புரத மரக்கறி கூழ்
செய்முறை
மரக்கறிகளை கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி பாத்திரத்தில் இடவும். நனைத்த துவரம்பருப்பை சேர்த்து நன்றாக அவிய விடவும். அவிந்து நீர்வற்றி வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி கலவையை மசித்தல் வேண்டும். பின் உப்பு, மிளகு, மஞ்சள் தூள், சீரகத்தூள், சேர்த்து மீண்டும் சிறிது சூடாக்கி கூழ்பதம் வரும் போது இறக்கவும். ஆறியதும் தேசிப்புளி சேர்த்து பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்
கரட் | 1 |
கோவா | சிறிய துண்டு |
துவரம் பருப்பு | 100 கிராம் |
லீக்ஸ் | 1 |
வெண்டிக்காய் | 1 |
முருங்கை இலை | ஒரு கைபிடி அளவு |
வல்லாரை | ஒரு கைபிடி அளவு |
பூசணிக்காய் | சிறிய துண்டு |
போஞ்சி | சிறிதளவு |
வெங்காயம் | சிறிதளவு |
எலும்பிச்சம்பழச்சாறு | தேவையானளவு |
பூண்டு | 1 பல்லு |
மிளகுதூள், உப்புத்தூள் | சிறிதளவு |
மஞ்சள்தூள், சீரகப்பொடி | சிறிதளவு |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வி.திபோஜினி நவீந்திரன்
Posted in சிந்தனைக்கு