எமக்கிருக்கும் மன அழுத்த நிலையை அடையாளம் கண்டு, பொருத்தமான நடவடிக்கை எடுப்பதன் மூலம் வேண்டாத தகாதவற்றை தவிர்த்துக் கொள்ளலாம்.
மன அழுத்தத்தினால் ஏற்படும் அறிகுறிகள்
- உடலில் ஏற்படும் மாற்றங்கள்
- மயக்கம், தலைச்சுற்றல்
- காதில் தொடர்ந்து ரீங்கார ஒலி கேட்டல்
- உடல் நடுக்கம்
- மார்பில் எரிச்சல் உலைச்சல்
- பேதியாதல் அல்லது மலச்சிக்கல்
- மனம் அல்லது உணர்ச்சி அறிகுறிகள்
- உறக்கம் வராமை
- கவலை அல்லது அச்சம்
- சோர்வு அல்லது தாழ்வு மனப்பான்மை
- ஒவென அழ வேண்டுமென்ற உணர்வு
- முன்கோபம்
- சிக்கல்களுக்கிடையே சிந்திக்க முடியாமை
- சிக்கல்களை தீர்க்க இயலாமை
மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகள்
- மனவியல் ரீதியான விளைவுகள்
சரியான முறையில் சிகிச்சை பெறாதபோது பலவிதங்களில் இவை வெளிப்படுகின்றன. தீர்க்கப்படாத மனவியல் பிரச்சினைகள் மன நிலையையும் பிறகு உடல் நிலையையும் பாதிக்கும்.
- கவனம் செலுத்துவதில் சிரமம்
- முடிவெடுப்பதில் சிரமம்
- தன்னம்பிக்கை இழத்தல்
- அடக்கமுடியாத ஆசைகள்
- தேவையற்ற கவலைகள், படபடப்பு
- அதீத பயம்
- பயத்தால் பாதிப்புகள்
- செயல்காட்டு விளைவுகள்
பாதிக்கப்பட்ட நபர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதில் வெளிப்படுகின்றன.
- அதிகமாக புகைப்பிடித்தல்
- நரம்பியல் தூண்டல்கள்
- அதிகமாக மது அல்லது போதைப் பொருள்கள் பயன்படுத்துதல்
- பற்களை கடித்தல், முடிகளை இழத்தல் போன்ற பழக்கங்கள்
- ஞாபகமறதி
- விபத்துக்குள்ளாதல்
- முரட்டுத்தனமான வன்முறை செயல்களுக்கு தூண்டப்படுதல்
செயல்பாட்டு விளைவுகள் அபாயகரமானவை என்பதோடு சமூக, தனிமனித உறவுகளை பாதிக்கக் கூடியவையுமாகும். தனிமை, வறுமை, சோகம், அழுத்தம் விலக்கி வைக்கப்படுதலால் ஏற்படும் விரக்தி போன்ற விளைவுகள் நீடித்து இருப்பது மட்டுமன்றி, சாதாரண சளி முதல் எய்ட்ஸ் வரையான வைரஸ் தாக்குதல்களுக் கெதிரான நோய் எதிர்ப்புத் திறனையும் குறைக்கின்றன.
ஹார்மோன்கள், மூளையில் உள்ள நரம்பு மண்டல கடத்திகள், பிற சிறு அளவிலான இராசயனங்கள், முக்கிய விளை ஊக்கிகள் உடல் செயல்பாடு ஆகியவற்றை சில வகை மன அழுத்தங்கள் உண்டாக்குகின்றன.
மன அழுத்தம் தொடர்பான சில நோய்கள்
- வயிற்று நோய்கள்
- போதைக்கு அடிமையாதல்
- ஆஸ்த்துமா
- களைப்பு
- படபடப்பு, தலைவலி
- இரத்த அழுத்தம்
- தூக்கமின்மை
- வயிற்று ஜீரணக் கோளாறுகள்
- இருதய நோய்கள்
- மனநிலை பாதிப்பு
- உடலுறவில் செயல்பட இயலாமை
- சொரியாசிஸ் படை அரிப்பு உணர்ச்சியற்ற தோல் போன்ற தோல் வியாதிகள்
மன அழுத்தத்தை சமாளித்தல்
- சூழ்நிலையை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்
- உங்கள் எண்ணங்களை தேக்கி வைக்காமல் வெளிப்படுத்தி விடுங்கள்.
