நச்சு நீக்கல் சிகிச்சையானது பொதுவாக ஒரு பொது மருத்துவ விடுதியிலேயே நடைபெறும். இதன்போது,
- மதுவை விடுவதனால், உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய அறிகுறிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் மாத்திரைகளாகவோ, ஊசி மூலமோ உடலில் சேர்க்கப்படும்.
- மதுவைத் தொடர்ந்து பாவிப்பதனாலும், சாப்பாடுகளில் கவனமில்லாமல் இருப் பதனாலும், ஏற்படக்கூடிய விற்றமின் குறைபாடு களை நீக்குவதற்காக சக்தி வாய்ந்த விற்றமின் மருந்துகள் கொடுக்கப்படும்.
- ஏற்கனவே நித்திரையின்மையும், ஏனைய குழப்பமான மனநிலைமையும் தோன்றியிருந்தால் அவற்றைச் சீர்செய்வதற் குரிய மருந்துகள் பாவிக்கட்டும்.
- இவற்றைவிட மதுவினால் ஏற்பட்டி ருககக் கூடிய ஏனைய உடல் சார்ந்த பிரச்சி னைகளான ஈரல் பாதிப்பு, இதயம் சம்பந் தமான பிரச்சினைகள், கிருமித்தொற்றுக்கள் போன்றன இருப்பின் அவையும் முறையாகப் பரிசோதிக்கப்பட்டு, தேவையான சிகிச்சைகள் அளிக்கப் படும்.
- நச்சு நீக்கல் சிகிச்சை பெறுகின்ற ஒருவர் சாதாரணமாக மூன்று தொடக்கம் ஏழு நாட்களுக்குள் எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டுச் சுகம் பெறலாம்.
- நச்சு நீக்கல் சிகிச்சையைத் தொடர்ந்து, மதுவக்கு அடிமையான ஒருவர் தனது வழமை யான நிலைமைக்கு வந்துவிடுவர்.
ஆயினும், அவர் தொடர்ந்தும் மதுவை நாடாது, தனது மதுப்பழக்கத்திலிருந்து பூரண மாக விடுபட விரும்பினால், அந்த விருப்பத் திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக அவர் கடு மையான முயற்சிகள் எடுக்க வேண்டிவரும். முக்கியமாக அவர் சிறிது காலத்திற்குத் தனது வழமையான வாழ்க்கைச் சூழலிலிருந்து விலகி, தன்னைப் போன்றே மதுவை விட விரும்பும் ஏனைய நண்பர்களுடன் சேர்ந்து, மருத்துவப் பராமரிப்பும், உளவியல் பரா மரிப்பும், புனருத்தாரணமும் கிடைக்கக் கூடிய ஒரு இடத்தில் தங்கிநிற்க வேண்டும்.
அவ்வாறான ஒரு இடத்தில் தங்கி நின்று தனக்குத் தேவையான சிகிச்சைகளைப் பெறுவதுடன் , தன்னைப் புதியதோர் வாழ்க்கை முறைமைக்கு மாற்றிக் கொள்வதும் அவசியமானது.
மதுவுக்கு அடிமையாகிப்போன ஒருவர். இப் போது அதனுடைய பிரச்சினைகளை உணர்ந்து, தனது சுயவிருப்பத்துடன் மதுவை நிறுத்த எண்ணினால் அவர் ஒரு புனர்வாழ்வு நிலை யத்தில் தங்கிநின்று தனது எதிர்காலத்தை மாற்றியமைக்கலாம். ஒருவர் இவ்வாறு தங்கி நின்று புனர்வாழ்வு பெறுகின்ற வேளை அவருக்குக் கிடைக்கப் பெறுகின்ற சிகிச்சைப் படி முறைகளாகப் பின்வருவன அமைந்துள்ளன.
