செய்முறை
முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் இடவும். கரட், போஞ்சி, உருளைக்கிழங்கு சிறிய துண்டங்களாக ஆக்கி நீர் விட்டு அவிக்கவும். வெட்டிய உள்ளி, வெங்காயம் பச்சை மிளாகாய், இஞ்சி, பூண்டு விழுது, மற்றும் அவித்த மரக்கறி, கறிவேப்பிலை உப்பு அனைத்தயையும் ஒரு பாத்திரத்தில் இடவும், முட்டையை நன்கு அடித்த பின் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கி அதனுள் கறிவேப்பளை போடவும். பின்பு தோசைத்தட்டில் எண்ணெய் பூசி இக்கலவையை இடவும். ஓரமாக எண்ணெய் விட்டு வேகிய பின்பு திருப்பிப் போட்டு இறக்கிப் பரிமாறவும்.
தேவையான பொருட்கள்
முட்டை | 2 |
உருளைக்கிழங்கு | 1 |
கரட் | 1 |
போஞ்சி | 100 கிராம் |
உள்ளி | 3பல் |
வெங்காயம் | 10 |
பச்சை மிளகாய் | 5 |
மிளகுதூள் | சிறிதளவு |
உப்பு | சிறிதளவு |
இஞ்சி விழுது | தேவையானளவு |
எண்ணெய் | 1 மே.கரண்டி |
இலைவகை | விரும்பினால் சேர்க்கலாம் |
கறிவேப்பிலை | தேவையானளவு |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி ஜனார்த்தனி கேசவன்.