செய்முறை
பயறை முளைக்க விடவும் ( நனைத்து) உழுத்தம் பருப்பு, கௌபி, என்பவற்றை ஊற விட்டு கழுவு கிரைண்டரில் அரைக்கவும். பயறையும் அரைக்கவும், முட்டையை நன்கு அடிக்கவும். அப்பச்சோடாவையும் சேர்த்து அடிக்கவும். அரைத்த தானியம் முட்டைக்கலவை இரண்டையும் சேர்த்து கலந்து நான்கு மணிநேரம் வைக்கவும் (புளிப்பதற்கு) வெங்காயம், மிளகாய் தாளித்து கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். மாக்கலவைக்குள் தானியம், உப்பு. மிளகு, சீரகத்துடன், யாவும் சேர்த்து கலந்து இட்லிச்சட்டியில் ஊற்றி அவிக்கவும்.
தேவையான பொருட்கள்
பயறு | 100 கிராம் |
உ.பருப்பு | 200 கிராம் |
கௌபி | 200 கிராம் |
முட்டை | 4 |
அப்பச்சோட | ½தே.க |
மிளகு சீரகப்பொடி | ½தே.க |
உப்பு | தேவையானளவு |
வெங்காயம், செத்தல் | தேவையானளவு |
பெருஞ்சீரகம், கடுகு | தேவையானளவு |
கறிவேப்பிலை | தேவையானளவு |
நல்லெண்ணெய் | 3 மே. க |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி. கோமதி சிவதாஸ்