- இவ்வாறான ஒரு நிலையத்தில் அவர் குறைந்தது இரண்டு கிழமைகள் வரை தங்கி நின்று சிகிச்சை பெற வேண்டிய தேவை உள்ளது. அவருக்கு ஆதரவாக அவரது மனைவி, சகோதரர்கள், நண்பர்கள் அல்லது உறவினர் கள் அடிக்கடி வந்து போகலாம். இவ்வாறான குடும்ப ஆதரவு அவருக்கு மிகவும் பயனுள்ள தாக அமையும்.
- இங்கு மதுவுக்கு அடிமையாக இருந்த ஒருவர் மதுவிலிருந்து பூரணமாக விடுபடுதலை இலக்காகக் கொண்ட உளவளத்துணை வழங்கப்படும். உளவளத்துணை அமர்வுக ளின் போது, ஒருவர் மதுவோடு கொண்டிருக்கின்ற பிணைப்புகள், மதுவை நாடும் காரணங்கள், அதிலிருந்து மீளும் போது அவருக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகள், அவற்றை எதிர் கொள்ளக்கூடிய வழிவகைகள், அவருடைய பலங்கள் – பலவீனங்கள் போன்ற விடயங்கள் ஆராயப்படும்.
- மதுவுக்கு அடிமையான ஒருவரின் உளநிலைக்கு இங்கே முக்கியத்துவம் கொடுக் கப்படும். அவர் மதுவுக்கு அடிமையாக இருந்தார் என்பதற்கு அப்பால் அவருக்கு ஏதாவது உளப்பிரச்சினைகள், உளநோய்கள் இருக்கின்றனவா? என ஆராய்ந்து பார்க்கப்பட்டுத் தேவையெனின் பொருத்தமான சிகிச்சைகள் அளிக்கப்படும்.
- மதுவை விட்டு விலக விரும்பும் ஒருவர் தனது எதிர்காலத்தை ஆரோக்கியமாகவும் சுபீட்சமாகவும் வடிவமைப்பதற்கான திட்டங் களை உருவாக்கவும், அதற்கான உதவி, ஆதரவு மற்றும் வளங்களைத் திரட்டவும் இங்கே ஊக்குவிக்கப்படும்.
- புனர்வாழ்வுச் சிகிச்சை நிலைய்த்தில் தங்கி நிற்கின்ற காலத்தில், மதுவுக்கு அடிமை யான தமது கணவர்களது குடியினால் அல்லற் பட்டு, உதவியற்று, கையறுநிலைக்கு ஆளாகி இருக்கின்ற மனைவிமார்களுக்கான உளவள த்துணையும் வழிகாட்டல்களும் வழங்கப் படும். மேலும் இம்மனைவிமார் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் களம் அமைக்கப்படும்.
- இவற்றோடு மதுவுக்கு அடிமையான ஒருவரின் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கான உளவளத்துணையும், வழிகாட்டல் ஆலோசனைகளும் வழங்கப்படும். அத்துடன் அவர்களது எதிர்காலம் பிரகாசமாக அமைவ தற்கான திட்டமிடல் முயற்சிகளும் தேவை யான சிபாரிசுகளும் மேற்கொள்ளப்படும்.
- இவற்றோடு மதுவை விட்டோர் குழுக் களாக இணைந்து அறிவு பெறும், அனுபவம் பகிரும் குழுச்சிகிச்சையும் நடைபெறும். இந்தக் குழுச்சிகிச்சையானது Alcoholic Anonymous (AA) என்ற உலகளாவிய அமைப்பினருடைய கொள்கைகளை அடியொற்றியும், நீண்ட காலமாகப் பெற்ற அனுபவங்களை உள்வாங் கியும் நடத்தப்படும்.
இந்தச் சிகிச்சைகள், தலையீடுகள் அனைத்தும் அனுபவமும், நிபுணத்துவமும் வாய்ந்த மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், புனர்வாழ்வுப் பணியாளர்கள், உளவளத் துணையாளர்கள், சமூக சேவையாளர்கள் போன்றவர்களால் வழங்கப்படும்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014