செய்முறை
உருழைக்கிழங்கையும் இறைச்சியையும் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு உருளைக்கிழங்கையும், இறைச்சியையும் போட்டு அவிக்கவும். பின்னர் வெட்டிய போஞ்சி, கரட், பெரிய வெங்காயம், பூடு என்பவற்றை Anchor பாலில் போட்டு அரைப்பதத்தில் அவித்து எடுக்கவும். அவித்த உருளைக்கிழங்கு, இறைச்சி என்பவற்றுடன் இதனையும் சேர்த்து மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்துக் கிளறவும்.
தேவையான பொருட்கள்
கோழியிறைச்சி – 200 கிராம்
போஞ்சி – 150 கிராம்
உருளைக்கிழங்கு – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 2
கரட் – 3
பூடு – 2 பல்
பால் ( Anchor) – ½கோப்பை
மிளகு தூள் – சிறிதளவு
உப்புத்தூள் – சிறிதளவு
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வி.டொலறோஸ் ஞானப்பிரகாசம்