மனித சமுதாயத்தைப் பெரிதும் பாதித்துப் பல லட்சக் கணக்கான மக்கள் இறப் பதற்குக் காரணமான கொடிய நோய்கள் இரண்டு. அவையாவன, எயிட்ஸ் மற்றும் புற்றுநோயாகும். மனித சமுதாயத்துக்குச் சவாலாக இருக் கும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நிகழ்கின்றன.
இந்த ஆராய்ச்சிகளின் பயனாகப் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு அதிநவீன பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறையில் ஏற்பட்டுள்ள புதியமுறைகள் முன்னேற்றங்களால் இது சாத்தியமானது.
எனினும், பெரும்பாலான மக்களிடையே புற்றுநோய் ஒரு குணப்படுத்த முடியாதநோய்என்ற கருத்துநிலவுகிறது. இந்த நோயைப் பற்றி முழுவிவரமும் அறிந்து கொண்டால் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும். புற்றுநோய் என்பது உடலில் உள்ள கலங்களின் கட்டுப்பாடற்ற அபரிமிதமான அல்லது அதீத வளர்ச்சியாகும்.
புற்றுநோய் கட்டிகளாகவும் இருக்கலாம் அல்லது ஆறாத புண்களாகவும் இருக்கலாம். புற்றுநோயில் பல வகைகள் உண்டு. தலை முதல் கால் வரை எந்தப்பாகத்தையும் தாக்கலாம். இருப்பினும் தலை மற்றும் கழுத்துப் பகுதியிலும் உணவுக் கால் வாயிலும், குருதியிலும், சுவாசப்பையிலும் வரும் புற்றுநோய் ஆண், பெண் இருபாலாரையும் கர்ப்பப்பை, சூலகம்.மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய் பெண்களையும் அதிகமாகத் தாக்கு கின்றது.
இதன் பொதுவான அபாய அறிகுறிகளாவன:
- நாள்பட்ட ஆறாத புண்
- மார்பகம் அல்லது வேறு உறுப்புக்களில் வலியுள்ள அல்லது வலியற்ற கட்டி ,
- உடலின் எப்பாகத்திலாவது நிறம் அல்லது உருவமாற்றம்
- நாள்பட்ட இருமல் அல்லது குரல் மாற்றம்
- உணவு உண்ணுதலில் தடை
- உடலில் எந்தப் பகுதியிலாவது நீர் அல்லது இரத்தக் கசிவு
- சிறுநீர், மலம் கழித்தல் போன்ற வழக் கங்களில் மாற்றம் போன்றவை அமையலாம் அல்லது ஏற்படலாம்.
இது எந்த வயதினரையும் தாக்கக்கூடியது. புற்றுநோய் ஒரு தொற்றுநோயல்ல. பெரும்பாலும் நாம் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறையும் பழக்க வழக்கங்களுமே நோய் ஏற்படக் காரணமா கின்றன. உதாரணமாக புகையிலை, புகைப்பிடித்தல், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு உண்ணும் பழக்கமுள்ள வர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்.
சிலவகைப்புற்றுநோய்பரம்பரையாகவும் வருவதுண்டு பெற்றோரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ இருந்தால் குழந்தைகளுக்கு இந்த நோய்வரும் வாய்ப்புக்கள் அதிகம். புற்றுநோய் தொடக்க நிலையில் ஒருவரைப் பார்த்த உடனேயே அவர் புற்றுநோயாளி என்று கூறமுடியாது. முற்றிய நிலையில் ஏற்படும் சிலகுறிகளை வைத்து மட்டுமே அடையாளம் காணமுடியும். எனவே அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது ஒன்றுதான் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் வழியாகும். புற்றுநோய் ஏற்படக் குறிப்பிட்டஎந்த வொரு வகை உணவும் காரணம் என்று இதுவரை அறியப்படவில் லை. எனினும் நார்ச்சத்து அதிகமுள்ள பச்சைக் காய்கறிகள், பழங்களை அதி களவில் சேர்த்துக் கொண்டால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புக்கள் குறையும்.
நோயின் தொடக்க நிலையில் வலி அல்லது நோ இருக்காது. என்பு நரம்புகளில் பரவும்போது மட்டுமே வலி ஏற்படும். குருதிப்போக்கு இருந்தால் மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை _ பெறுவது அவசியம்.
சரியான முறையில் உரிய சிகிச்சை செய்தால் புற்று நோயாளியும் மற்றவர்கள் போல இயல் பாக வாழமுடியும். ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளித் தால் 80-90 வீதமான நோய்களை முற் றாகக் குணப்படுத்த முடியும்.
பெண்களுக்கு (Pap smea) சோதனை மூலம் கருப்பை வாய்ப் புற்று நோய் கண்டறியப்பட்டால் அறுவைச் சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மூலம் முற்றாகக்குணப்படுத்த முடியும் புற்றுநோய்க்கு ஒழுங்காகச் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை புற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் அவருக்கு மீண்டும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. எனினும் சிலவகைப் புற்றுநோய் 10-20 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் வரவாய்ப்புண்டு. எனவே, முற்றிலும் குணமடைந்தாலும் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறைபரிசோதனை செய்தல் அவசியமாகும்.
