செய்முறை
வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, ஆகியவற்றை சிறுசிறுதுண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். தர்பூசணியைக் கழுவி, விதைகளை நீக்கி விட்டு அதனையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மாதுளம்பழங்களை சுத்தம் செய்து அவற்றையும் இதனுடன் சேர்த்தல், பிறகு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகுத்தூளைத் தூவி கிளறி விட வேண்டும். பின் கொத்தமல்லி இலையைத் தூவி சாப்பிடவும்.
தேவையான பொருட்கள்
| தர்பூசணி | 500 கிராம் |
| வெள்ளரிக்காய் | 250 கிராம் |
| தக்காளி | 250 கிராம் |
| மாதுளம்பழம் | 1 |
| வெங்காயம் | 250 கிராம் |
| மிளகு தூள் | தேவையான அளவு |
| உப்பு | தேவையான அளவு |
| கொத்தமல்லி இலை | தேவையான அளவு |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வன்.குஞ்சரநாதன் ரமேஷ்