- சமரசம் செய்து கொள்ள தயாராக இருங்கள்
- உங்கள் நிலையில் உறுதியாக இருங்கள்
- உங்கள் நேரத்தை சரியாக நிர்வகியுங்கள்
உங்களால் மாற்ற இயலாததை ஒப்புக்கொள்ளுங்கள்
சிலவகை காரணிகள் தவிர்க்க முடியாதவை பிரியமானவர்களின் சாவு, கொடியவற்றை தடுக்கவோ மாற்றவோ இயலாது. அவ்வாறான சூழல்களில் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதே சிறந்த அழுத்தம் தவிர்க்கும் முறை இது சிரமமாக இருந்தாலும் நீண்டகாலப் போக்கில் எளிதாக கைவசப்படும்.
- முடியாதவற்றை கட்டுப்படுத்த முயல வேண்டும்.
- தீதிலும் நன்மையை காண்பீர்
- உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் மன்னிக்கப் பழகுங்கள்.
மன அழுத்த காரணியை மாற்றியமையுங்கள்
- பிரச்சினைகளை மாற்றியமையுங்கள்
- முழுச் சூழ்நிலையை கவனியுங்கள்
- உங்கள் குணங்களை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்
- நேரிமையான எண்ணம் கொள்ளுங்கள்
சூழ்நிலையை மாற்றுங்கள்
- மன அழுத்த காரணியை நோக்குங்கள்
- மன அழுத்த காரணியை மாற்றியமையுங்கள்
புத்துணர்ச்சி பெற ஏற்ற ஆரோக்கியமான வழிகள்
- நடைபயிற்சிக்கு செல்லவும்
- இயற்கையில் அதிக நேரத்தை செலவிடவும்
- நல்ல நண்பரை அழைத்து பேசுங்கள்
- நன்கு வேலை செய்து பதற்றத்தைக் குறையுங்கள்
- உங்கள் புத்தகத்தில் எழுதுங்கள்
- நீண்ட குளியலில் ஈடுபடவும்.
- மணமுள்ள மெழுகுவர்த்திகளை ஏற்றுங்கள்
- சூடாக காபி அல்லது தேநீர் பருகவும்.
- செல்லப்பிராணிகளுடன் விளையாடவும்.
- உங்கள் தோட்டத்தில் வேலைகள் செய்யவும்
- உடலுக்கு மசாஜ் செய்துகொள்ளவும்.
- நல்ல புத்தகங்களை படியுங்கள்
- நல்ல இசையைக் கேளுங்கள்
- நகைச்சுவை நிகழ்ச்சிகளை பாருங்கள்
- பொழுது போக்குக்கு நேரம் ஒதுக்குங்கள்
பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கு உங்கள் அன்றாட வேலைத்திட்டத்தில் இடமளியுங்கள். இந்த நேரத்தில் பொறுப்புகளை மற்ந்து புத்துணர்வு பெறுங்கள்.
- பிறருடன் பழகுங்கள் – நேரிடைச் சிந்தனையுள்ள மக்களுடன் பழகுங்கள், இதனால் எதிர்மறை எண்ணங்களைக் குறைக்க முடியும்.
- நீங்கள் விரும்பும் ஏதாவதொன்றைத் தினமும் செய்யுங்கள் – உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நடவடிக்கைகளில் ( உதாரணமாக இசை, பிரயாணம் போன்றவை) ஈடுபடுங்கள்
- நகைச்சுவை உணர்ச்சியை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – உங்களை நீங்களே கேலி செய்து கொள்ளும் நிலைக்குவர முயலுங்கள் சிரிப்பு பல வழிகளில் மன இறுக்கத்தைக் குறைக்கின்றது.
A.M.Washim Akram – 2008/Fm/108
A.G.M. Mafaz – 2010/Fm/27
W.M.Virajin – 2010/Fm/22