இலங்கையில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை அந்தக்காலப் பகுதியில் காணப்படவில்லை. இந்த நிலையில் இலங்கையில் பேச்சு மொழிச் சிகிச்சையின் முக்கியத்துவத்தை உணர்ச்த Harry wicondan இலங்கையில் பேச்சு மொழிச் சிகிச்சையாளர்களை உருவாக்குவதன் மூலமாக பேச்சு மற்றும் மொழி பிரச்சினை உடையவர்களுக்கு போதுமான சிகிச்சையை வழங்க முடியும் என எண்ணினார். அத்தோடு அவருடைய எண்ணத்தில் உதித்த சிந்தனையை செயல் வடிவமாகவும் மாற்றியமைத்தார். ஆரம்பத்தில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை டிப்ளோமா பாட நெறியை ஆரம்பிப்பதற்கு அனைத்து தயார்ப்படுத்தல்களையும் திட்டமிட்டு மேற்கொண்டு இலங்கை அரசின் உதவியுடள் களனி பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பாட நெறியை ஆரம்பித்து வைத்தார். அன்று அவரால் ஆரம்பிக்கப்பட்ட டிப்ளோமா பாடநெறியானது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு இன்று B.Sc degree programme ஆக நான்கு வருடங்களை கொண்ட கற்கை நெறியாக களனிப் பல்கலைக்கழக, மருத்துவ பீடத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. இது வரையில் மூன்று கட்டமாக கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்கள் வெளியேறி உள்ளனர் என்பது விசேடமாகவும், மகிழ்ச்சியாகவும் குறிப்பிடப்படக் கூடிய ஒரு விடயமாகும். தொழில் வாண்மையாக பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளர்கள் கொழும்பு பிரதேசத்தை அண்டிய தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளிலும், தனியார் பாடசாலைகளிலும் தமது சேவைகளை வழங்கி வருகின்றனர். எனினும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளரிடையே தேவை அதிகமாகக் காணப்பட்டாலும் அதற்கான நிரந்தர ஆளணியினர் போதியளவு இல்லாதது இங்கு குறிப்பிடத்தக்கது.
பேச்சு மற்றும் மொழி சிகிச்சை சேவைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியவர்கள்
குழந்தைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் கருவில் வளர ஆரம்பிக்கும்பொழுது, பிரசவத்தின்போது மற்றும் அவர்கள் பிறந்ததன் பிற்பட்ட காலப்பகுதிகளில் அவர்களுடைய மூளையின் வளர்ச்சியில் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பேச்சு, மொழி, தொடர்பாடல் மற்றும் உணவை விழுங்குவதில் குறைபாடு உடையவர்களாக வருவதற்கு காரணமாக அமைகின்றது.
வயது வந்தவர்களைப் பொறுத்த வரையில் அவர்களு்கு ஏற்படுகின்ற பாரிசவாதம், மூளையில் ஏற்படுகின்ற காயம், மூளைக் கட்டி மற்றும் தலையில் ஏற்படுகின்ற காயம், ஆகியன பேச்சு, மொழி தொடர்பாடல் மற்றும் விழுங்குவதில் பிரச்சினை உடையவர்களாக மாற்றுவதற்கு காரணங்களாக அமைகின்றன.
சிறுவர்களில்.
- விழுங்குவதில் பிரச்சினைகள் ( Swallowing difficulties)
- பிளவு பட்ட உதடு, அண்ணம் ( Cleftlip and palate)
- தாமதமான மொழிவிருத்தி ( Speech and Language delay)
- எழுதுதல் அல்லது வாசிப்பதில் பிரச்சினைகள்
- முடக்கு வாதம் ( Cerebral palsy)
- தவறான உச்சரிப்பு பிரயோகங்கள் ( Articulation difficultes)
- காது கேட்பதில் பிரச்சினைகள் ( Hearing imparrments)
- திக்குதல் ( Autism)
- குரல் சார்ந்த பிரச்சினைகள் ( Voice Problem)
- நுண்ணறிவு மட்டம் குறைந்த பிள்ளைகள் ( Learning diffculty)
- உடல்ரீதியான அங்கவீனம் உள்ள பிள்ளைகள்
- அனைத்து விருத்திகளும் தாமதமான பிள்ளைகள் ( Global developmental delay)
வளர்ந்தோரில்.
- மொழி சார்ந்த பிரச்சினைகள் ( Aphasia)
- தசைப் பலவீனம் காரணமாக ஏற்படும் தவறான உச்சரிப்பு பிரயோகங்கள் ( Dysarthria)
- தசைகளின் ஒருங்கிணைப்பில் ஏற்படும் பிரச்சினைகள் ( Dyspraxia)
- விழுங்குவதில் ஏற்படும் பிரச்சினைகள் ( Swallowing diffculties)
- நுண்ணறிவு மட்டம் குறைந்தவர்கள் ( Learning Diffculties)
- அதிகரித்துச் செல்லும் நோய் நிலமைகள் ( Denentia, Parkinsons)
- குரல் சார்ந்த பிரச்சினைகள் ( Voice Problems)
- தலை, கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்
- திக்குதல் ( Stuttering)
பேச்சு மொழி சிகிச்சை சேவைகளை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்
- அரச அல்லது தனியார் வைத்தியசாலைகள்
- அரச அல்லது தனியார் பாடசாலைகள்
- கனிஷ்ட, சிரேஷ்ட பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள்
- முன்பள்ளிகள்
- தனியார் சிகிச்சை நிலையங்கள்
- புனருத்தாபன நிலையங்கள்
- சிறுவர் அபிவிருத்தி மையங்கள்
- அரச சார்பற்ற சிகிச்சை நிலையங்கள்
எமது வடபகுதி பிரதேசங்களில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள குறைகளை கவனத்தில் கொண்டு, பெற்றோர்கள் பாடசாலை ஆசிரியர்கள், மருத்துவ துறைசார் தொழில்வாண்மையாளர்கள் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு பற்றி அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமானது ஒன்றாகும். மேலும் பேச்சு, மொழி மற்று விழுங்குவதில் குறைபாடுடையவர்களை இனம் காண்பவர்கள் அவர்களுக்கான சிகிச்சை பெற்றுக் கொடுப்பதற்கும், வழி காட்டுவதற்கும் முன் வர வேண்டும். எமது பிரதேசங்களில் காணப்படுகின்ற பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு குறைவு என்கின்ற காரணத்தினால் எமது பகுதி கொள்கை வகுப்பாளர்கள் வருங்கால திட்டமிடலின் போது வட பகுதியில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். என எதிர்பார்க்கப்படுகின்றது. எமது பகுதியில் தேவைகள் அதிகமாக இருப்பதன் காரணமாக இது அவசரமானதும், அவசியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது ஒன்றாகும்.
ப.கௌரிதாசன்
பேச்சு மற்றும் மொழிச்சிகிச்சையாளர்.
நரம்பியல் பிரிவு – B
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்