கருப்பை வாய்ப்புற்றுநோய்
போதியளவு விழிப்புணர்வு இல்லாதது. இளம் வயதில் திருமணம் செய்து பலமுறை கர்ப்பம் தரிப்பது கருத்தடை மாத்திரை அதிகளவு உபயோகித்தல், பல ஆண்களுடன் உறவு கொள்ளல், பிறப்புறுப்புக்களை சுத்தமாக வைக்காத காரணங்களால் இந்த நோய் ஏற்படுவதற் கான வாய்ப்பு அதிகம்.
இதன்அறிகுறிகளாக, மாதவிடாயின்போது அதிக குருதி வெளியே றல் மாதவிடாய்க் காலப்பகுதியில் குருதி வெளியேறல், உடலுறவின் முன்பு, உடலுறவின்போதுகுருதிகசிதல் என்பன அமையலாம். இதனை ஆரம்பத்திலறிய எளிய பரிசோதனையாகிய (Pap smea)செய்யலாம். முப்பது வயதுக்கு மேற்பட்டபெண்கள் ஆண்டுக்கு ஒரு தடவை இந்தப் பரிசோதனை செய்தல் நன்று.
சிகிச்சையாக கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும். நோய் நிலைக்கேற்ப அளவு காலம் என்பன மாறுபடும். மார்பகப் புற்றுநோய் என்பது வெறும் புற்று நோய் மட்டுமல்ல. அது பெண்மை சம் பந்தப்பட்டதாகவும் பாலியல் சம்பந் தப்பட்டதாகவும் உடல் அழகுடன் சம் பந்தப்பட்டதாகவும் இருப்பதால் அது பெரும் துன்பத்தோடு மன உளைச் சலையும் கொடுக்கக்கூடிய நோயாகும். இது மார்பகத்தில் ஒரு சிறுகட்டியாக ஆரம்பித்து சிறிது சிறிதாக வளர்ந்து மார்பகத்தோல், முலைக்காம்புகளிடையே பரவுகின்றது.
நேரடியாக உட்புறமாக வளர்ந்து, மார்பகத்தின் பின்புறம் உள்ளதசைகளில் பரவுகிறது. அதுதவிர நிணநீர்வழியாக அக்குளிடையே பரவிப் பல நிணநீர் முடிச்சுக்களுள் பரவுகின்றது. அத்துடன் குருதியூடாக உடலில் பல பாகங்களுக்கும் பரவலாம். பல ஆய்வுகள் மூலம் இது ஏற்பட மிக வாய்ப்புடையவர்களாக கருதப்படுவோர்.
- கருத்தடை மாத்திரை அதிகளவு உட்கொள்ளும் பெண்கள்
- குழந்தை இல்லாத பெண்கள்
- தாய்ப்பாலூட்டாதோர்
- சிறுவயதில் பூப்படைந்தோர்
- மிகத்தாமதமாக மாதவிடாய் நிற்பவர்கள்
- குடும்பத்தில் தாய், சகோதரி புற்று நோயால் பாதிக்கப்பட்டோர்.
- மது அருந்தும் பெண்கள்
- கொழுப்புணவு அதிகம் உண்போர்
- அசைவ உணவு உண்போர்
இதன் அறிகுறிகளாக அமைவன:
- மார்பகக் கட்டி
- முலைக்காம்பு வெடிப்பு
- மார்பகத்தில் வீக்கம், வலி, நீர் இரத்தம் வடிதல் அல்லது கசிதல்
- மார்பு பெருத்து இரு மார்பகங்களும் வெவ்வேறு நிலையில் இருத்தல்
முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒருமுறை யாவது மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனையும் மாதம் ஒரு தடவை சுயமார்புப் பரிசோத னையும் செய்தல் அவசியமாகும்.
இதன் சிகிச்சையாகக் கதிரி யக்க சிகிச்சை அறுவை மருத்துவ சிகிச்சை செய்யப்படும். பொதுவாகப் புற்றுநோய்க்குமூன்று வகைச் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
- கதிரியக்க சிகிச்சை
- அறுவைச் சிகிச்சை,
- மருத்துவ சிகிச்சை
புற்றுநோயாளிகளில் 80 வீதமான நோயாளிகளுக்குக் கதிரியக்க சிகிச்சை தேவைப்படுகின்றது. இது முதன்மைச் சிகிச்சைகளுடன் சேர்த்து நோயின் தன்மை அது பரவியிருக்கும் நிலைக்கு ஏற்ப அளிக்கப்படும்.
பத்துக்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் நம் நாட்டில் காணப்பட்டாலும் பெண்களை அதிகம் துன்புறுத்துவது கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் ஆகியனவாகும்.
இருபாலாரையும் அதிகம் தாக்கக்கூடியது வாய்ப்புற்று நோயாகும். இந்த மூன்று வகைப் புற்று நோய்களும் மிகக் கொடிய உயிர்கொல்லிகள் என்றாலும் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டால் குணப்படுத்தக் கூடியவையே
எனவே, இந்தப் புற்றுநோய் பற்றிய அபரிமிதமான விழிப்புணர்வே எம்மக்களை இந்தக் கொடிய நோயிலிருந்துவிடுவிக்க இலகுவான வழியாகும்.
திருமதி சதானந்தி நந்தகுமார்
தாதியப் போதனாசிரியர்,
யாழ் தாதியர் கல்லூரி