வகை II க்கு மிக அதிகளவு பயன்படுத்தப்படுவதை அறிக்கூடியதாக இருக்கிறது. எனவே இந்த மருந்தைப் பற்றிய அறிவு சாதாரண மக்களுக்கும் இருப்பது நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் விழிப்புணர்வுக்கும் உறுதுணையாக இருக்கும்.
- உணவு சமிபாடு அடைந்தவுடன் குடலில் இருக்குமு் குளுக்கோஸை உறிஞ்சும் உறிஞ்சிகள் அதிக குளுக்கோஸை உறிஞ்சா வண்ணம் இருக்க மெற்போமின் மருந்து வகைகள் உதவுகின்றன.
- மேற்படி மருந்தானது இன்சுலின் எதிப்புச் சக்தியை குறைத்து இன்சுலின் உதவியுடன் குளுக்கோஸை கலங்களுக்கு மிக இலகுவில் செலுத்திவைக்கும் செயற்பாட்டை நடத்தி வருகின்றது. இதனால் உடலில் இருக்கும் தசைகள், தசைநார்குள் மற்றும் எல்லா வகையான உறுப்புகளின் கலங்களுக்கு இன்சுலின் உதவியுடன் திறமையான குளுக்கோஸை உட்புகுத்துவதால் இந்த மெற்போமின் மருந்து வகைகள் உடல் உறுப்புக்களின் செயற்றிறனை அதிகரிக்கின்றன.
- மெற்போமின் மருந்து வகைகள் இன்சுலின் சுரக்கும் தன்மையைக் கூட்டக்கூடியவை அல்ல. எனினும் எம்மில் சாதாரணமாச்சுரக்கும் இன்சுலினை திறம்படப்பயன்படுத்த உதவுகின்றன.
- மெற்போமின் பாவிக்கும் நோயாளர்களுக்கு அதிக பசி ஏற்ப்டாது. இவர்களின் குருதியில் வெல்ல மட்டம் அதிரித்தாலும் இவர்களின் எடையில் மாற்றம் இருக்காது. அத்துடன் இவர்களுக்கு குருதிக் குளுக்கோஸ் மட்டம் குறைந்த நிலை (Hypoglycemia) ஏற்படும் வாய்ப்புக்களும் குறைவு.
- இந்த வகை மருந்துகளுடன் வேறு இனத்தைச் சேர்ந்த மருந்துகளையும் கூட்டாக உபயோகிக்க முடியும். உதாரணம் இன்சுலின் மற்றும் இன்சுலின் தூண்டி வகையான மருந்துகள் இதனால் குருதியில் குளுக்கோஸ் மட்ட அளவை சரியான அளவில் பேணமுடியும்.
- மெற்போமின் வகை ( Biguanides) மருந்துகள், எமது கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியைக்குறைப்பதுடன், சதையத்தால் சுரக்கப் படும் இன்சுலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யவல்லவை. அதாவது கலங்கள் உறுப்புக்களில் குளுக்கோஸின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்கின்றன.
- மது அருந்தியவர்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த மருந்தைப் பாவிப்பதை தவிர்க்க வேண்டும். இது பற்றிய விவரங்களை மருத்துவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
- மெற்போமின் பாவிக்கும் நோயாளிகள், வருடத்திற்கு ஒருமுறையாவது ஈரல் சம்பந்தமான பரிசோதனைகள், ECG சிறுநீரகம் சம்பந்தமான பரிசோதனைகள் செய்வது அவசியம். மெற்போமின் எடுக்க ஆரம்பிக்கும் போது சிலருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுளைவு, வயிற்றுக் குமட்டல் மற்றும் அதிகளவு வாயு போதல் போன்ற சமிபா்டுத் தொகுதி சம்பந்தமான சிக்கல்கள் தோன்றலாம். மெற்போமினைப் பாவிப்பதைச் சிறியளவில் ஆரம்பித்து படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் மேற்கூறிய பக்கவிளைவுகளைக் குறைக்கலாம். தொடர்ந்தும் இவ்வாறு செய்யும் போது, வயிற்றுப் பிரச்சினைகள் தொடர்ந்தும் இருந்தால் மெற்போமினை மெதுவாக வெளிவிடும் Slow Release (SR) போன்ற மருந்துகளை பாவித்துக்கொள்ளலாம்.
- மிகமிகச் சிலருக்கு மெபோமின் மருந்துகளின் செயற்பாடுகள் உடலில் முடிவடைந்த பின்பு கழிவு மெற்போமின் உடலில் இருந்து அகற்றப் படவேண்டும். அதாவது ( Lactic Acid) லரிக் அசிட் எனும் இரசாயனப் பதார்த்தம் உடலில் அதிகரிப்பதால் லக்ரிக் அசிடோசிஸ் எனும் நிலை ஏற்படலாம். எனினும் இது மிக மிக அரி ஒரு பக்கவிளைவாகும்.
- உடல் பருமன் உள்ளவர்களும் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கவும் தள்ளிப்போடவும் எடையை குறைக்கவும் மெற்போமின் பயன்படுத்தப்படுகின்றது. பொலிசிஸ்ரிக் ஓவரி ( Polycystic Ovarian syndrame) எனப்படும் மாதவிடாய் பிரச்சினையுள்ள, உடல் பருமனான பெண்களுக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்படுகின்றது. இது அவர்களில் முட்டை வெளியாதலை ( Ovulation) தூண்டுவதோடு உடற்பருமனைக் குறைக்கவும் உதவுகின்றது.
- மெற்போபின் மருந்தானது சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தவறான அபிப்பிராயம் மக்களிடையே உள்ளது. உண்மையில் இது சிறுநீரகம் பாதிப்படையாமல் தடுக்கும் ஒரு மருந்தாகும். உலகளாவிய ரிதீயில் அங்கீகரிக்கப்பட்ட முதற்தர (1st line) நீரிழிவு மருந்து மெற்போபின் ஆகும். நீரிழிவு நோயாளரொருவரின் சிறுநீரகத் தொழிற்பாடுகுறிப்பிட்ட ஒர் அளவைவிட பழுதடையும் போது வைத்தியர்கள் நோயாளியின் மெற்போமின் அளவை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ வேண்டி ஏற்படுகின்றது.
ச.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்.
யாழ் போதனா வைத்தியசாலை